உண்மை விளம்பி

சச்சின் இந்தத்தலைமுறையின் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். இதை நடைமுறையில் யாருமே மறுத்திட முடியாது. இதற்கு முன்னும் நிறைய வீரர்கள் இருந்திருக்கிறார்கள். சேப்பல், பார்டர், அப்பாஸ், போத்தம், ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ், கபில், இம்ரான், இன்னும் பலர் இப்படி எல்லோருமே மிகச் சிறந்த வீரரகள்தான். அவர்களெல்லாம் தங்களின் உச்ச தகுதிநிலை விளையாட்டில் இருக்கும்பொழுதே ஓய்வுபெற்றனர். அப்படி அவர்கள் ஓய்வு பெரும் சமயம் ரசிகர்களெல்லாம் கண்ணீர் மல்க அவர்களுக்கு விடைகொடுத்தனர். மனதில் இடம்கொடுத்து இடமும் பிடித்துக்கொண்டனர். பணத்தையும் எவரும் ஒருபொருட்டாய் மதித்ததுமில்லை.
தற்பொழுது பல வீரர்கள் ஓய்வு பெரும் நிலையில் ஓய்வை அறிவிக்காமல், புதிய தலைமுறைக்கு வழிகொடுக்காமல், விளையாட்டிலும் சொதப்பி, அணியையும் தோற்கவைத்து, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, ரசிகர்களிடம் எல்லாம் செருப்பு மாலைகள் பெற்றபின் அணியைவிட்டு வெளியேற்றப்பட்டனர். ரசிகர்களுக்கு வீரர்களின் விளையாட்டு மிகவும் பிடிக்கும்தான். ஆனாலும் நாட்டின் வெற்றிகள் எப்பொழுதுமே அதைவிட முக்கியமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு இடையூறு வரும்பொருட்டு, சச்சின் என்ன யாராயினும், கடவுளாயினும் தூக்கி எறிந்துவிடுகின்றனர்.
மொத்தத்தில் வெற்றியோன்றுதான் மக்களின் ஒற்றை இலக்கு. தோல்வியடைந்தால் சிக்கல்தான். சரி சச்சின் நல்ல ரெகார்ட் வைத்திருக்கிறார், எல்லாமும் சரிதான். அதற்காக புதிய தலைமுறை வீரர்களையும் கருத்தில்கொண்டு வெற்றிக்கு அவர் வழிவகுத்து நிற்கவேண்டாமா?
யோசியுங்கள் சச்சின் அவர்களே. பத்து தலைமுறைக்கான சொத்துக்களும் சேர்த்தாகிவிட்டது. இனி எதற்காக விளம்பரத்திற்கு முக்கியம் தந்து உங்களின் உண்மை முகமிழந்து, உங்கள் முகத்தில் நீங்களே கரி பூசிக்கொள்ளவேண்டும்? சிந்தியுங்கள். ஓய்வை நீங்கள் மட்டுமே முடிவு செய்யமுடியும் என்றும், வேறு எவரும் தலையிட முடியாது என்றும் இறுமாப்புடன் எழுதுகின்றீர்கள். மக்கள் உங்களைத் தூக்கியெறியா வண்ணம் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
உண்மை விளம்பி.

1 comments:

வணக்கம் அன்பரே...

உங்கள் வருகைக்கு நன்றி...

உங்கள் பதிப்பில் உங்களுடைய ஆதங்கம் தெரிகிறது...

நல்ல நடையில் படைத்துள்ளீர்கள்...

வாழ்த்துக்கள்...

மேலும் நமது தொழிற்களம் பகுதியில் தொழில் சார்ந்த கட்டுரைகள், சட்டம், தொழில்நுட்பம், விவசாயம், போன்ற தொழில் சார்ந்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி நண்பா...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More