Latest News

வேவு பார்க்கும் கொசு!




இது கொசுதானே?  இல்லை. இது ஒரு இயந்திரக் கொசு!

வேவு பார்க்கவென்று பயன் படுத்த அமெரிக்க அரசாங்கத்தின் தயாரிப்பில் உள்ள ஒரு மினி ரோபோட். இதை ட்ரோன் ( drone) என்று அழைக்கிறார்கள் . ஒரு காமெராவும் மைக்ரோ போனும் இணைந்த இதை ரிமோட் ஆக இயக்கலாம். உங்கள் மீது பறந்து அமர்ந்து கொள்ளக் கூடியது. கொசு போலவே ஒரு கொட்டு கொட்டி உங்கள்   டிஎன் ஏ மாதிரியை எடுத்துக் கொள்ளக் கூடியது, ரேடியோ அலை அடையாளம்(radio frequency identification- RFID) காட்டும் நானோ தொழில் நுட்பத்தை உங்கள் தோளில்  விட்டு செல்லக் கூடியது. உங்கள் சட்டை மீது அமர்ந்து கொண்டு நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதைக் காட்டித் தரும். உங்களுக்கு அது அமர்ந்திருப்பதே தெரியாது..நீங்களாக கண்டு  பிடித்து உதறி அல்லது பிடுங்கி எரிந்தால் தான் உண்டு. 

 தற்போது அறிவியல் உலகில் நுண் காற்று வாகனங்கள்(micro air vehicle) என்பது முனைப்பான ஆய்வில் உள்ள ஒரு பகுதி. அதன் ஒரு பகுதிதான் இந்த ட்ரோன் . தகவல் சேகரிப்பு , துப்பு துலக்குதல் ஆகியவை இதன் நோக்கம்.  வரும் காலத்தில் எதிரி படைகளின் மீது கும்பலாக ஏவி விட இவற்றை பயன் படுத்தலாம். 

பறவைகளும் பூசிகளும் பறப்பதைப் பார்த்து அது மாதிரி பறக்கக் கூடிய ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்க முயன்றதன் பலனே இந்த இயந்திர கொசு. ரோபோடிக்ஸ் தொழில் நுட்பம் இதில் பயன் படுகிறது. இதில் சில நடை முறை சிக்கல்கள் உண்டு.. உண்மையான பறவைகளும் பூச்சிகளும் கூட இவற்றை விழுங்கி விடக் கூடும். அதை தவிர்க்கும் வண்ணம் இவை அமைக்கப் பெறலாம்

 இன்றைய அறிவியல் ஜோக்:

அவருக்கு ராக்கெட் சயின்ஸ் தெரியும்

அப்படியா அது பிரயோஜனமில்லை.

ஏன் அப்படி?

எனக்கு வேண்டியது பாக்கெட் சயின்ஸ்.

பாக்கெட் சயின்ஸ்?

ஆமாம். பணம் பண்ணும் சயின்ஸ்!

















 

Follow by Email

Recent Post