Latest News

நாய்க் குட்டிகளும் நாமும்! (விர்ச்சுவல் பெட்)

நீங்க படம் பார்த்திருக்கிங்களா? அதாவது திரைப்படம்? தமிழ்... ஆங்கிலம்? எந்த மொழிப் படம்னாலும் சரி. நிறைய படங்கள்ல கதாநாயகி ஒரு நாய்க்குட்டிய வச்சிக்கிட்டு இருப்பாங்க. அழகா புசுபுசுனு இருக்கும் :) :) இனி இது மாற வாய்ப்பு இருக்கு.

நிறைய பேருக்கு நாய்க்குட்டி பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. உங்களுக்கு? புடிக்குமோ புடிக்காதோ நான் சொல்ல வர்றத கேளுங்க.
நாம் செல்லமாக வீட்டில் பிராணிகள் வளர்ப்பதுண்டு. இதில் நாய்க்குட்டிகள் தான் பெரும்பாலானோர் வளர்க்கிறார்கள். எங்க பக்கத்து ஊரில் ஒரு பெண் இருக்கிறார், அவரும் இப்படித் தான் ஒரு அழகான "புசுபுசு" நாய்க் குட்டி வளர்த்து வந்தார். எங்கு சென்றாலும் அவரோடு அந்த நாய்க்குட்டியும் செல்லும். கடைக்கு, கோவிலுக்கு என்று எங்கு சென்றாலும் அந்த நாய்க்குட்டியையும் கூடவே அழைத்துச் செல்வார் அவர். அந்த நாய்க்குட்டி யாருக்கும் எந்தத் தொல்லையும் தருவதில்லை (அப்படி பழக்கி வைத்திருந்தார் அந்தப் பெண்)
அந்த நாய்க்குட்டி மீது அத்தனை காதல் அவருக்கு.

ஏன்? வளர்ப்புப் பிராணிகள் மீது இப்படி அதிகமாக பிரியம் வைப்பது ஏன்? சொல்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்.

வளர்ப்புப் பிராணிகளாக நாய்களைத் தவிர நிறைய வளர்க்கலாம். உங்களுக்கே தெரிந்திருக்கும், பூனை, எலி! குதிரை, கழுதை, ஏன் சிலர் எட்டுக்கால் பூச்சியைக் கூட வளர்க்கிறார்கள்! இப்படி விநோதமாக உங்களுக்குப் பிடித்த விலங்குகள் பறவைகள் என்று எது வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

வளர்ப்புப் பிராணிகளால் உங்களுக்கு தீமைகள் ஏற்படக் கூடும், தெரியுமா?

  • நாய்கள் வளர்த்தீர்களேயானால், அதை உங்களோடு எப்போதும் அருகிலேயே வைத்து, கட்டிக் கொண்டிருந்தீர்களேயானால், அதன் சிறு ரோமங்கள் உங்களது நாசிக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. இதானால் "ஆஸ்த்துமா" போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பெரிதாக பாதிக்கப்படுவர். 
  • சிலர் எந்நேரமும் வளர்ப்புப் பிராணிகளோடே இருப்பார்கள். எந்த வேலையும் செய்யாமல் அவற்றோடே விளையாடிக் கொண்டிருப்பார்கள், இது குறிப்பாக வேலைக்குச் செல்வோர், இன்னும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு "நேரத்தை வீணடிக்கும்"
அட, நான் இதற்காக செல்லப் பிராணிகள் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை, மேலே சொன்ன இரண்டு செய்திகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வளர்ப்புப் பிராணிகளை நாம் செல்லமாக வைத்துக் கொள்ள காரணங்கள் என்னென்ன?

  • அவை மனிதர்களைப் போல நம்மை ஏமாற்றப் போவதில்லை என்று நாம் நினைக்கலாம். நமது தனிமையைப் போக்க, ஒரு துணையாகக் கருதி வளர்க்கலாம்.
  • ஆடு மாடு கோழி என்றால், சிலர் "கறி" சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று கூட நினைத்து வளர்ப்பார்கள்.
  • சிலர் "பெருமைக்காக" வளர்ப்பார்கள். அதாவது விலை உயர்ந்த நாய்கள் வளர்ப்பது அவர்களுக்குப் பெருமை என்று நினைத்து வளர்க்கலாம்.
  • சிறுவர்கள் என்றால் "விளையாடுவதற்கு" நல்ல நண்பனாக எண்ணி வளர்க்கலாம்.
 இன்றெல்லாம் மருத்துவமனைகளில் "மீன்கள் பறவைகள்" போன்றவைகளைக் காண முடிகிறது. இதற்குக் காரணம், அவற்றைப் பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. ஆனால், இன்றெல்லாம் இயற்கையை ரசிக்க நமக்கு நேரமில்லை. 
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்,
அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்ல,
பிள்ளைகள் ரெண்டு வயதிலேயே
பள்ளிக்குச் செல்ல, வீடு
அனாதையாய் நிற்கிறது
பகலெல்லாம்...
 இதில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதெங்கே? அப்படியே வளர்த்தாலும் பாவம் அவை தான்!

இப்பொழுதெல்லாம், "virtual pet" (விர்ச்சுவல் பெட்) என்று விளையாடுவதற்கு கணினியில் வந்துவிட்டன விளையாட்டு மென்பொருள்கள். இதை வைத்துக் கொண்டு எப்படி ஐயா மனஅழுத்தத்தைக் குறைப்பார்கள் இவர்கள்?
அத்தனையும் இயற்கையாய் இருந்தும் செயற்ககையையே அதிகம் விரும்புகிறோம் நாம். அதற்காக,செல்லப் பிராணிகளில் கூடவா?!!

நாய்க்குட்டிகளும் நாமும் இனி கொஞ்ச வாய்ப்புகள் இன்றிப் போகலாம். "ரோபோ"க்களோடு கொஞ்சும் நாளும் வரலாம்! (இதோ இந்தப் படத்தில் இருக்கும் குழந்தை போல!) 

--------
Follow by Email

Recent Post