நான் பதிவர் அறிமுகம் - வரலாற்றுச் சுவடுகள்...

வணக்கம் தோழமைகளே!!!

இன்று நான் பதிவர் அறிமுகத்தில் நாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் பதிவர் - வரலாற்று சுவடுகள்....இவருடைய வலைப்பூ முகவரி தான் வரலாற்று சுவடுகள், 2012 - ஜனவரியில் பதிவுகள் எழுத தொடங்கிய இவரின் வெற்றி பயணம் குறுகிய காலத்தில் அதிக மக்களை சென்றடைந்துள்ளன. அதற்கு காரணம் இவரின் வலைப்பூவில் இவர் பதியும் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதை. மற்றும் மற்ற தமிழ் பதிவர்களின் வலைப்பூவிலும் இவர் தன் பின்னூட்டங்களை மறக்காமல் இட்டு செல்வார்...


இவரின் வலைப்பூ படிக்க கீழே சொடுக்கவும்.
வரலாற்று சுவடுகள்


பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் வரலாற்று சிறப்புமிக்க பதிவுகளினால் இவர் அனைத்து தரப்பு மக்களையும் இவரின் பால் இயல்பாக ஈர்த்துவிட்டார்...

ரசனை மிக்க மனிதர். பக்ரைனில் கணக்காளராக பணியாற்றும் இவர் ஓய்வு நேரங்களில் வரலாற்று சிறப்புமிக்க பதிவுகளை எழுதுவார். மேலும்  அறிவியல், விஞ்ஞானம், புவியியல் என்று எல்லா வகையான தலைப்பிலும் இவர் பதியும் பதிவுகள் மிகவும் நேர்த்தியாகவும், பயனுள்ளவகையாகவும் இருக்கிறது.

மனதை வருடும் மெல்லிய இசையை விரும்பும் இவரின் பதிவுகளும் அதே போல் நம் மனதை வருடுவதாய்  இருக்கின்றன. மனிதனின் எண்ணங்களை மதிக்க தெரிந்தவர். கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்களை விரும்பி படிப்பவர். முன்னோர்களின் தொன்மையையும், வீரத்தையும் பறைசாற்றுவது இவருக்கு பிடித்த பதிப்புகள்..

இவரின் பணிகள் மேலும் மேலும் வளர வாழ்த்துவது நம்முடன் சேர்ந்து நமது தொழிற்களமும் தான்...

வலைப்பூவிற்கு பெயர் வைத்த இவர், ஏனோ தனக்கு பெயர் வைக்கவில்லை போலும், ஒரு இடத்திலும் பெயரை பதியவில்லை...

இவரை நமது தொழிற்களம் குழு அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது...

வரலாற்று பதிவுகள் பதியும் இவரின் பதிப்புகளும் வரலாற்றில் பதிய வாழ்த்துக்கள்....

என்றும் உங்கள் வெற்றி பாதையில் உங்களுடன்...
நமது தொழிற்களம் குழு...

30 comments:

நான் ரசிக்கும் நண்பர்களில், இவர் முக்கியமானவர்...

மிக அரிய தகவல்களை அள்ளித்தரும் அன்பு நண்பர்...

இவரது பின்னூட்டம் சுருக்கமாக இருந்தாலும் 'நச்'-ன்னு இருக்கும்...

பிழைகளையும் சுட்டிக்காட்டுவார்... அதை விட Uptodate : Followers, Total Email subscription, Total Posts - இவற்றை எல்லாம் மிகச் சரியாக குறிப்பிடுவார்... (என் தளத்தில் நானே சில சமயம் கவனித்ததில்லை....)

உங்கள் பெயரை மெயிலில், எனக்கு மட்டும் அனுப்பி வையுங்க நண்பா...! ஹா.. ஹா...

வாழ்த்துக்கள்...

உண்மைதான் தோழர்.

இவரின் பதிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது.

நமது குழுவும் ரசிகனாய் விட்டது...

பெயர் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்...

ரகசியமாய் கூட சொல்லலாம் நண்பரே...

வரலாற்று பதிவுகள் பதியும் இவரின் பதிப்புகளும் வரலாற்றில் பதிய வாழ்த்துக்கள்....

என்னுடைய வலைபூவும் இன்று இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய என்னை ஊக்கப்படுத்திய நண்பனும் இவரே அன்பு நண்பர்

வரலாற்று சுவடுகளின் ஏடே, கருத்துரையில் கால் பதிக்கும் சகோ. வாழ்த்துக்கள் , நன்றி

வரலாற்று சுவடுகளின் ஏடே, கருத்துரையில் கால் பதிக்கும் சகோ. வாழ்த்துக்கள் , நன்றி

அன்பு, உங்களுக்கு தெரியுமா? இவரின் பெயர் என்னவென்று?

கேட்டு சொல்லுங்களேன்...

அருமையான அறிமுகம்.
வாழ்த்துகள்.

வாழ்த்துகள்

பல அரிய தகவல்களுடன் பதிவெழுதி குறுகிய காலத்திற்குள் தரமான பதிவர் என்று பெயரெடுத்தவர் வரலாற்றுச் சுவடுகள். அவருடைய ஊக்கமிகுந்த பின்னூட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. வாழ்த்துகள் நண்பரே!

வரளலாற்றுச் சுவடுகள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள். இவர் பதிவர்களுக்கு கொடுக்கும் ஊக்கம் அலாதியானது.

ஆல் தி பெஸ்ட்.

மெல்லிய நடைகொண்ட எழுத்து ஆனால் வல்லிய கனம் கொண்ட கருத்து...

வாழ்த்துக்கள் நண்பா.

-வீரா (அதியன் கௌரி)

வணங்க வயதில்லை, விழுந்து கும்பிடுகிறேன்! ;) (இதன் அர்த்தம் திருவாளர் வரலாற்றிக்கு மட்டும் புரியும்!) - வாழ்த்துக்கள் நண்பா! :)

நான் அவர் தளத்தில் அதிக பின்னூட்டங்கள் இடா விட்டாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், கணக்காளராக இருந்தும் பின்னூட்டக் கணக்கு பார்க்காமல் பாரபட்சமின்றி அவர் ரசிக்கும் தளங்களில் எல்லாம் தம் தடத்தை விட்டுச் செல்ல தவற மாட்டார்! அவர் அகலச் சிரிப்பை போலவே அவர் மனதும்! :)

நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை... இந்த ஒரு கெளரவம் போதும் நண்பர்களே!!!

ஒவ்வொருவரும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்துதான் பதிவுலகில் காலடியெடுத்து வைக்கிறார்கள் அந்த வகையில் முகமறியா நட்புகளிடமிருந்து கிடைக்கும் எந்தவொரு சிறு அங்கீகாரமும் எவரது மனதிலும் உற்சாக விதையை விதைக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!

மக்கள் சந்தை இது போன்ற அங்கீகாரத்தை தரமான பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் மேலும் பல எண்ணற்ற பதிவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கும் வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்!

என்னை இங்கே அறிமுகபடுத்தி கெளரவித்த மக்கள் சந்தை குழுவினருக்கு என் நெகிழ்ச்சி கலந்த நன்றிகள்!!!

@ திண்டுக்கல் தனபாலன்

வாழ்த்துக்கும் என் மீது கொண்ட அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே!!

@ இராஜராஜேஸ்வரி

வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா!

@ அன்பை தேடி,,அன்பு

வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அன்பு!

@ செழியன்

வாழ்த்திற்கும், இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு மின்னஞ்சலில் அறியதந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

@ Rathnavel Natarajan

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா!

@ Lakshmi

வணக்கம் அம்மா, தங்களை போன்ற பெரியவர்களின் ஆசி கிடைப்பது பெரும் பாக்கியம்! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

@ பன்னிக்குட்டி ராம்சாமி

டெர்ரர் கும்மியில் உங்கள் கருத்துக்களை நான் ரசித்து படிப்பதுண்டு, வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே!

@ பட்டிகாட்டான் Jey

அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

@ அதியன் கௌரி

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!

@ Karthik Somalinga

வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே!

நல்வாழ்த்து சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

neenga sonnathellaam unmai!


nalla padaippaali!

அன்பின் வரலாற்றுச் சுவடுகள் - மக்கள் சந்தை குழுவினரின் அறிமுகத்திற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பதிவு வரலாற்றுச் சுவடுகள்..

நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.

தரமான எழுத்துகளை இவர் பதிவுகளில் பார்க்கலாம், அதேபோல பின்னூட்டம் இடுவதில் அசராதவர்....!!!

வாழ்த்துகள் நண்பா....!

வணக்கம் நண்பா ,
நம் முதல் சந்திப்பு இது .வாழ்த்துக்கள்

இங்கு அறிமுகத்தைப் படித்துவிட்டு இவரது தளத்திற்கு போனேன். மிகவும் அரிய தகவல்களை எளிதாக எல்லோருக்கும் புரியும்படி எழுதி இருக்கிறார்.

அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

மிகச் சிறந்த பதிவர்களில் வரலாறும் ஒருவர். மேலே அனைவர் சொன்னது போல், நான் எங்கு சென்றாலும் அவர் கருத்துரை அங்கே நிச்சயமாக இருக்கும். வரலாற்று கட்டுரைகள் படித்து அதை ஆராய்ச்சி செய்ய மட்டும் அவர் எவ்வளவு நேரம் எடுத்து இருப்பார் என்று நினைத்தால், நான் எல்லாம் பதிவனே கிடையாது....

மனத்தில் தோன்றுவதை எல்லாரும் எழுதி விடலாம், புதைந்து போனதை தோண்டி எடுத்து எழுத தனி திறமை வேண்டும், அதிலும் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதுவது தனி சிறப்பு....

வரலாறு அவர்களே தங்கள் புகழ் மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்

@ kovaikkavi

வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ!

@ Seeni

வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பா!

@ cheena (சீனா)

பதிவர் சந்திப்பின் வாயிலாக தங்கள் முகத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா! இந்த சந்திப்பிற்கு பெரிய அளவில் ஸ்பான்சர்சிப் செய்த மக்கள் சந்தை குழுவிற்கு என் நன்றிகள்!

அயல் மண்ணில் வசிப்பதால் நிகழ்ச்சியில் பங்கு பெற இயலவில்லை, இருப்பினும் நேரலையில் நிகழ்ச்சியின் பெரும்பான்மையை பார்த்தேன், நேரலைக்கு பாடுபட்டு உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கு இங்கும் என் நன்றியை பதிவு செய்துகொள்கிறேன்!

தங்கள் வாழ்த்திற்கு நன்றி ஐயா!

@ முனைவர்.இரா.குணசீலன்

வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே!

@ MANO நாஞ்சில் மனோ

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!

@ sakthi

வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோ!

@ Ranjani Narayanan

என் பதிவுகளை பற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்கு நன்றி சகோ! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

@ சீனு

என்னை பற்றிய உயர்ந்த மதிப்பீடிற்கு மிக்க நன்றி சீனு, வாழ்த்திற்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கள் சகோ தங்கள் எழுத்துக்கள் எப்போதும் எனக்கு வியப்பைத் தந்தது .இவை எல்லோராலும் மதிக்கப் படும் இடத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டது என எண்ணுகின்றேன் .மேலும் மேலும் வலுவான ஆக்கங்கள்
தொடர வாழ்த்துகின்றேன் .

அண்ணே, பெயரை சொல்லுங்களேன்...

பெயர் அறியா பிரபலம் வரலாற்று சுவடுகளுக்கு வாழ்த்துக்கள்

@ அம்பாளடியாள்

என் பதிவுகளை பற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்கு நன்றி சகோ! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

@ தொழிற்களம் குழு

பெயரை பொதுவில் பகிர்ந்துகொள்ளும் விருப்பம் இல்லாததினால்தான், இதுவரை எங்கும் பெயரை பகிர்ந்துகொள்ளவில்லை! இப்போதும் பெயரை பகிர்ந்துகொள்ள இயலாத சூழ்நிலைக்காக வருந்துகிறேன், மன்னியுங்கள் நண்பர்களே!

@ Prem Kumar.s

வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரேம்!

வரலாற்று சுவடுகள் அவர்கள் பதிவெழுதுவதைவிட மற்றவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுவது தான் அதிகம். தேர்ந்த எழுத்தாளரைப் போல, ஆராய்ச்சியாளர் போல அவருடைய பதிவுகள் இருந்தாலும், அவருடைய பின்னூட்டங்கள் நகைச்சுவையாக இருக்கும். அவரின் பின்னூட்டங்கள் அதிகம் பேருக்கு ஊக்கமாக இருக்கிறது.

@ Abdul Basith

அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More