சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல்





 சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடாக 51 % வரை நம் நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ள  மத்திய அரசு அவசரமாக அனுமதி வழங்கி உள்ளது . ஏன்?

மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு பெரும் எதிர்ப்பு நாடு முழுவதும்  கிளம்பி உள்ளது .சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் பெரும் பாதகமும் ,நம் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பபடுகிறது .

நாம் அறிந்த வகையில் ஒரு உதாரணம் காண்போம் : 

                                  

நாம் சில ஆண்டுகளுக்கு முன்பாக கடைகளில் காளிமார்க் " , " வின்சென்ட் " போன்ற இந்திய தயாரிப்பு குளிர்பானங்களை சுதேசி ) பருகி இருப்போம் ! என்பதை நினைவுபடுத்தி பாருங்கள் !
அதுவே இன்று அந்நிய தயாரிப்புகளான ( விதேசி ) " பெப்சி " , " கோகோ - கோலா போன்ற குளிர்பானங்களை மட்டுமே கடைகளில் அதிகமாக பார்க்க முடிகிறது .
அந்நிய தயாரிப்பு நிறுவங்கள் நம் நாட்டில் காலடி வைத்த பிறகு நம் தயாரிப்பு குளிபானங்கள் காணாமல் போய்விட்டது என்பதை நாம் அறிவோம் .! 
அதையே நாம் தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்த வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுகிறோம் .இந்த மாற்றம் ,இந்த நிர்பந்தம் ,  அனைத்துமே அந்நிய தயாரிப்புகள் உள்ளே வந்ததன் விளைவே காரணமாகும் .இதே போன்ற நிர்பந்தங்களுக்கு இனி மேலும் மேலும் நாம் அறியாமலேயே தள்ளபடுகிறோம்.

மேற்கண்ட சிறு உதாரணம் மூலம் அந்நிய சில்லறை வர்த்தகத்தின் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம் .

நம்   அறிவுஜீவிகள் சிலரின் கருத்துபடி அந்நிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் வேலை வாய்ப்பு பெருகும் ,இடைத்தரகர்கள் நீக்க படுவார்கள் ,நியாயமான விலையில் பொருட்கள் மக்களை சென்றடையும் ,நாட்டின் பொருளாதாரம் உயரும் ,என்பதே அவர்கள் கருத்து .

 அமெரிக்காவில் சில மாகாணங்களில் வால் -மார்ட்  போன்ற நிறுவங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறியுங்கள் !  

                                          

அந்நிய முதலீடுகளை அனுமதி வழங்கி வரவேற்ற ஐரோப்பியா , அமெரிக்கா ,போன்ற மேலும் பல நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து நிலவிவருகிறது என்பதை நம் அறிவு ஜீவிகள் உணர்வார்களா ?

 நேற்று வரை நம் பிரதமரை கையாலாகாத பிரதமர் என்று கூறிய அமெரிக்க பத்திரிகைகள் ,அமெரிக்க நிறுவனங்களுக்கு வரவேற்பு கொடுத்ததால் பாரத பிரதமர் ரொம்ப நல்லவர் அவர்கள் நாட்டு பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளன .யாருக்கு வேண்டும் அவர்கள் பாராட்டும் ,ஏளன பேச்சும் .

                                             

ஆங்கிலேயர்கள் எப்படி நம் நாட்டை பிடித்தார்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் !அட பயப்பட வேண்டாம் சாமி ! சில காலங்கள் கழித்து அவன் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும் .அந்நியர்கள் சம்பாதிக்க நாம் பட்டு கம்பளம்  விரிக்க வேண்டுமா ? சிந்தியுங்கள் !!

நம் மத்திய அரசாங்கம் நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பாதிப்போ ? அச்சுறுத்தலோ ? இல்லை .தேவையற்ற பயம் தேவை இல்லை என்று கூறினாலும் ,நம்மை தொடரும் சந்ததிகள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தள்ளபடுவார்களா ?

என்ன வளம் இல்லை ! நம் பாரத  தாய் திருநாட்டில் !



6 comments:

மீண்டும் ஒரு ஒத்துழையாமை இயக்கம் வேண்டும் இந்நாட்டிற்க்கு..? ஆனால்..? தலைமைக்கு எந்த காந்தி..?

எதிர்காலத்தில் இந்த சில்லரை வணிக அனுமதி சட்டத்தால் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதனை கருத்தில் கொண்டு விளிப்புணர்வுடன் நம் மக்கள் இதனை அனுக வேண்டும்..

இது சில்லரை விசயமல்ல சிந்திக்க வேண்டிய விசயம்..

நம் பதிவர்கள் இந்த சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றிய சாதக / பாதக நிலைப்பட்டை மேலும் பகிர்ந்துகொள்ளுங்கள்..

சக்தி,, உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை,,

( ''தங்களது தளத்திலும் உங்களது அனைத்து பதிவையும் பகிர்வதால்'' தொழிற்களம் குழம்புகிறது )

நம்மை தொடரும் சந்ததிகள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தள்ளபடுவார்களா ?

அருமையாக சொன்னீர்கள்

காந்தி வருவார் என்று நாம் துங்க வேண்டா, எதிர்ப்போம், எதிர்ப்பை இந்திய பொருட்களை வாங்கி அந்நிய பொருட்களை தவிர்ப்போம், அகிம்சை போராட்டம் செய்வோம், வாருங்கள் முடியும் நம்மால்

கருத்து பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More