பெயர் சூட்டுவோம்!என்ன நண்பர்களே, புதிய வலைத்தளம் உருவாக்குவது பற்றி நேற்றைய பதிவில் படித்து விட்டு, உங்களுக்கென ஒரு தளமும் உருவாக்கி விட்டீர்களா? பாராட்டுக்கள்!

என்ன பெயர் வைப்பது என்று மூளையை கசக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று உதவி செய்து விட்டு பிறகு தலைப்புகளில் கவனம் செலுத்தலாமா?

ஒரு குழந்தை பிறந்தால் வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த, மிகவும் நாகரீகமான இதுவரை கேள்விப்படாத பெயர்களை வைக்க விரும்புவார்கள்.

அதேபோலத்தான் தனது  வலைத்தளம் தனித்துத் தெரிய வேண்டும் என்று ஒவ்வொரு வலைபதிவருக்கும் ஆசை இருக்கும். தனது ஆளுமையை தனது வலைப்பதிவின் பெயர் மூலம் வெளிப்படுத்த சிலர் விழையலாம். தவறில்லை.  சிலர் ஊர் பெயரை தங்களது அடையாளமாகக் காட்டிக் கொள்ள விழைவார்கள். சிலர் இயற்கையை துணைக்கு அழைத்துக் கொள்ளுவார்கள் பெயர் சூட்டும் போது!

சிலர் தங்கள் பெயரையே வலைத்தளத்திற்கும் வைத்து விடுவார்கள் – என்னைபோல! எல்லாமே ஏற்புடையதுதான்.

வலைதளத்தின் பெயரை ஆங்கிலத்திலும் வைக்கலாம்; தமிழ் பெயராகவும் இருக்கலாம்.

இன்னொரு விஷயம் ஒரு வலைத்தளம் அல்ல; இரண்டு மூன்று ஒரே சமயத்தில் நீங்கள் உருவாக்கலாம். எல்லாவற்றிலும் எழுதி அசத்தலாம்! 

இரண்டு மூன்று எதற்கு?

சினிமா பற்றி ஒன்று; கவிதைக்காக ஒன்று; சிறுகதைகள், கட்டுரைகள் இவற்றிற்காக என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு வலைத்தளம். புகைப்படங்கள் பதிய என்றே சிலர் வலைத்தளம் உருவாக்கி இருக்கிறார்கள்!

அப்படி இல்லையென்றால் ஒரே வலைத்தளத்தில் தனித்தனி பக்கங்களை ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒதுக்கலாம். பக்கம் என்றவுடன் ஒரேஒரு பக்கம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் பக்கம்பக்கமாக எழுதித் தள்ளலாம்.

இவற்றை எல்லாம் ஆரம்பத்திலேயே செய்ய வேண்டும் என்று இல்லை. ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு நாளடைவில் செய்யத் தொடங்கலாம்.

பல வலைபதிவுகளை தினந்தோறும் பார்வையிடுங்கள்.புதிதாக இருப்பவற்றை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

சரி, இப்போது வலைத்தளத்திற்கு பெயர் சூட்டு விழா ஆயிற்று. அடுத்து முடிவு செய்ய வேண்டியது என்ன பெயரில் எழுதப் போகிறீர்கள்? சொந்தப் பெயரா? புனைப் பெயரா? உங்களைப்பற்றி யாரும் தெரிந்து கொள்ளத் தேவையில்லை என்றால் அல்லது உண்மை பெயர் தெரியக்கூடாது என்றோ நினைத்தால் புனைபெயர் வைத்துக் கொள்ளுங்கள்.

தினந்தோறும் வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது இதையும் கவனியுங்கள்.

பொதுவாக நிறைய வலைப்பதிவாளர்கள் கூகிள் சேவை கொடுக்கும் ப்ளாக்கர்.காம்-ஐ பயன்படுத்துகிறார்கள். வேர்ட்பிரஸ்.காம் இணையதளம் தனது வலைப்பதிவாளர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது. ப்ளாக்கர்.காம் மற்றும் வேர்ட்பிரஸ்.காம் இரண்டுமே சரி சமமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அனேக வலைப்பதிவாளர்கள் இரண்டிலும் வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

உங்களிடம் ஒரு கணணி, இண்டர்நெட் இணைப்பு, எழுதுவதில் ஆர்வம், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் இவை இருக்குமேயானால் சுலபமாக வலைத்தளம் உருவாக்கலாம்.

இன்னொன்று: எந்தப் புத்தகத்தைத் திறந்தாலும் அழகழகான படங்கள் இருந்தால் கண்ணைக் கவரும் இல்லையா? நீங்கள் எழுதும் விஷயத்திற்கு ஏற்றார்போல் படங்கள் போடலாம். இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்,  அல்லது நீங்கள் எடுத்த புகைப்படங்களையும் உங்கள் வலைப் பதிவுகளில் போடலாம்.

உங்கள் திறமைகளைக் காட்ட, உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ள, உங்களது ஆர்வத்தை பெருக்கிக்கொள்ள, ஒரே கருத்தை உடைய நண்பர்களைப் பெற, உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் விசிறிகளை அடைய, மொத்தத்தில் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள வலைப் பதிவு என்னும் மிகப்பெரிய வரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது!

இன்றே தொடங்குங்கள் வலைப்பதிவில் ஒரு புதிய, இனிய பயணம்!

நாளை நிச்சயம் தலைப்புகள் பற்றியதுதான்......
12 comments:

//ஒரு குழந்தை பிறந்தால் வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த, மிகவும் நாகரீகமான இதுவரை கேள்விப்படாத பெயர்களை வைக்க விரும்புவார்கள்.//
கேள்வி படாத பெயரா??

வணக்கம் மேடம். சென்னையில் சந்தித்தது மகிழ்ச்சி. இனி ரெகுலரா உங்க பிளாக் பார்க்கறேன்.. முதல் முறை பார்த்த போதே பேச நினைத்தேன், ஆனால் உங்கள் முகத்தில் அறிவு ஜீவிக்களை தென்பட்டதால் தயங்கி பின் வாங்கி விட்டேன் ;-0

லீநீஷா (ஆணா, பெண்ணா?), சியா, வேகதர்ஷிணி (ஸ்பீட்-ஓ-மீட்டர்?)இப்படியெல்லாம் பெயர்கள்! இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

'தமிழ் ' என்றொரு வலைபதிவு. பெயர்கள் பற்றியே தொடர் பதிவு செய்திருக்கிறார். 'வியட்நாம்', 'சீனா தேவி', 'ரஷியா தேவி' என்றெல்லாம் பெயர்கள்.

படித்துப்பாருங்கள் விஜயன்.

மனிதர்களுக்கு தங்களுக்கென்று தனித்த அடையாளம் வைத்துக் கொள்ளுவதில் ஒரு பெருமை இருக்கிறது என்பது உண்மை அல்லவா?

இதைதான் தமிழில் வஞ்சகப் புகழ்ச்சி என்பார்கள்...அட்ரா சக்க!

jokes apart...எனக்கும் உங்களை பார்த்து பேச ஆசைதான்..ஆனால் அங்குமிங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்ததால் பேச முடியவில்லை.

நன்றி செந்தில்குமார்!

நான் நடிகர் சிவகுமார் எழுதிய நூலின் பெயரை வைத்துவிட்டேன் .. அதில் பாதி என்பெயரும் இருப்பதால் ...

முதல் முறையாக வலைத்தளம் துவங்கையில் ஜன்னல் வழியாக மழைச்சாரல் அடித்து கொண்டிருந்ததில் வேறு பெயர் தோண்வில்லை, அதையே வைத்து விட்டேன்

நான் கவிதை , செம்மொழி என்று பெயர் வைத்துளேன்

நான் கவிதை , செம்மொழி என்று பெயர் வைத்துளேன்

இதற்குத் தான் இயற்கையைத் துணைக்கு அழைக்கலாம் என்று சொன்னேன்.

உங்களுக்குத் தெரியுமா? Dosa365 என்று ஓர் வலைப்பதிவு தளம். Dinam Oru SAngath thamizh என்று!

இப்படி புதுமையாக பெயர் வைக்கிறார்கள். எனக்கு எதுவுமே தோன்றாததால் என் பெயரையே வைத்து விட்டேன்....ஹி.....ஹி....!வை.கோ. ஸார்!
இது தட்டா, குட்டா என்று புரியவில்லையே? கொஞ்சம் டியூப்
லைட்!

;) = மகிழ்ச்சியின் அடையாளம்
;))= இன்னும் மகிழ்ச்சி\
;)))= இன்னும் இன்னும் மகிழ்ச்சி அதுபோல :))))) ஐந்து மடங்கு மகிழ்ச்சி.

===========

;(
;((
;((( இவை அதற்கு எதிர்பத அடையாளங்களாகும். அதாவது சோகம். வருத்தம் போன்றவைகளைக்குறிக்கும் குறியீடு

===========

பொதுவாக அனைவரும் உபயோகிப்பது தான். மேடம்.

அன்புடன்
VGK

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More