காலை தேநீர்...இன்றைய சிந்தனைத்துளிகள்....

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும்  நமது தொழிற்குழுவின் இனிய காலை வணக்கம்...

நமது அன்றாட வாழ்வில் பல சோதனைகளை சந்திக்கிறோம், ஆனால் அவற்றால் மனம் உடைந்து போகாது நிமிர்ந்து, எதிர்த்து நின்றோமானால் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்ற சிந்தனையுடன் இதோ சில சிந்தனை துளிகள் நமக்காக.......  • தொடக்கத்தினைவிட  முடிவினை பற்றி அதிகமாக சிந்தனை செய்....
  • தன் நடத்தை அளவிற்கே ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்கிறான்....
  • போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன்....
  • பணிவான சொல் பாதையை எளிமையாக்குகிறது.....
  • காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது....

சிந்தனையுடன் சிறு கதையும் பிடிக்கும் தானே!!!


சோம்பேறி அழகி! (சிறுகதை)


முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் அழகான பெண்
ஒருத்தி இருந்தாள். ஆனால், அவள் சோம்பேறியாகவும்,
கவனம் இல்லாமல் செயல்படுபவளாகவும் இருந்தாள்.
அவள் பஞ்சில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள். நூற்கும்
நூலில் முடிச்சு இருந்தாலும் அந்த நூலை அறுத்துத்
தூக்கி எறிந்து விடுவாள். ஆனால், அவளுடைய
வேலைக்காரி மிகுந்த உழைப்பாளியாக இருந்தாள்.
தூக்கி எறியப்பட்ட அந்த நூலை எல்லாம் திரட்டிச்
சேர்த்து வைத்தாள். அவற்றைத் தூய்மைப்படுத்தினாள்.
பிறகு அந்த நூலை நெய்து தனக்கு ஒரு உடை தைத்துக்
கொண்டாள்.
சோம்பேறியான அந்த அழகியின் மீது இளைஞன்
ஒருவன் காதல் கொண்டான். இருவருக்கும் திருமணம்
முடிவாயிற்று. அன்று அந்த வேலைக்காரப் பெண் தான்
நெய்த அழகான ஆடையை அணிந்திருந்தாள்.
அப்பொழுது அந்த மணமகள் தன் காதலனிடம்,
“நான் வீணாக்கித் தூக்கி எறிந்த நூல்களிலிருந்து ஆடை
நெய்து அவள் அணிந்திருக்கிறாள். இந்த நிலையில்
அவள் எவ்வளவு கும்மாளம் போடுகிறாள் பாருங்கள்,”
என்று கேலி செய்தாள்.
இதைக் கேட்ட அவன், “”எதனால் அப்படிச்
சொல்கிறாய்?” என்று கேட்டான். அவள் நடந்ததைச்
சொன்னாள். அவளின் சோம்பேறித்தனத்தையும்,
வேலைக்காரியின் உழைப்பையும் புரிந்து கொண்டான்.
“”சோம்பேறியான உன்னைத் திருமணம் செய்து
கொள்ள மாட்டேன்,” என்று மறுத்த அவன் அந்த
வேலைக்காரியைத் திருமணம் செய்து கொண்டான்.
தன்னுடைய நல்ல எதிர்காலத்தை தானே கெடுத்துக்
கொண்டதை எண்ணி மிகவும் வருந்தினாள் அழகி.
இனி சோம்பேறியாய் இருப்பதில்லை என முடிவு
செய்தாள்.
========================================
நன்றி; தினமலர் (சிறுவர்மலர்)
அம்மாடி முடிந்துவிட்டது....
இந்த நாளை வெற்றிகரமான நாளாக அமைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்....
வெற்றியும் தோல்வியும் நம் கையில் தானே இருக்கிறது....
தேநீர் சுவையாக இருக்கிறதா?
நீங்கள் சொன்னால் தானே சுவையை கூட்டவோ அல்லது சரி செய்யவோ முடியும்...
உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றிகளுடன்...
நமது தொழிற்களம் குழு...


11 comments:

நல்லதொரு சிந்தனை துளிகள்...

நல்ல சிறுகதை... (சிறுவர்மலர் இனி வீட்டிற்கு வருவதற்கு முன், தளத்திலேயே படித்து விடலாம் போலிருக்கே...)

வெற்றியும் தோல்வியும் நம் கையில் தானே இருக்கிறது....

உண்மைதான்! சுவையான தேநீருக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

வெற்றியும் தோல்வியும் நம் கையில் தானே இருக்கிறது....

உண்மைதான்! சுவையான தேநீருக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

வெற்றியும் தோல்வியும் நம் கையில் இருப்பது உண்மைதான், அதே சமயம் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், திருத்தும் குணமும் வேண்டும் . நன்றி

இந்த நாளை வெற்றிகரமான நாளாக அமைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்....

காலைத் தேனீர் அருமை.
சிறுகதையுடன் இன்றைய நாளைத் தொடங்குகிறேன்

நன்றி திரு.தனபாலன் அண்ணே...

நீங்கள் இவ்வாறு உற்சாகப்படுத்துவது எங்களை மேலும் மேலும் உங்களுக்காக நல்லதொரு பணியை செய்ய தூண்டுகிறது...

என்றும் உங்கள் ஊக்கத்தில்..

நமது தொழிற்களம்...

உண்மைதான் செழியன்.

தன்னம்பிக்கையுடன் இந்த நாளை தொடங்குவோம்...

வாழ்த்துக்கள்...


நன்றி இராஜராஜேஸ்வரி...

வெற்றிகரமான நாளாக அமையட்டும்....

ராஜா அவர்களுக்கு நன்றி....Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More