வீட்டுக்குள்ளே மரம் வளர்ப்போம்...!!!?

எனக்கு நன்றாக தெரிகின்றது உங்கள் கண்களில் இருக்கும் கோபம். அரசே வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று தான் சொல்கிறது, நீ திருநெல்வேலிக்காரனா இருக்கலாம். அதுக்காக என்ன சொன்னாலும் கேட்கணுமா நாங்க..என்று அடிக்க வராதீங்க...

  உங்களுக்குள் எழும் கேள்வி இதோ: வீட்டுக்குளே எப்படி மரம் வளர்க்க முடியும?, முயன்றால் முடியும் தானே. இன்று நாம் உலகமயமாக்கல் ,தாராளமயமாக்கல் என்ற போர்வையை மூடிக்கொண்டு இயற்கையின் கரங்களான மரங்களை எல்லாம் வெட்டி தள்ளுகிறோம்.

 இதற்கு மாற்றாக பலர் செடி வளர்ப்பை பற்றி பேசி இருப்பதை பார்த்திருப்போம் , இன்று முதல் நாம் வீட்டுக்குளே (குறும்)மரம் வளர்க்கப்போகிறோம்.
  
  இதன் தாயகம் ஜப்பான், சிலர் போன்சாய் மரங்களை பற்றி அறிந்திருக்கலாம், அதற்க்கு நான் குறும் மரம் என்று தமிழ் பெயர் இட்டுள்ளேன்.
    
சரி... வாங்க களத்தில் இறங்குவோம்.

தேவைகள்:

  * ஒரு சிறிய பூந்தொட்டி அல்லது அகண்ட பிளாஸ்டிக் பாட்டில்.
  * சிறிது மணல், கொஞ்சம் களிமண், காய்கறி கழிவுகள், தண்ணீர்.
  * கொஞ்சம் நம் உழைப்பு.

செயல்முறைகள்:

  *  முதலில் எந்த மரத்தினை வளர்க்கப்போகிறோம் என்று தீர்மானியுங்கள்.

  *  பூந்தொட்டியில் மணல், களிமண் அல்லது வண்டல் மண் 
      மற்றும் காய்கறி கழிவுகளை கலந்து தொட்டியில் நிரப்பவும்.
  
  *  மரக்கன்றினை தொட்டியில் நட்டு தண்ணீர் விடவும்.(தினமும்)

  *  வாரம்  ஒரு முறை சூரிய வெளிச்சத்தில் படும் படி ஒரு நாள்  வையுங்கள்.

  *   மூன்று மாதம் கழித்து, கன்றினை எடுத்து சல்லி வேர்களை வெட்டவும்
        (ஆணிவேரைத் தவிர).ஒவ்வொரு மூன்று  மாதத்திற்கு ஒரு முறை   
         செய்யவும் )

  *  இரு அடி அல்லது ஒரு அடி வளர்ந்ததும், ஒரு அமைப்பாக இருக்கும் படி 
      தேவை இல்லாத பக்க கிளைகளையும், இலைகளையும் வெட்டவும்         
      (மூன்று மாதத்திற்கு பின்னர்)

  *  ஒரே  வருடம் தான் உங்கள் வீட்டுக்குளே அழகாக குட்டி காட்டினையே     
      உருவாக்கலாமே.

இதோ மாதிரி குறும் மரம்:


சொல்லுங்கள், இது  எளிது தானே. கட்டாயம் செய்து பாருங்கள்.
நான் தொடங்கி விட்டேன். நீங்கள்...?

பயன்கள்:
  
  *  நல்ல பொழுதுபோக்கு தானே
  *  சுத்தமான காற்று கிடைக்குமே
  *  வீட்டுக்குளே பசுமையாய் குட்டிக்காடு இருக்குமே.
  *  மன அமைதி 

யாரெலாம் செய்யலாம்:
  
   * ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் செய்யலாம் 
   * அடுக்குமாடி குடியிருப்பில் கூட வளர்க்கலாமே 
   *  இருவரும் வேலைக்கு செல்பவர்களாய் இருந்தாலும் செய்யலாம்.
   * வளர்ந்த பின் விற்கலாம், அன்பளிப்பாக கொடுத்து அசத்தலாம்.
   

 " நம் மனதில் இருக்கும் பசுமை, வீட்டில் பரவட்டும் குறும் மரங்களாய்,
                            அப்புறம் என்ன நம் நாடும் பசுமை தானே..."

" காட்டில்  மரம் கழிந்து போனது, வீட்டில் குறும் மரம் குன்று ஆகட்டும்"

                                                           நன்றி!

7 comments:

நல்ல பகிர்வு செழியன்,,, வாழ்த்துகள்!!

போன்சாய் பற்றி இன்னும் அதிக தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள்..

வயதானவர்களுக்கும், தனிமையில் இருப்பவர்களுக்கும் போன்சாய் வளர்ப்பு ஒரு அருமருந்தாக இருக்கும்,,

கண்டிப்பாக, தனிமையில் இருக்கும் என் நண்பர்களே, வயதான இளைஞர்களே, உங்களுக்கு நான் இருக்கேன், நாம இனிமே விரிவே (குறும் மரம்) போன்சாய் மரங்களைப் பற்றி பார்ப்போம், உங்கள் சந்தேகம் எதுவானாலும் என்னிடம் கேளுங்கள்." செழியன் இருக்க பயமேன் "

அருமையான பதிவு...

எளிதான செயல் முறைகள்...

அதுவும் நாம் வைக்கும் செடி வளரும் போதும், பூ பூக்கும் போதும்... நாம் மனம் படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை...

நன்றி அண்ணா,நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்தது.மிக்க நன்றி தம்பி...இரண்டு வருடமாக எலுமிச்சையை தொட்டியில் வைத்திருக்கிறேன்.இதை பற்றி அறுசுவையிலும் கேட்டேன். யு ட்யுபிலும் தேடினேன்.கிடைக்கவில்லை.. தெளிவிற்கு நன்றி.

நன்றி அக்கா, மேலும் சந்தேகம் எனில் கேளுங்கள் , நன்றி,
இன்னும் எழுதுவேன் உங்களுக்காக ...


அன்புள்ள செழியன்,

உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இணைப்பு:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
வருகை தருக!

நன்றி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More