"சூப்பர்" செடிகள்!

"அட அட அட.. என்ன வெயில், ஒடம்பெல்லாம் எரியுதப்பா..." இப்படித் தான் பெரும்பாலானோர் இன்று தமிழ் நாட்டில் தெருவில் இறங்கி மதியம் நடந்தால் சொல்வார்கள். நீங்களும் தானே?

ம்ம்.. குடை இல்லாமல் வெளியில் செல்வதே கடினம் தான். நமக்கு வெயில் அடித்தால் குடை பிடித்துக் கொள்வோம்.ஆனால், இந்த மரம் செடி கொடிகள் எல்லாம் எவ்வளவு பாவம்? வெயில் எவ்வளவு உக்கிரமாக அடித்தாலும் அது நின்று தான் ஆகவேண்டும். :( ஓடி ஒழிய முடியாது :( பாவம் தானே?

அதுவும் மழையே இல்லை என்றால் இந்தச் செடிகளின் நிலை? வாடி வதங்கி இறக்க வேண்டியது தான்  :( இதற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா உங்களுக்கு? தோன்றுதா? அட, அதுக்காக கொடைய தூக்கிட்டு செடிக்குப் போய் புடிக்க முடியுமா? ம்ம்ஹும் முடியாது. அப்போ இதுக்கு என்ன தான் வழி?

இது எல்லாத்துக்கும் காரணம் "புவி வெப்பமயமாகுதல்" (global warming) . இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான். இப்போ நான் புவிவெப்பமயமாகுதல் பத்திப் பேசப் போறதில்ல.  அப்போ என்னதான் பேசப் போறேன்? படிங்க தொடர்ந்து.

"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப நல்லவன்டா...", இந்த வசனம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இதே மாதிரி, "எவ்வளவு வெயில் அடிச்சாலும் தாங்கும், ஒரு சூப்பர் செடியைக் கண்டுபுடிச்சிருக்காங்க!"

ஆமா, இந்தச் செடி எவ்வளவு மோசமான நிலையிலும் வளரும். வெயிலோ, பனியோ இதால தாங்க முடியும்.

"டைச்சந்திலியம்"  (Dichanthelium lanuginosum)  என்று ஒரு வகையான புல் வகை இருக்கிறது. இது எந்த வகையான வெப்பத்திலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. இதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில், இதன் இந்த வெப்பம் தாங்கும் சக்திக்குக் காரணம் "மைக்ரோ பயோம்" என்று கண்டுபிடித்துள்ளார்கள். 

மைக்ரோ  பயோம் - அப்படின்னா?
Dichanthelium lanuginosum
இது "பாக்டீரியா(bacteria), வைரஸ்(virus) மற்றும் பூஞ்சை(fungus) இவை மூன்றும் சேர்ந்த அடுக்கு எனலாம். இது  டைச்சந்திலியம் வகை புற்களின் வேர்களில் வளர்கின்றன. இவை அந்த புற்களில் இருந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டு, அந்தப் புற்களுக்கு எந்த வகையான சூழலிலும் (அதிக வெப்பம், குளிர்) வளரும் சக்தியைத் தருகின்றன.

கோதுமையில் "மைக்ரோ பயோம்" :

இந்த மைக்ரோ பயோமை தனியாகப் பிரித்து கோதுமை மணிகளில்(விதைகள்) தெளித்து, பிறகு இந்த கோதுமையை பயிரிட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தது போலவே கோதுமை பயிர்களும் எந்த வகையான சூழலிலும் (அதிக வெப்பம், குளிர்) வளரும் சக்தியைப் பெற்றன. மேலும் இந்த முறையில் மைக்ரோ பயோம் பயன்படுத்து பயிர் செய்வதால் எந்த விதமான நச்சு விளைவும் கோதுமை பயிர்களில் ஏற்படவில்லை, நாம் எப்போதும் போல, இந்த கோதுமைகளையும் பயமின்றி உண்ணலாம் :) :) 

இனி வெயிலடித்தாலும் குளிரடித்தாலும் இட்லி தோசை இல்லாட்டியும், சப்பாத்தி கெடைக்கும் :) :) :)

இந்த முறையை இதர பயிர்களிலும் பயன்படுத்திப் பார்க்கலாம் தானே?

----------------------

10 comments:

அப்படிப் போடு..! அப்போ வெயிலே அடிச்சாலும் கோதுமை விளைச்சல் கொடுக்கும் இல்லையா? நல்ல தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

இது மாதிரி அனைத்து உணவு பயிர்களிலும் செயல்படுத்தினால் நாடு செழிக்கும்.. !

/// இனி வெயிலடித்தாலும் குளிரடித்தாலும் இட்லி தோசை இல்லாட்டியும், சப்பாத்தி கெடைக்கும்... ///

இது போதுமே... நல்ல தகவல்...

ஆம், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். ஆராய்ச்சி செய்து முடித்திருக்கிறார்கள்.

நடைமுறைக்கு வந்தால் நன்றாகத் தான் இருக்கும், குடிக்க தண்ணீருக்கு எங்கே போவது?

பயனுள்ள பதிவு,
எப்படியும் எதிர்காலத்துல தண்ணிர் இல்லாத விவசாயம் தான் நடக்க போகுது.

தண்ணீர் இல்லாத விவசாயம்.. :) நடந்தாலும் நடக்கும்!

தண்ணீர் இல்லாம விவசாயம் பண்ணா அதிசயம் தான், ஆனா நான் தண்ணீர் செழிப்பான பாபநாசம்ல தண்ணீர் கூடவே (குடிக்குற தண்ணீர்ங்க..ஹி ஹி) வளர்ந்தேன், ஆனா இப்போ, இங்க கூட குறைஞ்சு போச்சு..

நல்ல பதிவு சகோதரி... வாரம் ஒருமுறை உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது..

:( ஆமாம் :( குறைந்து தான் விட்டது

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More