முப்பரிமாண அச்சடிப்பில் துப்பாக்கி!
படத்தில் உள்ளது முப்பரிமாண அச்சடிப்பில் உருவாக்கப் பட்ட துப்பாக்கி.

இன்றைய அறிவியல் உலகில் பர பரப்பாகி வரும் முப்பரிமாண அச்சடிப்பை கொண்டு துப்பாக்கி தயாரித்துள்ளார் ஹாவ் ப்ளூ என்பவர். துப்பாக்கியின்  பாகங்களை முப்பரிமாணத்தில் அச்சடித்துக் கொண்டு அவற்றை அசெம்பிள் செய்து துப்பாக்கியே செய்து விட்டார் மனிதர்! தனது அறிவை எல்லாருக்கும் பயன் படும்படி ஒரு இணைய தளத்திலும் துப்பாக்கி டிசைன் ஐ போட்டு விட்டார். ஆனால் இதன் சர்ச்சைக்குரிய தன்மையால் அதை நீக்கி விட்டது அந்த இணைய தளம்.. முப்பரிமாண அச்சடிப்பில் இயந்திர பாகங்களை அச்சடித்து இயந்திரங்களை உருவாக்கலாம்,  கட்டிட பாகங்களை உருவாக்கி கட்டிடம் கட்டலாம், உடல் உறுப்புக்களை தயார் செய்து மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வீட்டில் என்ன விசயங்களை தான் அச்சடிக்கலாம் என்ற விதி முறைகள் விரைவில் வரலாம்.ஏனென்றால் துப்பாக்கி போன்ற அபாயகரமானவற்றை பயன் படுத்துவதில் உள்ள  கட்டுப்பாடுகள் அப்படி.

1 comments:

நல்ல அறிவாளிதான்.இவர் அறிவின்பயன் நாட்டுக்குதேவைதான்...
ஆக்கபூர்வமாக சிந்திக்காதவன் அறிவை வைத்து....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More