காலை தேநீர் -இன்றைய சிந்தனை துளிகள்

உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இந்த  காலை பொழுதில் தொழிற்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இனிப்பு என்றால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்  தானே..?

இதோ இனிப்பான காலையில் இனிப்பான சிந்தனை துளிகள் உங்கள் பார்வைக்காக...

சர்க்கரை வியாதி இருந்தாலும் பரவாயில்லைங்க.. இந்த இனிப்பு அதை குறைச்சுடும் ரசிச்சு சாப்பிடுங்க...


  • ஓவ்வொரு இனிய நிகழ்வுகளுக்கும் இனிப்பு கொடுப்பதன் காரணம் இனிப்பு அனைவருக்கும் பிடித்த சுவை என்பதால் மட்டுமல்ல,, அதன்  பண்பாவது உடனடியாக உடலுக்கு தேவையான ஊட்டசத்தை கொடுத்து புத்துணர்வை உண்டாக்கும்
  • என்னதான் கசக்கி பிழிந்து ஒடித்து போட்டாலும்  கரும்பு தன் சுவையை மாற்றுவதில்லை அது போல நல்ல குடியில் பிறந்த மக்கள் தம் மேல் விழும் அவசொற்களை பொறுப்படுத்தாமல் தனது இலக்கிலிருந்து மாறமலும் செல்வார்கள் என்பது சங்க இலக்கிய குறிப்பு ஆகும்
  • வெற்றியானது பல நண்பர்களை கொடுக்கும் ஆனால்  அவர்களை அடையாளம் காண்பிக்க உதவுவது தோல்வி மட்டுமே. இனிப்பும் அப்படித்தான் அதிகமாக உண்ணும்போது திகட்டி, பாதுகாப்பு உணர்வை கொடுக்கிறது
  • ஒவ்வொரு முறை இனிப்பு சாப்பிடும் பொழுதும் அது வாயில் உள்ள அமில தன்மையை மாற்றி விடுகிறது. 
  • இனிப்பு சுவை நாக்கின் நுனிப்பகுதியில் உடனே உணரும் படி நமது சுவை நரம்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும்   அது போல உடனே புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய நாளை முழுசாக அனுபவியுங்கள். ஒவ்வொரு  சிறு விசயத்தையும் கூட ரசியுங்கள்,,,

சுவையான காலையாய் அமைய வாழ்த்துக்கள்!!

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More