ஆசிரியர்களை எனக்கு பிடிக்காது.

அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !      இந்த கட்டுரைக்கு நான் ஏன் இந்த மாதிரி எதிர்மறையான தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நீங்கள் என்னை வினவலாம்,கோபம் கூட படலாம்.கொஞ்சம் பொறுமையாக இந்த கட்டுரையை வாசித்து விடுங்கள்...
   ற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர் என்பவர் ஒரு எதிரியை போலவே மாணவர்களால் பார்க்கப்படுகிறார்.தனக்கு பிடிக்காத விசயங்களை செய்ய சொல்லும் ஒரு நபராகத்தான் ஆசிரியர் பெரும்பாலும் மாணவர்களுக்கு அறிமுகமாகிறார்.இதை நாம் “இதெல்லாம் சகஜம் தானே” என்று மிக சாதாரணமாக நினைக்கலாம்.ஆனால் இதன் பாதிப்பு பலமானது, தன் வகுப்பு மாணவனால் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி பற்றி உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
  ந்த அளவு ஆசிரியர்கள் மீது மாணவர்கள் கொலைவெறி யுடன் நடந்து கொள்ள என்ன காரணம் இருக்கும்?? இந்த கனமான கேள்விக்கு நான் பதில் கூற முயலவில்லை...என் கருத்துக்களை மட்டும் கூறுகிறேன்,தவறு இருப்பின் தாராளமாக பின்னூட்டத்தில் கூறலாம்...
                                                     ஆசிரியை உமா மகேஸ்வரி

ஒய் திஸ் கொலைவெறி?? கல்வி முக்கோணம் என்று ஒரு கருத்துறு(Concept) உள்ளது ஆசிரியர் ,மாணவர் ,பெற்றோர் ஆகிய மூவரும் இந்த முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக அமைகின்றனர்.எந்த இடத்தில் குறை ஏற்ப்பட்டாலும் கற்றலை அது பாதிக்கிறது.கல்வி கற்கும் மாணவனையும்,முக்கோணத்தின் மற்ற இரு பக்கங்களில் உள்ளவர்களையும் பாதிக்கிறது.மாணவன் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏதோ ஒரு வகையில் பங்குதாரர்கள்.ஒரு மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தான் என்பதை பரபரப்புடன் பார்க்கும் நாம் மாணவர்கள் தங்களை தாங்களே மாய்த்து கொள்வதை பெரிய செய்தியாக பார்ப்பதில்லை. “நாய் மனிதனை கடித்தால் அது சாதாரண செய்தி,ஆனால் மனிதன் நாயை கடித்தால் அது பரபரப்பு செய்தி.” இது மாதிரி தான் நாம் மாணவர்களின் தற்கொலைகள் பற்றிய செய்திகளை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.இந்த முக்கோணத்தின் படி சிந்திக்கிற போது மாணவர்களை தீர்மானிக்கிற பொறுப்பு ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையில் உள்ளது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது.

இதற்கு தீர்வு இருக்கிறதா ??

 ஏன் இல்லை...தீர்வெல்லாம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் சிக்கலே.இந்த தீர்வை நான் கட்டுரையின் முடிவில் கூறுகிறேன்.அதற்கு முன் உங்களிடம் ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
 நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருமுறை எங்கள் வகுப்பில் ஒரு கலந்துரையாடல் (G.D) நடந்தது ,அதன் தலைப்பு “சமூகத்திற்கு பெரிதும் சேவை செய்பவர்கள் ஆசிரியர்களா?, அல்லது மருத்துவர்களா?.”என்பது, அந்த தலைப்பை தந்தவர் ஆசிரியர்.அதனால் பெரும்பான்மையான மாணவர்கள் ஆசிரியர் பணியே பெரிதும் சேவை செய்யும் பணி என்பது மாதிரி பேசினர்.என்னுடைய முறை வந்த போது நான் “மருத்துவப்பணியே மக்களுக்கு பெரிதும் சேவை செய்கிறது.ஒரு சமூகத்தில் யார் வேண்டுமானாலும் ஆசிரியராக இருக்க முடியும்,ஆனால் யார் வேண்டுமானாலும் மருத்துவராக இருக்க முடியாது.இது புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.ஒரு விசயத்தை தெரிந்து வைத்திருக்கும் ஒரு நபர் தெரியாத நபருக்கு சொல்லிக்கொடுக்கும் போது அவர் ஆசிரியர் ஆகிறார்.மருத்துவருக்கு மருத்துவத்தை கற்று கொடுத்தவர் அவர் ஆசிரியர் தான்.கூலி வேலையில் அனுபவசாலி வேலையில் புதிதாக சேர்ந்த நபருக்கு தொழில் சொல்லிக்கொடுக்கும் போது அந்த இடத்தில் அவர் ஆசிரியர் ஆகிறார்.ஆக ஆசிரியர் என்பது யாராலும் எடுக்க முடிந்த அவதாரம்,மருத்துவத்துறையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ‘ஆசிரியர் பணி’ ஒன்றும் பெரிதும் சேவை கிடையாது.” என்று நான் என் கருத்தை கூறினேன்.

 கொலைவெறி தீர தீர்வு என்ன:

1.கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை(அது என்ன என்ன விசயங்கள் என்று சந்தேகம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.) கற்றுக்கொடுக்கும் போது.மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் இருப்பர்.கல்வி அவர்களுக்கு கசக்காது.

2.படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் பெறுகிற மாணவர்களை உருவாக்குவது என்றில்லாமல்.கற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும்

3.”கற்க கசடற“ என்று மாணவ சமுதாயத்தை நோக்கி மட்டும் எப்போதும் சொல்லும் நமது நாக்குகள் “கற்பிக்க கசடற “ என்று ஆசிரியர்களுக்கும் சொல்லட்டும்.

4.ஒழுக்கத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் முதலில் அதை அவர்கள் கடைபிடித்துவிட்டு மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

5.பாடப்புத்தகங்களை மட்டும் வாசித்து,அதை நெட்டுறு போட்டு பாடம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று தங்களை சொல்லிக்கொள்ளும் ஆசிரியர்கள் திருந்த வேண்டும்.

6.மாணவர்களை நன்றாகபடிப்பவர்கள்,
சுமாராக படிப்பவர்கள்,படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை பாரபட்சத்தோடு நடத்துவதை விட்டு விட்டு ஓரே மாதிரியாக அவர்களை நடத்த வேண்டும்.(படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கும் ஆர்வம் வருகிற மாதிரி பாடங்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.)
7.மாணவர்களின் மனநிலையை செதுக்கி சீர் படுத்தும் விதமாக மன ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
8.கண்டிப்பு,கவனம்,கனிவு இவைகளுடன் மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
9.ரசாயணம்,பௌதீகம்,சாத்திரம்,இலக்கியம் இவைகளோடு வாழ்க்கையும் கற்றுத்தரப்பட வேண்டும்.
10.மகாத்மா காந்தி சொல்லியது மாதிரி ஒரு நல்ல கல்வி என்பது கை,தலை,மற்றும் இதயம்(பணம்,அறிவு,அன்பு ) இம்மூன்றையும் நிறைவு செய்கிற ஒன்றாக இருக்க வேண்டும்-(“A good education should serves the  head heart and hand”.
11.நீதி போதனை,விளையாட்டு போன்ற வகுப்புகள் சரியாக சொல்லித்தரப்பட வேண்டும்.(பெறும்பான்மையான கல்வி நிறுவன்ங்களில் பி.டி,ஓவியம்,நீதி போதனை போன்ற வகுப்புகளை வாடகைக்கு எடுத்து வகுப்பு நடத்தும் புண்ணியவான்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்).
12.பெற்றோர்கள் அதிக பணம் வாங்கும் பள்ளிகள்,ஆங்கிலத்திலேயே கல்வி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் சிறந்தவை என்கிற மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
13.மாணவர்கள் மூளைக்குள் படிப்பை திணிக்கும் போக்கு களையப்பட வேண்டும்.படிப்பு என்பது வற்புறுத்தலால் வரக்கூடியது அல்ல.அது வற்புறுத்த வற்புறுத்த வழி மாறி போவது,திணிக்க திணிக்க திசை மாறி போவது.
14.பெற்றோர்களே !..ஆசிரியர்களே...! மணவர்களிடம் மனமாற பேசுங்கள்.
 
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் –என்று சொல்வார்கள் எனக்கு கல்வி சொல்லிக்கொடுத்த கடவுள்களுக்கு என் நன்றிகள்....
"ஆசிரிய பெருமக்களே ! நான் மரமாக செழித்து வளர நீங்கள் வேர்களாக இருந்தீர்கள்.,வேர்களுக்கு நன்றி    சொல்கிறது வளரும் இந்த மரம் !"


11 comments:

அன்று ஒரு சேவையாக இருந்தது...

இன்று பணமாக சிலருக்கு மாறி விட்டது... இருந்தாலும் :

தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

உள்ளாவர்களையும் - உள்ளவர்களையும்
சாதரண - சாதாரண
நட்த்த - நடத்த
ஆர்வ்ம் - ஆர்வம்
சொல்லி த்தரப்ப்ட வேண்டும் -சொல்லித் தரப்பட வேண்டும்
வற்புருத்தலால் - வற்புறுத்தலால்
மணவர்களுடம் - மாணவர்களிடம்

இவைகளை மட்டும் மாற்றி விடவும்... ஏதோ கண்ணில் பட்டவை... Google Tranlate -ல் செய்யும் போது இப்படித் தான் எல்லாருக்கும் தவறாக வரும்... பதிவு எழுதுவதை விட திருத்துவது நேரமாகும்... இன்னும் பழைய பதிவுகளை படிக்கும் என் வீட்டில் உள்ளவர்கள் நிறைய சொல்லுவார்கள்... (நேரம் கிடைக்கும் போது மாறி விடுவேன்...) நன்றி...

நீங்கள் சொல்வது சரிதான் அதிலும் உங்கள் கல்லூரி விவாதம் உங்கள் திறமையை காட்டுகிறது .
நன்றி அண்ணா

நீங்கள் சொல்வது சரிதான் அதிலும் உங்கள் கல்லூரி விவாதம் உங்கள் திறமையை காட்டுகிறது .
நன்றி அண்ணா

மன்னிக்க தனபாலன் அண்ணா,தவறுகளை திருத்தாமல் வெளியிட்டமைக்கு வருந்துகிறேன்.சரி செய்து விடுகிறேன்

மறுமொழி @ செழியன் கூறியது...
//நீங்கள் சொல்வது சரி...//
நன்றி செழியன் ...என் வலைப்பூவில் இதே பதிவை வெளியுட்டுள்ளேன் அதில் ஆசிரியர் ஒருவர் பின்னூட்டம் இட்டுள்ளார் அதையும் வாசித்து விடுங்கள்.

நீங்கள் சொன்னபடி உங்கள் வலைத்தளத்தில் பின்னூட்டம் பார்த்தேன்.

ரொம்பவும் வேதனையுடன் எழுதி இருக்கிறார் திரு முரளிதரன்.முதலில் தலைப்பில் எதிர்மறை கருத்தைச் சொல்லிவிட்டு, பிறகு நீங்கள் என்னதான் சொன்னாலும் எடுபடாது, விஜயன்.

ஏற்கனவே பள்ளிக்கூடம், ஆசிரியர் என்றாலே வெறுக்கும் மாணவர்கள்; இப்படிப்பட்ட தலைப்புகளைப் படித்தால் எப்படி இருக்கும்?

கல்லூரியில் உங்கள் விவாதம் சரியல்ல.

இந்த மாதிரி எதிர்மறை தலைப்புகள் நல்லதல்ல.மறுமொழி @ Ranjani Narayanan கூறியது...
அம்மா...எனக்கு ஆசிரியர்களை பிடிக்காது என்று நான் தலைப்பிட்டுள்ளேன் எதிர்மறை தலைப்பிற்காக மன்னிப்பு கேட்டு விட்டே கட்டுரையை தொடர்ந்துள்ளேன்.எனக்கு ஆசிரியர்கள் பிடிக்கும்.கட்டுரையை முழுமையாக நீங்கள் புரிந்து கொள்ள முயன்றால் இதை புரிந்து கொள்ள முடியும்.நான் இந்த தலைப்பை தேர்வு செய்ய காரணம் இன்று பல மாணவர்கள் தங்களுக்கு ஆசிரியர்கள் பிடிக்காது என்று சொல்கிறார்கள்,மேலும் சிலர் கொலை தற்கொலை அளவு கூட சென்று விடுகிறார்கள்.இதற்கு என்னால் தீர்வு சொல்ல முடியுமா என்று யோசித்தேன் அதன் விளைவே இந்த கட்டுரை.மனதை புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும்.தங்களி தொடர் ஆதரவுக்கு நன்றி அம்மா

மறுமொழி @ Ranjani Narayanan கூறியது...
ரஞ்சனி அம்மா கல்லூரியில் நான் அப்படி விவாதம் செய்ய காரணம் அந்த ஆசிரியர் கொடுத்த தலைப்பு தான்.எந்த ஒரு பணியையும் வேறொரு பணியுடன் ஒப்பிடுவது எப்போதும் தவறு தான் .தலைப்பை ஒட்டி சிந்தித்ததன் பயனாக தான் நான் அவ்வாறு பேச வேண்டியதாயிற்று...தவறாக எண்ண வேண்டாம்,,நீங்களே சொல்லுங்கள் நமக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் நம்மால் உருப்படியாக படிக்க முடியுமா??.ஒவ்வொரு தொழிலும் அதனதன் விதத்தில் சிறந்ததே ஒப்பீடுகள் தவறானது என்பதே என் கருத்தும்.

மறுமொழி @ Ranjani Narayanan கூறியது...
ரஞ்சனி அம்மா கல்லூரியில் நான் அப்படி விவாதம் செய்ய காரணம் அந்த ஆசிரியர் கொடுத்த தலைப்பு தான்.எந்த ஒரு பணியையும் வேறொரு பணியுடன் ஒப்பிடுவது எப்போதும் தவறு தான் .தலைப்பை ஒட்டி சிந்தித்ததன் பயனாக தான் நான் அவ்வாறு பேச வேண்டியதாயிற்று...தவறாக எண்ண வேண்டாம்,,நீங்களே சொல்லுங்கள் நமக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் நம்மால் உருப்படியாக படிக்க முடியுமா??.ஒவ்வொரு தொழிலும் அதனதன் விதத்தில் சிறந்ததே ஒப்பீடுகள் தவறானது என்பதே என் கருத்தும்.

என்னுடைய கருத்துக்களை மதித்து விரிவான பதில் எழுதியதற்கு நன்றி விஜயன்.

தொலைகாட்சி நிகழ்ச்சிகள், சினிமா, கதைகள் என்று எங்கு பார்த்தாலும் இப்போது எதிர்மறை உணர்வுகள்தான் காட்டப் படுகின்றன.

எங்கள் ஊரில் சினிமாப் படங்களின் பெயர்களைப் பாருங்கள்: ஜராசந்தன், கீசகன் - நாம் கெட்டவர்கள் என்று நினைப்பவர்களை கதாநாயகர்களாக சித்தரித்து பார்க்கும் இளம் உள்ளங்களில் மெதுமெதுவே நஞ்சைக் கலக்கிறார்கள்.

இரத்தத்தைக் கூட பார்த்து பயப்படாத ஒரு தலைமுறை உருவாகிக்
கொண்டிருக்கிறது!தினமும் ஒரு கொலை நம் வீட்டு வரவேற்பறையில் நடந்தேறி வருகிறது!

கெட்டவனாக இருப்பதே தகுதி என்ற நிலை இன்று! இவர்களை திருத்தக் கூடிய ஒரே இனம் ஆசிரியர்கள்தான் என்பது என் தீர்மானமான எண்ணம்.


அதனால் தான் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப் பட்டேன் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
ரஞ்ஜனி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More