Latest News

கடவுள் செய்தல்

நான், என்னை ஞானி, தீர்க்கதரிசி, சாமி அல்லது சாமியார், ஏசு, புத்தர், சாரகா, ஓஷோ என்றெல்லாம் மிகைப்படுத்தி நினைத்துக்கொண்டதில்லை. ஆனால் அவர்களெல்லாம் என்னைப்போலவே ஒரு பெண்ணின் துணையோடுதான் இறைவனை அணுகி, உணர்ந்திருக்க முடியும் என்பதை மட்டுமே நிச்சயமாக நம்புகிறேன்.
அது ஒரு பேரின்பப் பெருங்கடல். அதன் மறுபுறம்தான் இறைவனின் இருப்பிடமான வெளி. சேர்ந்து முடித்தபின் எல்லாமும் ஒன்றுதான்.  காதலியின் கைகளின் உதவியோடுதான் காமம் என்ற அந்த ஆற்றைக் கடந்து  அந்தப் பிறவிப் பெருங்கடலையும் நீந்திக் கடக்கமுடியும். நீந்தத் தெரியவில்லையானால் மூழ்கிவிடுவோம், காமத்தினுள் மறுபடியும்.  உயிர் நான், உடல் நீ. அப்படித்தான் இறைவனை சென்றடைய முடியும். தனியாக, உயிர் மட்டுமோ, உடல் மட்டுமோ மதங்கள் சொல்வதுபோல் இறைவனை சென்றடைய முடியவே முடியாது. எத்தனை கோவில்களுக்கோ ஸ்தலங்காளுக்கோ சென்றாலும் இறைவனை தொடக்கூட முடியாது. ஆனாலும் அதனினுள்தான் நாமும் தொங்கிக்கிடக்கிறோம். அது முழுமையாக காதலும் காதலியும் சம்பந்தப்பட்டது. ஆனாலும் அது செக்ஸ் அல்ல. அப்படி அதை குறுகிய வட்டத்தினுள் அடைத்துவிடவும் முடியாது. அதனினைத் தாண்டியும் புனிதமானது. அன்பு செய்தல். அதைச் சரியாகப் புரிந்தவர்கள் செய்வது எதுவும் தவறாகிவிடுவதில்லை.
அது விந்துநாத சக்தியினை வெளியேற்றுதல் சம்பந்தமானது அல்ல. அது அதை உள்ளுள் சுற்றிச்சுற்றி சுழலவைக்க நடத்தும் நிகழ்ச்சி. அங்கு காலம் இல்லை. மறைந்துவிடுகிறது. அது முழுநேரமும் கலவிசுகத்தில் மூழ்கிக்கிடப்பதற்க்கு ஒப்பானது. செக்சில் அதை ஒரு நிமிடம் தொட்டுவிட்டு திரும்ப வந்துவிடுகிறோம்.
சரியாக புரிந்துகொள்ள வில்லையானால், மறுபடியும் மறுபடியும் காமம் என்கிற ஆற்றினுள் விழுந்து தத்தளித்துக் கொண்டேகிடப்போம். 
அதனால்தான் சாமியார்களாக அவதரிப்பவர்கள் தவறித்தவறி  நழுவி விழுந்துகொண்டே இருக்கிறார்கள். விழுந்துவிட்டார்கள் என்பதாலேயே அவர்கள் இறைவனை உணரவில்லை என்றும் பொய்யானவர்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. புத்தரும் ஏசுவும்கூட தியானத்தில் அவர்களின் கற்பனைக் காதலிகளை நினைத்தே கலந்திருப்பார்கள். ஆதியில் பிரிந்தது, இணைவதுதான் அவைகளின் இலக்கு. இணைந்தபின் பிரிவில்லை.
இதுதான் இறைநியதி. தியானநிலை. இறைத்தன்மையின் வெளிப்பாடு. கடவுள்.

Follow by Email

Recent Post