நான் பதிவர் அறிமுகம் - சாமியின் மன அலைகள்

வணக்கம் தோழமைகளே! இன்று கணினி பழுதின் காரணமாக மிகத் தாமதமாக நான் பதிவர் அறிமுகத்தை அறிமுகப்படுத்துகிறோம் தோழமைகளே....மன்னிக்கவும்...

''போற்றுவார் போற்ற புழுதி வாரித் தூற்றுவார் தூற்ற என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்னும் முத்திரையை தன் வலைப்பூவில் முத்திரையாய் பதித்த நமது மூத்த தமிழ் பதிவர் திரு.பழனி.கந்தசாமி அவர்களை தான் இன்று தொழிற்களம் குழு பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது...
                                                           சாமியின் மனஅலைகள்

2009-ம் ஆண்டு தன் முதல் பயணத்தை தொடங்கிய ''சாமியின் மன அலைகள்'' இன்று பல சதங்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறார்.

''நான் வென்று விட்டேன்'' என்னும் தலைப்பின் கீழ் படைத்த படைப்பு எளிமையான விளக்கத்துடன் மிக அருமை...

மும்பைக்கு போன டூர் பற்றிய இவருடை நகைச்சுவை கலந்த படைப்பு, படிப்பவர் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்றாட வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை, இயன்பான வார்த்தைகளால் மிக எளிமையாக விளக்குவதில் வல்லவர்...

அதிலும் பாருங்க பரதம் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம்...அதை பற்றிய இவரின் பதிப்பு நாட்டிய அரங்கேற்றம் மிகவும் அழகான, ரசனையான படைப்பு...

இதை போன்ற பல சுவையான தலைப்பில், பல சுவாரஸ்யமான பதிப்புகளை படைத்து வரும் இவர். இது போன்ற பல எண்ணற்ற பதிவுகளை பதிய வேண்டும்.

சக பதிவர்கள் போடும் தூண்டிலையும், மிக நாசூக்காக கையாள்பவர். பதிலடி கொடுப்பதில் கில்லாடி...

தனது பதிவின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். பழக இனிமையானவர்.

இவருடைய வலைப்பூவிற்கு தவறால் சென்று இவரின் படைப்புகளை கண்டு மகிழுங்கள் தோழமைகளே....

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்.

4 comments:

பழனி கந்தசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

பல சுவையான தலைப்பில், பல சுவாரஸ்யமான பதிப்புகளை படைத்து வரும் இவர். இது போன்ற பல எண்ணற்ற பதிவுகளை பதிய வேண்டும்.


ஐயா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

நகைச்சுவையுடன் பதிவுகள் + கருத்துக்கள் சொல்வதில் சார் தான் First...

வாழ்த்துக்கள் சார்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More