விண்கல் பள்ளத்தில் ட்ரில்லியன் காரட் வைரம்! ரஷ்யாவுக்கு அடித்தது லாட்டரி!


   
ட்ரில்லியன் என்பது ஒரு மில்லியன் மில்லியன் அதாவது  1,000,000,000,000 !           அப்படியானால் அது எவ்வளவு தான் இருக்கும் என்று நீங்களே
கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.  இந்தப் படத்தில் உள்ளது போபிகை விண்கல் பள்ளத்தில்தான் இவ்வளவு சரக்கும் கொட்டிக் கிடக்கிறது. ரஷ்யா கடந்த திங்களன்று சைபீரியாவில் முன்சொன்ன விண்கல் பள்ளத்தில் ஒரு மிக பெரும் வைரக் குவியல் தங்கள் நாட்டில் உள்ளதாக அறிவித்தது. இவை சாதாரண வைரங்கள் போல் இரு மடங்கு கடினமானவை. இதற்க்குக் காரணம் இவற்றின் விண்வெளி தொடர்புகள் தான்.

சைபீரிய  விண்கல் பள்ளத்தில் உள்ள இந்த ட்ரில்லியன் காரட் வைரங்கள்  இன்று உலக முழுதும் உள்ள வைரக் கையிருப்பை போல்  10 மடங்குஉள்ளவை. ரஷ்யாவுக்கு இந்த வைரங்கள் பற்றி  40     ஆண்டுகளாகவே தெரியும் என்றாலும் தன்னிடம் உள்ள மற்ற வைர சுரங்கங்களில் இருந்து விற்பனை செய்வதோடு நிறுத்திக் கொண்டு இதை ஒரு ரகசியமாகவே வைத்திருந்தது. இந்த மாபெரும் வைரக் குவியல் உள்ள பாறை ஒரு புராதன விண்கல் மோதல் நிகழ்வால் உண்டானது.  62  மைல் விட்டமுள்ள இந்த போபிகை விண்கல் பள்ளம் ஏறக் குறைய 35  மில்லியன்  வருடங்களுக்கு முன் மூன்று முதல் ஐந்து மைல் விட்டமுள்ள விண்கல் 'நட்சக்' என்று மோதி ஒரு முத்திரையை பதித்ததன அடையாளம்.

வைரம் இருக்கும் அதே பள்ளத்தில் கிராபைட்டும் கலந்து கிடக்கிறது. ஆனால் இது வைரம் போல் விலை மதிப்பானது இல்லை.. பூமிக்கடியில் உக்கிரமான வெப்பமும் அழுத்தமும் கிராபைட்டை வைரமாக மாற்றுகின்றன. இதை ஒரு பாறையை கொண்டு கரி உள்ள இன்னொரு பாறையின்மோதி அதே அளவு வெப்பத்தையும் அழுத்தத்தையும் உருவாக்கி வைரங்களை உருவாக்கலாம். கிராபைட்டில் இருந்து உருவாக்க படுவதால் இத்தகைய வைரம் இயற்கை வைரத்தை விட இரு மடங்கு கடினமாகவே இருக்கும். கட்டிங், பாலிஷ் போன்ற தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுவதோடு குறை கடத்தி என்கிற செமி கண்டக்டர்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது
 
உலகில் எங்குமே இல்லாத சூப்பர் ஸ்பெஷல் வைரங்கள் தன்னிடம் இருப்பதால் ரஷ்யா வெகு உற்சாகத்துடன் இருக்கிறது. பின்னே சும்மாவா?. இன்னும்   3,000   வருடங்களுக்கு பூமியில் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு இருப்பது சாதாரண விஷயம் இல்லையே. கொடுத்து வைத்த  ரஷ்யா. எல்லாம் விண்கல் மோதல் அளித்த லாட்டரி தான்!

4 comments:

யம்மாடி...!!! தகவலுக்கு நன்றி...

இனியும் சொல்ல வேண்டுமா?...

லக்கோ...லக்கு...

realy nice info...
iyarkkai ku munal namelam thoosu thaan...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More