எண்ணித் துணிக துணிவுடன்

தலைமுறை தாண்டியும் தொடரும் இனிமையான குடும்ப நண்பர் அவர். -அனுபவம் நிறைந்த வழிகாட்டியும் கூட..  அவர் அளித்த எண்ணித்துணிக என்ற புத்தகம் இதயம் கவர்ந்து பகிர்ந்து கொள்ளத்தூண்டியது.


மன தைர்யமும் தன்னம்பிக்கையும் வளர்த்து வாழ்வியலை சீர்ப்படுத்தும் உன்னத துளிகள்..அமிர்ததுளிகள் அவை.

இன்று...

உண்மையான அன்பை எந்தவிதமான நிபந்தனை இன்றி பரப்புவேன்.

ஏதாவதொரு காரணத்திற்காக ஒத்திவைத்த வேலையை செய்துமுடிப்பேன்.. வீட்டிலும்,அலுவலகத்திலும்.

இன்று என் உடலை ஒழுங்காகப் பரமரிப்பேன்.
குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர் நடப்பேன்
பதினைந்து நிமிடம் தியானம் செய்வேன்.
அரிசி சாதம் குறைத்து காய் கனிகளை அதிகம் உண்பேன்.

lettuce animated giflettuce animated gif

animated gifs of cabbageanimations of carrots

cute animated watermelon gif
இன்று இயற்கையை ரசிப்பேன்
காலை சூரிய உதயத்தையும், மாலை சூரிய அஸ்தமனத்தின் அழகையும் 
இரவு வானத்தையும் ரசித்துக் காண்பேன்.
night skyPicture of a vivid sunset that has turned the sky all red
ஒரு செடியின் வளர்ச்சியை ஐந்து நிமிடம் ரசிப்பேன்.


கணிணியில் ஏதாவது புதிதாக கற்பேன்.

நல்ல புத்தகத்தை பத்து பக்கங்களாவது வாசிக்கும் பழ்க்கம ஏற்டுத்திக்கொள்வேன்.

cat cats kitty kitten kittens funny animal animals gif gifs animated animation animations book read reading


வாழ்க்கை நம் மரணத்தைத் தள்ளிப் போடாது .
நாம் ஏன் வாழ்வைத்தள்ளிப் போட வேண்டும்??

நாளையை இன்றென நினைத்து வாழ். 
எதற்காகவும் எதையும் தள்ளிப் போடாதே.

ஆழமாக சிந்தித்து நோக்கினால் நமது உறவுகள் எல்லாம் மேலோட்டமானது.


தனியாக இந்த உலகத்திற்கு வந்த நாம் 
தனியாகத்தான் மறையப் போகிறோம்.


 

நாமின்றி இறைவனும் இல்லை. இறைவனின்றி நாமும் இயங்கமுடியாது.
நாமின்றி நராயணனே நீயுமில்லை காண் என்பது பக்தியின் நிலை.
பக்தர்கள் கூட்டமில்லாத திருக்கோவில்களை நினைத்துப் பார்க்க முடிகிறதா.  

நன்றே செய்வது பெரிதல்ல. இன்றே செய். இப்போதே செய்.
தைரியம் என்கிற கதவை உள்ளிருந்து மட்டுமே திறக்கமுடியும்.
Cool Bear Sleeping Images
மெத்தையை வாங்கலாம். தூக்கத்தை வாங்கமுடியாது.
உண்வை வாங்கலாம் ஜீரணத்தை வாங்க முடியாது.
வீடு வாங்கலாம். நிம்மதியை வாங்கமுடியாது. 
நிம்மதியான தூக்கம், நிம்மதியான வாழ்க்கை, ஜீரணம் எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் இவ்வுலகத்தில்.

big-animated Smiley
ஒரு ஓவியன் தனது ஓவியத்தை ரசிப்பது போல் செய்யும் தொழிலை ரசித்துச் செய்யவேண்டும்.

எண்ணங்கள். தொலை நோக்குப் பார்வைகள், தீர்மானங்கள் எல்லாம் அன்றன்று புதிதாகக் கிடைக்ககூடியவை ஆற்றின் நீரோட்டம் போல்

நாளை புதிய எண்ணங்களும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

அப்புறம் என்று ஒத்தி வைத்தால் அப்பளமாக நொறுங்கிவிடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழும் வரை வளமோடு வாழ்வோம்.!!

எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!

13 comments:

மிக மிக அருமையான அவரிகள் எதார்த்தமான வரிகள் .. தொகுத்து வழங்கிய உங்களுக்கு வணக்கங்கள் அம்மா

படங்களும் , பதிவும் மிகுந்த உற்சாகமூட்டின.
வெல்டன் ராஜி !

ஒவ்வொருவரும் நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்களை கடைப்பிடித்தால் இந்த வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்கும்.

'தினமும் மூன்று கிலோமீட்டர் நடப்பேன்'
'பதினைந்து நிமிடம் தியானம் செய்வேன்'

இவை இரண்டு போதும் நம் உடல், மன நலத்திற்கு!

பாராட்டுக்கள்!


அருமையான பதிவு....

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...

வாழ்த்துக்கள்...

சீனு கூறியது...
மிக மிக அருமையான அவரிகள் எதார்த்தமான வரிகள் .. தொகுத்து வழங்கிய உங்களுக்கு வணக்கங்கள் அம்மா

அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள்..

@ ஸ்ரவாணி கூறியது...
படங்களும் , பதிவும் மிகுந்த உற்சாகமூட்டின.
வெல்டன் ராஜி !

உற்சாகமூட்டின அருமையான கருத்துரைக்கு
இனிய நன்றிகள் தோழி..

@ Ranjani Narayanan கூறியது...
ஒவ்வொருவரும் நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்களை கடைப்பிடித்தால் இந்த வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்கும்.

'தினமும் மூன்று கிலோமீட்டர் நடப்பேன்'
'பதினைந்து நிமிடம் தியானம் செய்வேன்'

இவை இரண்டு போதும் நம் உடல், மன நலத்திற்கு!

பாராட்டுக்கள்!

பாராட்டுக்களுக்கும் அருமையான கருத்துரைக்கும்
இனிய நன்றிகள் தோழி..

@ தொழிற்களம் குழு கூறியது...
அருமையான பதிவு....

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துரைக்கும்
இனிய நன்றிகள்

சிறப்பான கருத்துக்கள் அம்மா... வாழ்த்துக்கள்...

மனதுக்கு புத்துணர்வு தரும் பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி

பதிவும் படங்களும், அருமை அம்மா , வாழ்க்கை இனிக்க தேவையானவை தானே , நன்றி

பதிவும் படங்களும், அருமை அம்மா , வாழ்க்கை இனிக்க தேவையானவை தானே , நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More