செவ்வாய் கிரகத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் இன்று தாக்குமாம்: இன்றைய வதந்தி!

 
 

இந்த வதந்தி பரப்புவர்களுக்கு வேறு வேலையே இல்லை போலிருக்கிறது. நான் இன்று முக நூலில் இருக்கும் போது சற்று முன் என்னுடைய மலேசிய நண்பர் சாட்டிங் வந்து அங்கே மலேசியாவில் செவ்வாயில் இருந்து காஸ்மிக் கதிர்கள் வந்து பூமியைத் தாக்கும் என்றும் செல் போன்களை அணைத்து வைக்கும்படி குறும் செய்திகள் வருவதாக தெரிவித்து எனக்கு இது பற்றி சொல்லுங்கள் என்றார். நான் எனக்கு தெரிந்த வரை இப்படி ஒரு செய்தியும் இல்லை இது பற்றி தகவல் அறிந்து சொல்கிறேன் என்றேன். கடைசியில் பார்த்தால் இது போன்ற வதந்தி 2008  இல் இருந்தே வந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.

காஸ்மிக் கதிர்கள் என்பவை விண்வெளியில் இருந்து சூப்பர் நோவா மீதங்களில் இருந்து அல்லது க்வேசார் , காம்மா கதிர் சிதறல்கள் போன்றவற்றில் இருந்து வருபவை. செவ்வாய் கிரகத்தில் இவை தோன்ற வாய்ப்பே இல்லை.  அதனால் செவ்வாய் கிரகத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் செல் போன்களை அணைத்து வையுங்கள் என்பதெல்லாம் வீண் வதந்தி.

நம் பூமி மீது எப்பொழுதும் காஸ்மிக் கதிர்கள் விழுந்த வண்ணம்தான் இருக்கின்றன.  அவற்றை தடுத்து நம்மை பாதுகாப்பதுதான் பூமியை சுற்றியுள்ள காந்த மண்டலத்தின் வேலை அதைத்தான் மேலே உள்ள படம் காட்டுகிறது.  படத்தில்  சூரியனில் இருந்து வரும் சூரிய காற்று எப்படி பூமியைத் தொடமால் விலக்கப் படுகிறது என்பதைக் காணலாம். இது போல்தான் காஸ்மிக் கதிர்களும் விலக்கப் பட்டு நாம் பாது காப்பாக இருக்கிறோம்

எனவே இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்


4 comments:

நேற்று முதல் கைபேசியில் இதே தொல்லை தான்... (SMS)

ingumaa? ippothu ungalukku purithirukkum enru ninaikkiren. enakku evanum thollai kodukkak kaanom, enndudaiyathu puthu number athu poga naan itherkkallam asaiya matten enru therinthiruppargal

புரிந்துகொள்ள வேண்டிய பதிவு...

வதந்தியை நம்பாதீர்கள்...

nanri. ithu anaivarukkum avasiyam theriya vendiya pathivum kooda.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More