வயலட் நத்தை!

 இந்த வயலட் நத்தை ஒரு கடல் வாசி.  தன்னுடைய ஆயுள் முழுதையும் வெது வெதுப்பான கடலில் ஊர்ந்து நகர்ந்து கடத்துகிறது. .இதனுடைய கால் வழியாக ஒரு சளி திரவம் உற்பத்தியாகிறது. இதைக் கொண்டு  தன்னுடைய   கால்களால் தண்ணீரை வீசி ஏற்படுத்தும் குமிழ்களைக் கோர்த்து ஒரு தெப்பம் போல உருவாக்கி அதன் மேலையே லாகவமாகப் பயணிக்கிறது! இது ஜெல்லி மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை  வயலட் கூட்டு நத்தை, வயலட் குமிழ் தெப்ப நத்தை என்றும் சொல்கிறார்கள். இதனுடைய கூடு  3-4  சென்டிமீட்டர்  அளவில் மெலிதாக எளிதில் உடையும் தன்மையில் இருக்கும். ஆண் நத்தைக்கும் பெண் நத்தைக்கும் நேரடி தொடர்பு இல்லாமலே ஆணின் கருவூட்டி ஒரு கூடு வழியாக பெண் நத்தையை சென்றடைந்து கருத்தரிக்கும்.

இந்த நத்தை மீன்கள்,பறவைகள் மற்றும் கடல் உயிரினங்களில் உணவாகவும் ஆகி விடுகிறது. எந்தக் காரணத்தினாலாவது இது உருவாக்கிய தெப்பம் உடைந்து விட்டால் கடலுக்குள் மூழ்கி இறந்து விடும். மொத்தத்தில் தனி சிறப்புகள் கொண்ட ஒரு கடல் வாழ் உயிரினம் வயலட் நத்தை.

2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More