இலவச கூ(வீ )டுத் திட்டம்

     என்னடா இது ...நீயும் ஆரம்பித்து விட்டாயா? இலவச இம்சைகளை என்று ஓடிவிடாதே என் தமிழ் உணர்வே...
    
    என்ன செய்ய, " இலவசம் என்றால்  இறந்தவனும் இளிப்பான் " என்பது புது மொழியாகி விட்டதே...!
     
 மக்களே...நமக்கான திட்டம் என்று நினைத்தீரா...ஏமாளி நீங்கள் தான் போங்கள் ,நாம் பல சமயங்களில் ஏ(கோ)மாளியாய்  தானே இருக்கின்றோம்.
     
 நம் அரசு வீடு கட்டி கொடுப்பது போலே நாம் கூடு கட்டி கொடுக்கப் போகிறோம். யாருக்கு என்கிறீர்களா?

 சின்னச் சின்ன செல்ல சிட்டுகளுக்குத்தான்... சிட்டுகளுக்கா...!? அட  சிட்டு குருவிகளுக்குங்க...

  அலைந்த திரியும் அஞ்ஞான உலகில் அலை பேசி பயன்பாடால் அழிந்து வருகின்றது சிட்டுகள்,மரங்களையும் காணோம்.
"என்ன மரம் இல்லையா...?. நாங்கள் தான் பிளாஸ்டிக் மரம் வைத்து உள்ளோமே" என்று சண்டை போடாதீர் என்னிடம்.

 நாம் வசிக்கும் இடங்களிலாவது சிட்டுகளுக்கு கூ(வீ )டு கட்டி கொடுக்கலாமே.
     
                                         வாங்க செய்யலாம் கூடுகளை சிட்டுக்கு...

தேவைகள்:-

          * ஒரு மீட்டர் சணல்,அல்லது நூல் 
          * ஒரு நீள் வாக்கான அட்டைப்பெட்டி நலம் அல்லது பழைய பிளாஸ்டிக்         
             பாட்டில் 
          * ஒரு கத்தி, ஒரு ஊசி

செயல்முறைகள்:-

         * அட்டைப்பெட்டியின் நடுவில் ஒரு வாசல் போன்று வெட்டவும்.
         * அவ்வளவுதான் சிட்டுகளுக்கான கூ(வீ )டு தயார்.
         * அதனை ஒரு நன்றாக நிழல் படும் படியான, ஆள்நடமாட்டம் இல்லாத  
            இடத்தில் அசையாதபடி சணலால் கட்டிவைக்கவும்.

இதோ மாதிரி  கூடு:


              அப்புறம் என்ன ,உங்கள் அன்பினை ஏற்று சிட்டார் வந்துவிடுவார்.
          நான் என் வீட்டில் அமைத்து விட்டேன்.பதிவர்கள் முயற்சிக்கலாமே...

                            "வீடு கட்டி வாடகைக்கு விடுகிறோம்
                   கூ(வீ )டு கட்டி வாழ்வளிப்போமே சிட்டுகளுக்கு..."  


10 comments:

ஏம்ப்பா,, சிட்டுக்குருவி இன்னும் இருக்கிறாதா..?


கட்டிவைத்த கூடு,,
காட்டில் வைத்த விறகாய்
பயனற்று போயினவே,,

விஞ்ஞானத்தின் போர்வையில் விளைநிலங்களில்லாம் போயிற்று..

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதுதான், அழிந்தவை அழிந்தவைதான், அழியாதவைகளை காப்பாற்றும் ஒரு சிறு முயற்சி,
எ.கா :எங்கள் ஊர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராமசுப்பு அவர்கள் வீட்டில் கூட \
தொங்கும் மின்விளக்கில் இருக்கும் கூடு கலைந்து விடக் கூடாதென்று அதனை போடாமலே வைத்துள்ளார், நானும் என் வீட்டில் கூடு அமைத்துளேன், குருவிகள் வசிக்கின்றன...
மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற அவா. காரணம் நான் இயற்கையோடு இயைந்த சூழலில் வளர்ந்தவன். எல்லாம் ஒரு பாசம் தான்

நல்ல செயல்முறைகள் நண்பரே...

எங்கள் ஊரில் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது...

நானும் முதல் மரியாதை சிவாஜி மாதிரி பாட்டுப்பாடி பார்த்தேன்... (ஏ குருவி... சிட்டுக்குருவி... என்று) ...ம்ஹீம்... ஒரு வேலை இப்படி பாடுவதால் வரவில்லையோ என்னவோ... ...ம்...

நீங்களும் அக்கூட்டினை செய்து பாருங்கள் அண்ணா,
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு தானே...
நன்றி

எங்க வீட்டுக்கு அருகே மரத்தில் சிட்டுக்கள் இன்றும் உள்ளன :)

அருமை கண்மணி, நீங்கள் செய்து பார்த்தல் உங்கள் வீட்டுக்கே வந்து விடும்

காணாமல் போன சிட்டுக்குருவிகள் என்று சமீபத்தில்தான் நான் ஒரு கட்டுரை எழுதினேன். நீங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் கூடு கட்டிக் கொடுத்தல் காணாமல் போனவை திரும்பி வரும் என்று கூடு கட்டும் முறையையும் மிகத் தெளிவாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் செழியன்!
அன்புடன்,
ரஞ்ஜனி

நன்றி அம்மா, உங்களை போன்றோர் பாராட்டுதலால் தான் நான் எழுதி கொண்டு இருக்கிறேன்.
சும்மா என் கருத்துகளை நிரந்தரமாக குறித்து வைக்க பதிவு போட்டவன் தான் நான், உங்களை போன்றோர் தரும் பின்னுட்டங்கள் தான் எந்த சிறு குழந்தைக்கு உற்ச்சாக அரு மருந்து, நன்றி அம்மா ...

அருமையான முயற்சி உங்கள் மனிதநேயம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தங்கள் முயற்சி வெற்றி பெற !....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More