நான் பதிவர் அறிமுகம் - சுடுதண்ணி


தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கென்று தனியிடம் எப்போதும் உண்டு. விஞ்ஞானத்தை எளிமைப்படுத்தி அனைவரையும் விருப்பத்துடன் வாசிக்க வைத்த வித்தகன். கட்டுரைகளாக இருந்த விஞ்ஞானத்தை கதைகளாக, புனைவுகளாக மாற்றி தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை உருவாக்கியவர். இவர் வாரப்பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டுருந்த தொடர்களின் அடுத்த அத்தியாயம் எப்போது வருமென்று தவமாய் தவமிருந்தவர்கள் அநேக பேர்கள்.

வலையுலகிலும் ஒரு சுஜாதாவைப் போலவே ஒருவர் இருக்கிறார்.  இவர் பெயர் சுடுதண்ணி. தன்னைப் பற்றி வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே குறுகிய காலத்தில் பலரையும் தனது எழுத்துக்களால் கட்டிப் போட்டவர். தற்போது எழுதுவதை நிறுத்தி விட்டாலும் கூட இவர் எழுதிய ஒவ்வொரு தலைப்பும் தற்போது நடக்கும் அத்தனை விசயங்களோடு பொருத்திப் பார்க்க முடியும். 

இவர் எழுதிய ஒவ்வொரு பதிவும் சுடுதண்ணி ரகம் தான். 

கடினமான விஞ்ஞான விசயத்தைக் கூட ரசிப்போடு நையாண்டியாக எழுதிக் காட்டியவர். படிப்பவர்களை ஆச்சரியப்படுத்த முடியும் என்பதை சாதித்து காட்டியவர்.

தமிழ் பதிவுலகில் இரண்டு விதமான பதிவர்கள் இருக்கிறார்கள்.  பரபரப்பில் விற்றுத்தீர்க்கும் புத்தகம் போல விதவிதமான தலைப்பிட்டு வரவழைப்பவர்கள் ஒரு பக்கம்.  இவர் அடுத்து என்ன எழுதியிருப்பார் என்று நம்பிக்கையுடன் வரவழைப்பவர்கள் மறுபக்கம். 

சுடுதண்ணி இரண்டாவது ரகம்.

வலையுலகில் தனக்கென்று எந்த குழுவையும் அமைத்துக் கொள்ளாமல், வலையுலக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலருக்கும் விருப்பமான தளமாக சுடுதண்ணி இன்று வரையிலும் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. இவர் எழுதிய பல பதிவுகள் கொதிநிலையை தாண்டியும் பரபரத்தது. 

நேற்று வரையிலும் இவர் எழுதிய விக்கிலீக்ஸ் அசாஞ்சே பரபரப்பு செய்திகளாகத்தான் பத்திரிக்கைகளில் வந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ் பத்திரிக்கைகள் விக்கிலீக்ஸ் மர்மங்களைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருந்த போது அதனைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்நது எழுதி வலையுலகை கொதிக்க வைத்தவர். 

வலையுலகில் இன்று வரையிலும் ஓட்டுக்காக, ஹிட்ஸ்க்காக அலைந்து கொண்டுருப்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் தெரியாத பல விசயங்களை சொல்கின்றார்.  உங்கள் பதிவுகள் கூகுள் ஆண்டவரிடம் போய்ச் சேர வேண்டுமென்றால் செய்ய வேண்டிய நடைமுறை சடங்குகளை எளிமையாக விளக்குகிறார்.

பிரபலத்திற்கு ஆசைப்பட்டு இடுக்கில் சிக்கிய எலியாக மாறிவிடாதீர்கள் என்று இவர் சொல்வதை பெண்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டும் இங்கே அறிமுகம் செய்துள்ளோம்.  மாதவாரியாக உள்ள ஒவ்வொரு பதிவுகளும் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டியது அவசியம்.

சில பதிவுகள் தலைமுறைகள் தாண்டியும் நிற்கும்.  சில தளங்களில் உள்ள எழுத்துக்கள் தான் நாமும் இப்படி எழுதலாமே என்று தூண்டும்.  இந்த இரண்டு பெருமைக்கும் சொந்தக்காரர் தான் சுடுதண்ணி.

தன்னைப்பற்றி சுயபுராணம் எதுவும் சொல்லாமல் எல்லாப்புகழும் என் எழுத்துக்கே என்று எழுதிய சுடுதண்ணி மறுபடியும் வந்து எழுத வேண்டும்.  வலையுலகை மீண்டும் சுடுதண்ணி போல கொதிக்க வைக்க வேண்டும்.

மீண்டும் எழுத வாங்க சுடுதண்ணி.

                                     வாழ்த்துகளுடன் தொழிற்களம்

8 comments:

பலருக்கும் விருப்பமான தளமாக சுடுதண்ணி இன்று வரையிலும் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது..

அருமையான எழுத்துகள்.. பதிவருக்குப் பாராட்டுக்கள்..

பலருக்கும் விருப்பமான தளமாக சுடுதண்ணி இன்று வரையிலும் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது..

அருமையான எழுத்துகள்.. பதிவருக்குப் பாராட்டுக்கள்..

தொழிற்களத்தின் தனது முதல் பதிவை அருமையான துவக்கத்துடன் தந்திருக்கிறீர்கள் ஜோதிஜீ..

வாழ்த்துக்கள்!!!


சுடுதண்ணீரை சுட சுட தந்திருக்கின்றீர்,,,,

//சில பதிவுகள் தலைமுறைகள் தாண்டியும் நிற்கும். சில தளங்களில் உள்ள எழுத்துக்கள் தான் நாமும் இப்படி எழுதலாமே என்று தூண்டும். இந்த இரண்டு பெருமைக்கும் சொந்தக்காரர் தான் சுடுதண்ணி.//
அனைவரும் கவனிக்க,,,

தமிழார்வத்திலும், சமூக சிந்தனையிலும் தரமான பதிவுகளை எழுதுபவர் ஜோதிஜி! அவரைப் போல் எழுதவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலர். அவர் மனதை கவர்ந்த சுடுதண்ணி மிகத்தரமான பதிவர் என்பது கட்டுரையில் புலப்படுகின்றது! நன்றிகள் ஜோதிஜி! தொழில்களத்துக்கும் மிக்க நன்றிகள்!

இவரைப் போலே பள்ளி ஆசிரியர்கள், இருந்தால் மாணவர்கள் எங்கோ போய்விடுவர் , நன்றி

வீடு சுரேஸ்குமார்

மிகக நன்றி.

செழியன் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.

இராஜராஜேஸ்வரி

நீண்ட நாட்களாக நல்ல கருத்துக்கள் அடங்கிய பதிவுகளை தேடிப்பிடித்து படித்துக் கொண்டு இருக்கீங்க. வாழ்த்துகள்.
வித்தியாசமான அலசலுக்கு அவருக்கு நிகர் நிகரே... நண்பருக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. கொஞ்சம் அதிகமாக புகழ்வதாகப் பட்டாலும் உங்கள் அன்பின் வெளிப்பாடாகவே சுடுதண்ணி எடுத்துக் கொள்கிறது :).

"விரைவில் நிச்சயம் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்" என்று பலமுறை சொல்லியிருந்தாலும், இம்முறை அழுத்தமாக.... :)..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More