இப்படியும் பதிவு எழுதலாம் : வயிறாற உண்போம்
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய ளவின்றிப் படும்
who glut beyond the hunger's fire 947
Suffer from untold diseases here.
எல்லோருக்கும் என் இனிய காலை வணக்கம். என்ன இப்படியும் எழுதலாம் என்று ஒரு தலைப்பு என்று கேட்கிறீர்களா..? ஆம் தொழிற்களத்தில் என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கத் தான் நிறைய கருத்துக்கள் மூளைக்குள் புகுந்து என்னைக் குழப்பியது.

       பிறகு தொழிற்களம் குழுவிலிருந்து அருணேசிடம் பேசுகையில், நான் பேசிய சில வரிகளை கோடிட்டு காட்டி இதையும் பதிவிடலாமே என்று சொன்னார். எனக்கு அது வரை அப்படி ஒரு எண்ணம் தோன்றவே இல்லை.
       அது என்ன என்று கேட்கிறீர்களா…? காலங்காலமாக நம்மிடையே பரவிக் கிடக்கும் பழ’ மொழிகளின் சரியான அர்த்தங்களைத் தேடி பொருள் உணர்வது தான்.
       இது நிறையப் பேருக்கு தெரிந்திருந்தாலும் உலகம் முழுதும் தெரிய தொழிற்களம் மூலம் ஒரு சிறு முயற்சி.
       சமீபத்தில் நான் அனுபவத்தில் உணர்ந்த ஒரு மொழி.
வயிறார சாப்பிடனும் 
யார் வீட்டிற்கு விருந்திற்கு சென்றாலும் உணவு பரிமாறும் பொழுது, போதும் என்றாலும் இந்த மொழியைச் சொல்லி நம் வாயையும், வயிற்றையும் அடைத்துவிடுகிறார்கள். இதனால் வயிறு வீங்கித் தான் வர வேண்டியிருக்கிறது. மீறி மறுத்தால் வேறு எதெனும் தப்பாக கற்பிதம் செய்துக் கொண்டு விடுகிறார்கள்.
இது என் சிறு வயதில் ஒரளவு கடைபிடிக்க முடிந்தது. பிறகு மிகவும் கடினமாகிவிட்டது. ஏனெனில் இதனால் நம் உடல் நிலை தான் மோசமாகிவிடுகிறது. என் வீட்டில் கூட சமைத்தது அன்றே காலியாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வயிற்றை குப்பையாக்குவது நிகழ்ந்துக் கொண்டுதானிருந்தது. பிறகு சிறிது சிறிதாக வேறு வழியின்றி உணவை மறுத்து வந்தேன். என் உடல் நிலை உண்மையில் அருமையாக உள்ளது.
காரணம் இந்த பழமொழி தான் வயிறாற சாப்பிடு .வயிறு ஆறுதல் என்றால் பசியால் எறிந்துக் கொண்டிருக்கும் வயிறு ஆறும் அளவிற்கு உணவு எடுத்துக் கொண்டாலேப் போதும். இதுவே அந்த வார்த்தையின் அர்த்தம். ஆனால் அதன் பொருள் தெரியாமலே பலர் அதைப் புரிந்துக் கொள்ளாமல் வயிறு நிறைய உண்டு நோயுற்றவர்களாக மாறுகிறார்கள். எனவே தான் இன்றைய தமிழ் சமூகத்தின் பாதி மக்கள் மருத்துவமனைகளில் தங்களின் தினசரி வாழ்க்கையை கழிக்கும் நிலைமை வந்துவிட்டது.
வயிறு பசிக்கும் பொழுது ஒரு எச்சரிக்கைப் போல ஒரு எரிச்சலை நமக்கு அளிக்கும். அந்த எரிச்சலுக்கு மருந்தே நாம் உட்கொள்ளும் மருந்து என்று திருமூலரிலிருந்து திருவள்ளுவர் வரை சொல்லியிருக்கிறார்கள். அதை விட்டு மருந்தே நோய் செய்யும் பழக்கங்களை நாம் பின்பற்றிக் கொண்டு நம்மை தமிழர்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
இப்பொழுது ஆரம்பத்தில் இருக்கும் திருக்குறளைப் படித்துப் பாருங்கள். வயிற்றை ஆற்றும் அளவுத் தெரியாமல் எவன் உண்கிறானோ அவன் பெரு நோய்க்கு ஆளாவான்.
நம் தமிழர்கள் எந்த அளவு உடல் பற்றிய ஆராய்ச்சியில் மேம்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். எனவே வயிறாற உண்போம்.
வயறு முட்ட அல்ல…

4 comments:

அருமை... மருந்து அதிகாரத்தில் அனைத்தும்... மனிதர்களுக்கு சிறந்த மருந்துக்கள்...

ஆம் அதை பின்பற்றினாலே மருந்தின்றி வாழலாம்.

உண்மையிலேயே நாம் தமிழர்கள் என்பதை எப்போது உணர்வோம் என்றல் விருந்தோம்பலில் தான் நல்ல பழமொழி

உண்மையிலேயே நாம் தமிழர்கள் என்பதை எப்போது உணர்வோம் என்றல் விருந்தோம்பலில் தான் நல்ல பழமொழி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More