நான் பதிவர் அறிமுகம் - நிலா பெண்ணுக்கு... நிலவன்பன்

''நான் பதிவர் அறிமுகம்''

''நிலாப்பெண்ணுக்கு''


நமது தொழிற்களத்தில் பல்வேறு பதிவர்களை அறிமுகம் செய்து வருகிறோம்., அந்த பட்டியலில் இன்று நாம் காண இருப்பது ''நிலாப்பெண்ணுக்கு'' .


நிலவன்பனின் வலைப்பூ தான் இந்த ''நிலாப்பெண்ணுக்கு''...

நிலாப்பெண்ணுக்கு

       

பெயருக்கு ஏற்ற வலைப்பூ...

 2011,ஆகஸ்ட் தனது முதல் பதிவை தொடர்ந்து இன்று பல நூறுகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது, நிஜத்தின் நிழல்கள் பார்ப்பவர் மனதில் ஒரு எச்சரிக்கை உணர்வூட்டும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பல சுவாரஸ்யமான பதிவுகள் ஏராளம்...

 வார்த்தையிலே ஒரு எதார்த்தம், சீண்டலிலே ஒரு நகைச்சுவை, பின்னூட்ட நண்பர்களும் பலே...பலே...  சிரிச்சு..சிரிச்சு..வயிற்று வலியே வந்துவிட்டது...

 பழமையான, காணக்கிடைக்காத புகைப்படங்கள் அருமை, விமர்சனம் பண்ணுவதிலேயும் கில்லாடி... சில சில கவிதைகள், ஆனால் நச்சென்று... தனித்தனி  பட்டியலில் (மெனுவில்) அத்தனையும்... என்ன வேண்டுமோ அதில் தேர்ந்தெடுத்து சொடுக்கிக் கொள்ளலாம்... ரசிகர்ப்படையும் ஏராளம் (செய்தி அப்படி)...

 ரசிக்கும்படியான பதிவுகள் ஏராளம், மாட்டிக்கொண்டு முழிக்கும் பதிவிலோ திரு..திரு... அதிலும் தொடர்கதை... ஒவ்வொரு பதிவும் இனிமை, படிப்பவர் மனதிலோ புதுமை...

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இவருக்கென்று ஒரு நட்பு வட்டத்தையே உருவாக்கியுள்ளார்....வரவேற்கத்தக்கது..

சமீபத்தில் இவர் பதிந்த ஒரு பதிவு அருமையான் தேடல். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பல்சுவை செய்தி கீழே இணைப்பை சொடுக்கி ரசியுங்கள்


2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!


 இன்னும் பல புதுமைகளை படைக்கவிருக்கும் நமது அருமை தமிழ் பதிவர் நிலவன்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

மீண்டும் அடுத்த அறிமுகத்தில் உங்களை சந்திக்கும் வரை 
உங்களிடமிருந்து விடைபெறுவது...
நமது தொழிற்களம்...

3 comments:

என்றும் வளர்பிறையாய் இருக்க வாழ்த்துக்கள்.... பதிவினை கண்டேன், உழைப்பின் ஈரம் தெரிந்தது , நன்றி

நிலவன்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அறிமுகத்திற்கு நன்றி :-)


செழியன், திண்டுக்கல் தனபாலன் - நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More