ப்ரோக்ராம்மிங் செய்யாமலே கற்றுக் கொள்ளும் பாக்ஸ்ட்டர் மனித ரோபோட்!

வழக்கமாக எப்படி ப்ரோக்ராம்மிங் செய்ய பட்டதோ அதன் படி வேலைகள் செய்பவை இந்த ரோபோட்டுக்கள்.  ஆனால் பாக்ஸ்ட்டர் என்ற பெயர் கொண்ட ரீதின்க் ரோபோடிக்ஸ்  நிறுவனத்தால் உருவாக்க பட்டுள்ள இந்த புதிய தலை முறை தொழிற்சாலை ரோபோட் மிக எளிதாக ப்ரோக்ராம் செய்யும் படி அமைக்கப் பட்டுள்ளது.  இதன் விலை  22,000 டாலர்கள். வழக்கமான ரோபோட்டுக்கள் இதனை விட விலை அதிகம் உள்ளவை.

ஒரு டாப்லெட் பீசி போல முகம் கொண்ட இது ஒரு இடை முகம் ஆகவும் அந்த நேரத்தில் இது என்ன தான் செய்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஒரு பயன் பாடாகவும் ஒரே நேரத்தில் செயல் படுகிறது.
இதன் தற்போதைய  மன நிலையை  கூட அறிந்து கொள்ளும்படி விரிவு படுத்தப்பட்டுள்ளன இதன் செயல் பாடுகள். ப்ரோக்ராம்மிங் தேவை இல்லாததால் திரை மீதான ஆணைகள் மூலமாக உபோகிப்பாளர்கள் எளிதில் இயக்கலாம். இது பளுவை கையாளுதல்,  இயந்திர இயக்கம், எளிய , பிரிப்பது, சோதித்தல், கட்டுவது, கட்டை பிரிப்பது போன்ற வேலைகளை செய்யக் கூடியது. இதில  ஒரு விரிவான பாதுகாப்பு செயலாக்க பகுதி இணைந்துள்ளதால் இதை உபோயோகிப்பவர்களுடன் எளிதாக இணைந்து செயல் படக் கூடிய சமர்த்தான ரோபோட்! 

1 comments:

ஜீ நமக்கு ஒன்று சொல்லிடுங்க.களதில் பதிவுஎழுத செளரியமாஇருக்குமே.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More