தங்கத்தின் விலை தினம் தினம் மாறுவது ஏன்?

அன்பர்களுக்கு வணக்கம், என்னை ரொம்ப கவர்ந்த தொழிற்களம் மேல நான் இப்ப கோபமா இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களை பத்தி எழுத சொன்னா தினமும் 1 பதிவுங்கறதுங்கறது  சாதாரணமா போய்டும், தொழிற்சார்ந்த பதிவுங்கறதால எனக்கு எதுவும் பிடிபடலை. 

ஆனாலும் இதுல பெரிய நல்ல விசயம் இருக்கு, இப்படி எழுதனுங்கறதுக்காகவே ரொம்ப நாளா இணையம் இருந்தும் தெரிஞ்சுக்காம விட்ட பல விஷயங்களை இப்ப தெரிஞ்சுகிட்டு எழுத துவங்கறேன், எல்லா விஷயமும் ஆரம்பத்துலயே எல்லாருக்கும் வந்துடாது, பழக பழக சரியா போயிடும்னு நம்பி புது களத்துல எழுத துவங்கறேன்.

இன்று நாம் தெரிந்து கொள்ள போவது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வாறு நம் நாட்டில் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை பற்றி. தினமும் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும் பொழுது வானிலை அறிக்கைக்கு முன்பாக வாசிக்கப்படும் வாணிப செய்திகளில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் பற்றி கூறுவார்கள், தினம் தினம் இதன் விலை மாறுபடுவது ஏன்? எதனை பொறுத்து மாறுகிறது என்பதனை காண்போம்.

 

தங்கம் மற்றும் வெள்ளியானது உலக சொத்தாக கருதப்படும் பொருட்கள், அவற்றின் விலை உலகம் முழுவதும் ஒரே மாதிரி சீராக இருக்க வாண்டியது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று, அந்தந்த நாட்டின் பண மதிப்பினை பொறுத்தே தங்கம் மற்ரும் வெள்ளியின் விலை மாறுபடுகிறது.

அடிப்படையில் தங்கத்தின் விலையானது TROY-OUNCE ல் இருக்கும், அதாவது TROY-OUNCE என்பது எடையினை அளக்கப் பயன்படும் அடிப்படை அலகு. அதிலிருந்து கிராமுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப் படும், பின்பு ஒரு கிராம் தங்கத்தின் விலை டாலரில் மதிப்பிடப்பட்டு பின் ரூபாய்க்கு கணக்கிடப்பட்டு இறக்குமதி வரியுடன் தங்கத்தின் விலையாக அறிவிக்கப்படும். 

உதாரணத்திற்கு இங்கு குடுத்திருக்கும் கணக்கீட்டினை பாருங்கள்.

அமெரிக்க தற்போதைய 1 ட்ராய்-அவுன்ஸ் தங்கம் விலை =  1750 $

1 ட்ராய்-அவுன்ஸ் = 32,15 கிராம்.

1 கிராம் தங்கத்தின் விலை = 1750 / 32,15 = $ 54,50

1 டாலர் = 49 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்

இந்திய ரூபாய்க்கு கிராம் தங்கம் விலை= 54,10 x 49 = 2670.05

இறக்குமதி வரி [2%] = 2670.05 + 53.43  

இந்தியாவில் கிராமுக்கு = 2723,50.

இந்த கணக்கீடு கணிணியில் நேரடியாக  MICROSOFT EXCELல் செய்ய படுகிறது.

 

 இதே முறையில்தான் வெள்ளி விலையும் கணக்கிடப்படுகிறது.

பெரும்பாலும் கைமுறையில் கணக்கிடும் பொழுது தசமங்களில் குழப்பம் வந்து விடும் என்பதால் கணிணியினையே பயன் படுத்துகிறார்கள், மேலும் இந்த விலை நிலவரம் 99.99% தூய்மையான 24 கேரட் தங்கத்திற்கே பொருந்தும், தங்கத்தின் தூய்மை மாறும் பட்சத்தில் விலையும் மாறும்.

ஏதோ எனக்கு தெரிந்த வரையில் விளக்கியுள்ளேன், இன்னமும் புரியவில்லையென்றால் பின்னூட்டத்தில் கேளுங்கள், யாரிடமாவது கேட்டாவது விளக்குகிறேன்.
6 comments:

வாத்யாரே கலக்குறீங்க...

இதத்தான் எதிர்பார்த்தோம்...

தொடர்ந்து எழுதுங்கள்,,,

தங்கமான தகவலோடு தொடங்கி விட்டீர்கள்... தங்கமான வாழ்த்துக்கள்...

கொடுத்திருக்கும் கணக்கீடு எளிதாக உள்ளது... நன்றி...

நான் கல்லூரியில் நகைக்கடை மென்பொருள் பற்றித்தான் ப்ராஜெக்ட் பண்றேன், எனக்கு ரொம்ப பயன்படும், நன்றி அண்ணா, இப்டி புதுசாவே எழுதுங்க

தனபாலன் சார் உங்களை நான் கட்டாயம் சென்னைல சந்திக்கனும்னு நினைச்சு வந்தேன், அவசர வேலை காரணமா 3 மணிக்கு கிளம்ப வேண்டியதா போயிடுச்சு, அடுத்த சந்திப்புல கட்டாயம் பார்ப்போம்

புதுசு இது புதுசு.!வாழ்த்துக்கள் சொந்தமே இப்படியும் சில பதிவுகள்.தொடருங்கள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More