காலை தேநீர் - இன்றைய சிந்தனைத் துளிகள்...

மதிப்பிற்குரிய தமிழ் பதிவர் நெஞ்சங்களே,

உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியுடன் நமது தொழிற்களம்...
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...இன்றைய நமது காலைத் தேநீரில் உங்களை தித்திக்கச் செய்யும் இன்றைய சிந்தனைத் துளிகள் இதோ....


  • உண்மை,வீரம் எங்கு இருக்கிறதோ, அங்கு அடக்கமும் மிகுந்திருக்கும   — வில்லியம்.
  • கண்டனத்தைக் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது. - காண்டேகர்
  • எதற்கெடுத்தாலும்,’கடவுளே,கடவுளே!’என்றழைப்பதைவிட உங்கள் பணியை ஒழுங்காகச் செய்து முடியுங்கள். - ப்ராங்ளின்
  • உயர்வு என்பது ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே - மாத்யூஸ்
  • பொய்த் தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது - ஹொரேஸ்
நமக்கான சிறுகதை...

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி! – ஒரு பக்க சிறுகதை!


ஓட்டலின் பின்கட்டு…
சூப்பர்வைசர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக்கொண்டிருந்தார். அண்டா தேய்ப்பது, கரண்ட் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று பெண்ட் நிமிர்த்திக் கொண்டிருந்தார்.
அந்நேரம் அங்கு வந்த சர்வர் பாபு கேட்டான்:
“ஏண்ணே இந்தச் சின்ன பையனைப்போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.”
அழகேசன் பதில் கூறினான்:
“பாபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டில படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளமில்லாம சாப்பாடு மட்டும் குடுத்தாப் போதுமுன்னு இவனை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். வேலை எளிதாய் இருந்து வாய்க்கு ருசியா சாப்படும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப்போயிடும். நான் எடுக்கிற பெண்டுல ‘படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.”
அரக்கனாய் பாபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் பாபு.
=================================
 நன்றி: குமுதம்
=================================
என்றும் உங்களுடைய வெற்றி பாதையில் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

1 comments:

அருமையான சிறுகதை

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More