நடத்துனர்களின் நடத்தைகளும், பயணிகளின் பரிதவிப்பும்.

சென்னை பேருந்துகளில் பணிபுரியும் கண்டக்டர்களின் இம்சை வர வர அதிகமாகிக் கொண்டே போகின்றது. அநேகமாக தமிழ்நாட்டிலேயே நடத்துனர்களுக்காக பேருந்தில் இருக்கை உள்ளது சென்னை பேருந்துகளில் மட்டும்தான் என நினைக்கின்றேன். நான் சொல்வது நகரப்பேருந்துகளில். பேருந்து நடத்துனர் பின்பக்கத்தில் உள்ள தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டு எழுந்து வரவே மாட்டார். தப்பித்தவறி முன்பக்கம் ஏறி டிக்கெட் எடுக்கவேண்டுமென்றால் நாம் தான் பின்னால் சென்று அவர் இருக்குமிடம் போய் டிக்கெட் வாங்கவேண்டும். அல்லது யாரிடமாவது பாஸ் செய்ய வேண்டும்.

இப்படித்தான் சென்ற வாரம் எனது நண்பர் ஒருவர் பஸ்ஸில் 100 ரூபாய் ஒரு கொடுத்து ஒரு பெண்ணிடம் ரூ.5 டிக்கெட் வாங்குமாறு கூறினார். சிறிது நேரத்தில் ரூ.5 டிக்கெட் வந்தது. மீதி சில்லறை கேட்டால், இறங்கும்போது கண்டக்டர் தருவதாக கூறியதாக கூறினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டார். நண்பர் இறங்கும்போது மீதி சில்லறையை நடத்துனரிடம் கேட்டதற்கு, இன்று யாருமே நூறு ரூபாய் தரவில்லையே என கூறியதோடு அல்லாமல், நண்பரின் டிக்கெட்டையும் வாங்கி சோதனை செய்தார். அப்போதுதான் தெரிந்தது அந்த டிக்கெட் வேறு ஏதோ பேருந்தின் டிக்கெட் என்று. வேறு வழியில்லாமல் நூறு ரூபாயையும் இழந்து வேறு டிக்கெட்டையும் எடுக்க நேர்ந்தது நண்பருக்கு,/

இதெல்லாம் நடத்தனர் நேரில் வந்து டிக்கெட் கொடுத்திருந்தால் ஏற்பட்டிருக்குமா? சரி கூட்டமாக இருக்கும்போதுதான், தனது இருக்கையில் உட்கார்ந்து கொள்கிறார் என்றால் , கூட்டமே இல்லாமல் காலியாக இருக்கும்போது கூட உட்கார்ந்து கொண்டே நம்மை நோக்கி டிக்கெட் வாங்கியாச்சா? என்று கேள்வி எழுப்புவார். 

நடத்துனர்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் மற்றொரு பிரச்சனை சில்லறை பிரச்சனைதான். பல நேரங்களில் சில்லறை இல்லாவிட்டால், இரவு நேரம் என்பதை கூட பார்க்காமல் பயணிகளை இறக்கிவிடும் நடத்துனர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற மனிதாபமற்ற செயல்களை நடத்துனர்கள் தவிர்க்கலாம்.   அடுத்தது, சில நடத்துனர்கள் பயணிகள் பேருந்தில் ஏறிவிட்டார்களா? இல்லையா என்பதைக்கூட சரியாக பார்க்காமல் விசில் அடிக்கின்றனர். பேருந்துக்கு கீழே நான்கைந்து பேர் நிற்பார்கள். அதற்குள் விசில் அடித்து பயணிகளை அலற வைக்கும் போக்கு நடந்துகொண்டேதான் இருக்கின்றது.

மேலும், பயணிகள் தரப்பிலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை இந்த நேரத்தில் ஒத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம் காலேஜ் மாணவர்கள் எல்லாம் திருந்திவிட்டார்கள். பெரும்பாலும் பேருந்தில் ஏறியவுடன் உள்ளே வந்துவிடுகிறார்கள். ஆனால் இந்த பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. பேருந்து கிளம்பிய பின்னும், கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் பேருந்தின் கூடவே ஓடிவந்து பின்னர்தான் ஏறுகின்றனர். இதில் என்ன கிடைக்கின்றதோ அவர்களுக்கு என்பது தெரியவில்லை. 

பேருந்து என்பது அரசு, பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் ஒரு பேருதவி வாகனம். இதை அறிந்து பயணிகள் முடிந்த அளவிற்கு தகுந்த சில்லறையோடு சென்று, ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செல்ல வேண்டும். அதுபோல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும், பயணிகளையும் ஒரு சக மனிதர் போல நடத்தி, மனிதாபமான  மனதோடு பணியாற்ற வேண்டும்.

3 comments:

இப்படியும் நடக்கிறதா?

வருந்தத்தக்க பதிவு...

TRUE BUT NOT ALL CONDUCTOR SAME...SOME PERSONS LIKE THAT ...WHAT HE CAN DO..IN INDIA ONLY RULES ALL REVERSE IN FOREIGN COUNTRY...NO STANDING NOT ALLOWED 52CAPACITY MEANS 52 PERSON CAN TRAVEL HERE...THIS IS GOVT RULES INDIAN GOVT VERY WORST....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More