அழகியல் விளையாட்டு

உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...

# அழகியல் விளையாட்டு......

ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...

# அழகியல் விளையாட்டு....

என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....

# அழகியல் விளையாட்டு..........

விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......

# அழகியல் விளையாட்டு......

5 comments:

ம்ம்ம்
அழகியல் விளையாட்டு எல்லாம் அழகு சகோ

முதல் பதிவு கட்டுரையா போடமாட்டேன் கவிதையா தான் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன தாங்க பன்றது..?

இந்த அக்காவுக்கு யாரும் பின்னூட்டம் போடாதீர்கள் சகாக்களே!!

இவங்களுக்கு கவிதை மட்டும் தான் பிடிக்குமாம், அது மட்டும் தான் தெரியுமாம்..


அதெப்படிங்க "இவ்வளவு அழக படத்தை ரசிச்சு தேடி பிடிச்சு பதிவு போடும்" போது நாம மட்டும் தன்னம்பிக்கை, ஆலோசனைனு கேட்டா பதிவு தெரியாதாமா..?

//உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...//

இப்படி ரசிக்கிற மாதிரி எழுதினா முதல் ஒபதிவு தானே அப்படினு விட்டு விடுவோமா..?

இதானால் நம்ம தொழிற்களம் பதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்

இந்த அக்காவுக்கு பின்னூட்டம் யாரும் போடாதீங்க,,,,

"உங்க கவிதை நல்லா இருக்கலாம்"ங்க அதுக்காக தொழிற்களத்தில் கவிதை எப்படி போடலாம்..?

(குறிப்பு : இந்த பின்னூட்டம் திட்டா..? பாராட்டா..?னு சரியா சொல்றவங்களுக்கு மேலே வலது புறம் உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பூ முகவரியும் இணைக்கப்படும் )

கருத்துரைக்குள் ஒளிந்துகிடக்கிறது பாராட்டு....பாராட்டினூடே தொழிற்களம் குழுவின் நிர்வாக திறனும் பளிச்சிடுகிறது...அடுத்து தொழிற்களதிற்கான களத்தில் புகுந்து கட்டுரைகளை வரவேற்க ஆசிக்கிறது...தொழிற்களத்திற்காக நல்ல ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை கொடுக்கப்போகும் நம்ம ரேவா குட்டிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

என் கவிதைக்கான பாராட்டில் கொஞ்சம் குறும்பை வைத்து கருத்திட்ட குழுமத்தம்பிக்கு,

நல்லா பயணமாகிட்டு இருக்கிற தளத்தில் என் காதல் கவிதை எதற்கு என்ற எண்ணத்தில் தான் இத்தனை நாளாய் இடுக்கைகள் எதுவும் பதியாமல் இருந்தேன்,


இருந்தாலும் ஏதோ ஒரு உந்துதல் இருக்கத்தான் செய்தது உங்கள் கருத்துரையில், அதை கருவாய் எடுத்துக்கொண்டு பயணமாகிறேன்...


மிக்க நன்றி உங்கள் உற்சாக கருத்துரைக்கு.........

அதோடு வழமைபோலவே என்னை வளர்க்கும் செய்தாலி அண்ணாவிற்கும் தமிழ் அக்காவிற்கும் நன்றிகள்...

அக்காவின் மறுமொழியும் எனக்கு ஒரு உந்து சக்தியாய் இருந்தது என்பது மறுப்பதற்கில்லை... முதல் அடியை வைக்கின்றேன் மிக விரைவில்..........

உங்கள் தளத்திலும் கருத்திட்டேன் சகோ... வாழ்த்துக்கள்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More