மணிராஜ்: ஆசிரியர் தின வாழ்த்துகள் !


Teacher's Day Scraps

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்..
கல்வி போதிக்கும் ஆசிரியர் மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் வைத்து ஆராதிக்கப்படுபவர்...
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனமும் திரியும் 

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே..

award gif
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க 
உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" 

இத்தனை சிறப்பு வாய்ந்த கல்விச்செல்வத்தை நம் குழந்தைச் செல்லங்களுக்கு வழங்கி சான்றோனாக்கி உலகுக்கு வழங்கி கௌரவப்படுத்துபவர் ஆசிரியர்...

அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர்.

  ஆசிரியர் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறார்..

ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை
பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு.இராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
மனிதனை மனிதனாக, உருவாக்கும்  உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள்

மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்

ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது.

பயிற்றிப் பல கல்வி தந்து பாரில் உயரவைப்பவர் ஆசிரியர்...
Teacher's Day Scraps
 வருங்கால தலைமுறையினரான மாணவர்கள்,  வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம்.

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், பாடப்புத்தக அறிவும்,  பல்துறை பரந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியர் பணி போற்றத்தக்கது...

மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை
வெளிப்படுத்துவதே கல்வி.
உடல் உள்ள ஆன்மாவின் ஒருமைப்பட்ட வளர்ச்சியே உண்மையான கலவி..
stacking booksReading A Book  PowerPoint animationStick Figure Walking Reading Book PowerPoint animation

கற்றல்-கற்பித்தல் என்பதை தாரக மந்திரமாய் கொண்ட, சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழும் ஆசிரியர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம்.
Teacher's Day ScrapsTeacher's Day ScrapsAnimatedParrotWelcomeKims.gif image by jojo49_01Homework TimeBack to SchoolBad DayReadingComputer LabPlace Holderdr.sarvepalli radhakrishnan6 comments:

இன்று தொழிற்களம் மேலும் சிறப்பு பெறுகிறது...

தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

ஆசிரியர் தினத்தில் நம் கல்வி கண்களைத் திறக்கும் ஆசிரியர்களுக்கு மிகச்சிறந்த அர்பணிப்பு இந்த வாழ்த்துக்கள்!

பாராட்டுக்கள் இராஜராஜேஸ்வரி!

நம் வாழ்வை செழிக்க செய்த ஆசிரிய- ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....

கடவுள் உங்கள் ஆயுளை நீடிக்க செய்ய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்...

தொடரட்டும் உங்கள் சேவை...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
இன்று தொழிற்களம் மேலும் சிறப்பு பெறுகிறது...

தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

Ranjani Narayanan கூறியது...
ஆசிரியர் தினத்தில் நம் கல்வி கண்களைத் திறக்கும் ஆசிரியர்களுக்கு மிகச்சிறந்த அர்பணிப்பு இந்த வாழ்த்துக்கள்!

பாராட்டுக்கள் இராஜராஜேஸ்வரி!//

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

தொழிற்களம் குழு கூறியது...
நம் வாழ்வை செழிக்க செய்த ஆசிரிய- ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....

கடவுள் உங்கள் ஆயுளை நீடிக்க செய்ய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்...

தொடரட்டும் உங்கள் சேவை...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்.../


பிரார்த்தனைகளுக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More