விண் வெளியில் இருந்தே த்ரியாத்லானில் பங்கு பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்


விண்வெளியில் சர்வ நாட்டு விண்வெளி நிலையத்தை பராமரிக்கும் படை தளபதியாக செயல் படுவதே பெரிய சாதனை. அத்தோடு
 நிற்காமல் பூமியில் நடை பெற்ற ஒரு த்ரியாத்லான் போட்டியிலும் பங்கேற்று உள்ளார் நமது இந்தியா வம்சா வழியை சேர்ந்த விண்வெளி
வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த வார இறுதியில் பூமியில் உள்ள ஒரு நீச்சல் விளையாட்டுப் பகுதியை போன்ற சூழல் ஏற்படும்படியாக சைக்கிள் மிதித்து, ஓடி ஒரு எதிர்ப்பு கருவியை பயன் படுத்தி இந்த போட்டியில் பங்கேற்றார். பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தி பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் உடல் பயற்சிகள் மேற்கொள்ள வசதியாக ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் உடல் பயிற்சி கருவிகள் அமைக்க பட்டிருப்பதால் இந்த போட்டியில் பங்கு பெறுவது எளிதாயிற்று

இதை செய்து முடிக்க பெஞ்ச் பிரஸில் அரை மைல் நீந்துவது போல செயல் பட்டு,  சைக்ளிங் கருவியில் 18  மைல்கள்  மிதித்து, ட்ரெட் மில்லில்  நான்கு மைல்கள் ஓடி இந்த பந்தயத்தை பூர்த்தி செய்தார்.

இவர்    2007  இல் முதன் முறையாக விண்வெளி நிலையத்திற்கு சென்ற போது போஸ்டன் மராத்தானில் பங்கேற்றார். அப்போது  பந்தயத்தை  4  மணி  23    நிமிடங்களில் நிறைவு செய்தார்

என்ன , நம்மால் விண்வெளிக்கே போக முடியவில்லை.இவர் என்னவென்றால் பந்தயத்திலும் கலந்து கொண்டு தூள் கிளப்புராறேன்னு நினைக்கறீங்களா. அவராவது செய்கிறாரே என்று பாராட்டுவோம். என்ன இருந்தாலும் இந்தியர் இல்லையா?

எனது இன்றைய அறிவியல் ஜோக்:


நான் ஒரு சயன்சிஸ்ட்

அதென்ன சயன்சிஸ்ட்?

சயன்டிஸ்ட் னா சண்டைக்கு வராங்க அதான் இப்படி புரியாத மாதிரி

சொல்லிடுறது!
 


3 comments:

நல்ல தகவலுடன் ஹா... ஹா... நன்றி...

புதிய தகவல் மிக அருமை...

ஜோக் ரசிக்கும்படி...

வாழ்த்துக்கள் சகோ...

நல்ல தகவலுடன் சிரிக்கவும் வைத்து இருக்கிறிர்கள்...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More