நான் பதிவர் அறிமுகம்

வணக்கம் தோழமைகளே...

ஆங்கிலப் பதிவிற்கு இணையாக இன்று பல தமிழ் பதிவர்களும் நமக்கு பொக்கிஷமாக கிடைத்துள்ளனர்.

ஆனால் அவர்களை பற்றி நமக்கு முழுமையாக தெரிவதில்லை, எனவே தினம் ஒரு பதிவர் என்ற தலைப்பின்கீழ் இனி நாள்தோறும் தமிழ் பதிவர்களை அறிமுகம் செய்யலாம் எனத் தொழிற்களம் திட்டமிட்டுள்ளது.

எனவே தமிழ் பதிவுகளை திறம்பட பதிந்து வரும் தமிழ் பதிவர்களே! இனி தொழிற்களம் உங்களை, நீங்கள் எங்கே மறைந்திருந்தாலும் தேடி இந்த உலகத்திற்கு  அறிமுகம் செய்யும் என்பதில் பெருமை  கொள்கிறது...

ஒவ்வொரு பதிவரிடமும் ஏதோ ஒரு தனித் திறமை உள்ளது, அவர்கள் சிந்தனை, வாக்கிய அமைப்பு, சொல்லலகு என்று பல திறமைகள் மறைந்துள்ளன. எனவே அவற்றை வெளிகொண்டு வருவது தான் முக்கிய நோக்கம்...

ஆகவே....இன்று காத்திருங்கள்......யார் அந்த பதிவர்?????இந்த விளையாட்டு எப்படி இருக்கிறது???

மேலும், உங்கள் மனம் கவர்ந்த பதிவர்கள் பற்றிய குறிப்பை எங்களுக்கு சொல்லுங்கள்..நாங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறோம் அவர்களின் திறமையை....

காத்திருங்கள்....இன்னும் சிறிது நேரத்தில் புதிய பதிவர் வருகையில் உங்களை சந்திக்க வருகிறோம்.....

வணங்கங்களுடன்...

நமது தொழிற்களம்..


9 comments:

மதுமதி அண்ணாச்சிய பத்தி எழுதுங்க....நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் , நன்றி

ஆஹா இது நல்ல விஷயமா இருக்கே. தொடருங்கள் காத்திருக்கோம்

நிறைய பேர் உள்ளார்களே... யாராக இருக்கும்... யாரையாவது குறிப்பிட்டால், மற்றவர்கள் மனது கொஞ்சம் சங்கடப்படுமே... ...ம்... நீங்களே சொல்லிடுங்க... நான் (இந்த மாதிரி) விளையாட்டுக்கு வரலே...

தொழிற்களத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

ஆவணப்படுத்துதல் என்பதே தமிழர்களுக்கு விருப்பமில்லாத ஒரு செயலாக இருக்கிறது .

இந்த இமேஜை உடைச்சு ஆவணப்படுத்துங்க.

தமிழ் 10 டாட் காம் தரவரிசை பட்டியல் -அலெக்ஸா ரேங்க் இப்படி எதையாவது அடிப்படையா வச்சுக்கங்க.

இதை விட அகர வரிசை வில்லங்கமில்லாத வேலை ..

நல்ல முயற்சி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

enna sir!


entha muththai solla...

தமிழர்கள் எந்த விசயத்திலும் சளைத்தவர்கள் அல்ல சார் ,நம் நட்பு வட்டம் பெருகட்டும்

நன்றி தோழமைகளே...

உங்களுடைய இந்த ஊக்கமும் உற்சாகமும் இருக்கும் வரை நிச்சயம் தமிழ் பதிவர்கள் அனைவரையும் இந்த உலகம் அறியும்படி செய்வோம்... யாருடைய மனதையும் புண்படுத்தாமல் நம் பயணத்தை வெற்றி பாதையில் கொண்டு செல்வோம் தோழர்களே...

உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..நிச்சயம் பரிசீலனை செய்கிறோம்...

நட்புடன் ஒன்று கூடுவோம்... நாமும் வளர்த்து மற்றவர்களையும் கைதூக்கிவிடுவோம் தோழமைகளே...

என்றும் நன்றியுடன்...
நமது தொழிற்களம்...

நல்ல ஆக்கப் பூர்வமான முயற்சி ! பாராட்டுக்குரியது !

உண்மைதான். நல்லதொரு முயற்சி. நம் செந்தமிழை கற்றவர்கள் ஏற்றம் பெறவேண்டும் என்ற ஒரு உயர்ந்த எண்ணம். எவ்வளவோ விசயங்களை நம்மவர்கள் அழகு நடையில் தமிழில் எடுத்து சொல்கிறார்கள். அத்தனையும் யாருக்கும் போய் சேர்வதில்லை. இதன்மூலம் இனி இந்த உலகிற்கே தெரியவரும்... அதற்கு இந்த தொழிர்களம் குழுவிற்கு
என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றேன்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More