வாடிக்கையாளர்களை கவர்வது எப்படி?

ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு மிக மிக முக்கியமானது வாடிக்கையாளர்களே. அந்த வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில்தான் நம் தொழிலின் வெற்றி இருக்கின்றது.

வாடிக்கையாளர்கள் மொத்தம் மூன்று வகைப்படும். நம்மிடம் தொடர்ந்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் வாடிக்கையான வாடிக்கையாளர்கள். இவர்களை முதலில் தக்க வைத்துக்கொள்வதில் கவனம் தேவை. இவர் எப்படியும் நம்மிடம்தான் வாங்குவார்கள் என சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், நம் தொழிலின் சறுக்கல் ஆரம்பம் ஆகிவிடும்.  எனவே இவர்கள் தான் நம்முடைய மினிமம் கேரண்டி லாபம் கொடுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்தது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற வாடிக்கையாளர்கள். ரெகுலராக வந்து கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர் திடீரென வரவில்லை என்றால் நிச்சயம் நம்மீது ஏதோ ஒரு குறையை அவர் கண்டுபிடித்துள்ளார் என்று அர்த்தம். எனவே அவர் நம்மை விட்டு விலகியது ஏன் என்பதை கண்டறிந்து, அந்த குறையை நிவர்த்தி செய்ததை அவரிடமே தெரிவித்து, மீண்டும் அந்த வாடிக்கையாளரை கவர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். சில வாடிக்கையாளர்கள் நம்மிடம் உள்ள குறையை நேரில் நம்மிடமே கூறி அதை சரிசெய்ய சொல்வார்கள். இவர்கள் ஒரு ரகம். இன்னொரு ரகம், நம்மிடம் ஏதாவது குறை இருந்தால், நம்மிடம் வருவதை குறைத்துக் கொள்வார்கள் அல்லது நிறுத்திக் கொள்வார்கள். உடனே நாம் சுதாரித்து, நம் குறையை சரிசெய்ய வேண்டும்.  ஒரு வாடிக்கையாளர்தானே போனால் போகட்டும் என்று கவனக்குறைவாக இருந்துவிட்டால், நமது தொழிலுக்கு இறங்குமுகம்தான்.  நம்மிடம் உள்ள ஒரு நல்ல விஷயம் எப்படி புதுவகை வாடிக்கையாளர்களை நமக்கு கொடுக்கின்றதோ, அதே போல நம்மிடம் உள்ள ஒரு குறை, நமது ரெகுலரான வாடிக்கையாளர் பலரையும் நம்மை விட்டு நீங்கச் செய்துவிடும்.

மூன்றாவது வகை வாடிக்கையாளர்கள் நம்மை இன்னும் தெரியாதவர்கள். புதுவகை விளம்பரங்கள் மூலம் தான் இவர்களை கவர வேண்டும். இந்த மூன்றாம் வகை வாடிக்கையாளர்களை நம்மை நோக்கி இழுப்பது சாதாரணமான காரியம் இல்லை. அவர் வேறு ஏதாவது ஒரு கடையில் ரெகுலர் வாடிக்கையாளராக இருப்பார். ஏதாவது ஒரு முக்கிய பொருள், அவர் ரெகுலராக வாங்கும் கடையில் இல்லாத போது, அவர் நம்மை தேடி வருவார். அந்த நேரம்தான் நமக்கு சரியான நேரம், அவர் கேட்கும் பொருளை அவர் எதிர்பார்க்காத விலையில் கொடுத்து அசத்த வேண்டும். அப்போதுதான், வேறு பொருட்களையும் அவரை வாங்கச் செய்ய  முடியும். 

முக்கியமாக தொழில் செய்பவர்களுக்கு பொறுமை, இனிய புன்னகையான முகமலர்ச்சி அவசியம். சிலர் கடைகளில் வியாபாரம் செய்யும் போது எப்போதும் கடுகடுத்த முகத்தோடு இருப்பார்கள். வாங்கினால் வாங்கு, வாங்காவிட்டால் போ என துரத்துவார்கள். வாடிக்கையாளர்களை எப்போதும் வாடிக்கையாளர்களாக பார்க்காமல் ஒரு முதலாளிக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் கொடுத்தால், எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் நம் வியாபாரத்தை யாராலும், அசைக்க முடியாது.

6 comments:

விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி...

அப்படியே ISO வாங்க சொல்லுங்க...

நல்ல பகிர்வு, தொடருங்கள் சகோ,,

நல்ல கருத்துக்கள்

அருமையான கருத்துகள் .. வாடிக்கையாளர்தான் தெய்வம் என காந்தியே சொல்லியுள்ளார்

ம்ம்ம் .. தொடருங்கள் , நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More