அமிதாப் வேடத்தில் அஜித் : சினிமா !! சினிமா !!நீண்ட இடைவிளிக்கு பின் ஸ்ரீதேவி நடிக்கும் படம்  english vinglish. இதில் அமிதாப் ஒரு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். . இந்த படம் தமிழிலும் வருகிறது .அமிதாப் வேடத்தில்  அஜீத் ஏற்று நடிக்க உள்ளார் என்பது கூடுதல் செய்தி. அதை உறுதி செய்யும் விதமாக வெளிவந்த படம் இது.

 

 சினிமா மீது இருந்த மோகத்தால் படிப்பை பாதியில் விட்டவர் விஜயகாந்த். அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். தான் படிக்காவிட்டாலும் மற்றவர்களை படிக்கவைத்து பார்ப்பதில் ஆர்வம உள்ளவர் இவர் . அதனால்தான் தன வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்களின் குழந்தைகளை அவர்கள் ஆசைப்படும் படிப்பை படிக்க உதவி செய்கிறார் .


பல படங்களில் பயங்கரமான வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் மறைந்த நடிகர் நம்பியார் . படத்தில் வில்லனாக இருந்தாலும் உண்மையில் அவர் ஒரு ஹீரோ. 25  வருடங்களுக்குமேல் சபரி மலை சென்றுவந்து உள்ளார். வெளிஊரில் படம்பிடிப்பு நடந்தாலும் அவருக்கு அவர் மனைவி சமைத்த சாப்பாட்டைதான் சாப்பிடுவார். முதலில் தன் மனைவிக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு பின்புதான் தான் சாப்ப்பிடுவார் . மற்றவர்கள் ஏதாவது கேட்டால் என் சம்சாரத்துக்கு ஊட்டறேன். அதுக்கு ஏன் வெட்கப்படனும்?” என்பார் .


தமிழில் முதல் முதலில் "தாதா சாகேப் பால்கே" விருது பெற்றவர் நமது நடிகர் திலகம் . நடிகர் திலகத்திற்கு 1997-ம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது இவருக்கு கிடைக்க உதவியதில் , முயற்சி செய்தது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் அவர்கள் .


தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இரட்டை நகைசுவை நடிகர்கள் என்றால் அது கவுண்டமணியும் , செந்திலும் தான் .

தகர டப்பா தலையா , கிரிபில்லை தலையா என விதவிதமாக திட்டுவதாகட்டும் ,

 'செய்யுரதையும் செஞ்சுட்டு திருவிழால காணாம போனவன் மாதிரி மூஞ்ச வச்சுகிறது"

பண்றதெல்லாம் பண்ணிட்டு பாரு சிலிண்டர் போல நிக்கிறான் ..

இப்படி பல காமெடி வசனங்கள் நம்மால் மறக்கமுடியாதவை .இந்த  கவுண்டமணி செந்தில் கூட்டணி இணைந்து 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை"சினிமாவுக்கு முன் நாடகத்தில் நான் பட்ட கஷ்டம், சினிமாவுக்கு வந்த பின் அனுபவித்த கஷ்டம், வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம், காசில்லாததால், கெல்லீஸ் முதல் யானை கவுனி வரை நடந்து சென்ற அனுபவம்- அந்த துன்பங்கள்தான் இன்று மனிதாபிமானம் என்று என் உடன்பிறப்புகள் பாராட்டும் நிலையைப் பெற்றுத் தந்தது".

- எம்.ஜி.ஆர்
-டாக்டர் பட்டம் பெற்றதற்கான திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில்.


2 comments:

பல சினிமா தகவல்கள்...

மீண்டும் கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும்...

தொழில்நுட்ப கலைஞர்கள்...?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More