வாக்காளரைப் பதிவு செய்வதற்கான பொது விதிகள் - 3 முந்தைய பகுதிகள் படிக்க
பகுதி - 1  http://tk.makkalsanthai.com/2012/09/1.html
பகுதி - 2  http://tk.makkalsanthai.com/2012/09/2.html

பணித்தொகுதி வாக்காளர்கள்

    மத்திய அல்லது மத்திய துணை இராணுவப் படையின் ஆயுதப்படையில் பணிபுரிபவர்கள் அதாவது எல்லைப்பாதுகாப்புப்படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPF), மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (CISF), இந்திய திபெத்திய எல்லை காவல்படை (ITBP), தேசிய பாதுகாப்புப் படை (NSG) பொதுச் சேமப்பொறியாளர் படை (GREF), அஸ்ஸாம் துப்பாக்கி படை மாநிலத்திற்டகு வெளியே நியமிக்கப்பட்டுள்ள மாநில ஆயுதக் காவல்படைப் பணியாளர்கள், இந்தியவுக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ள அரசுப்பணியாளர்கள் ஆகியோர் அவர்களுடைய சாதாரண இருப்பிடங்களிலிருந்து அவர்களுடைய சொந்த ஊர் வேறுபட்டிருந்தாலும் கூட அவர்களுடைய சொந்த ஊர்களில் அவர்களுடைய பெயர்களைப் பதிவு செய்வதற்கு உரிமையுடையவர்கள் ஆவர், மேற்சொன்ன பணித்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவரின் மனைவி, அவருடைய கணவருடன் வழக்கமாக வகிப்பாரேயானால், அவருடைய பெயரையும், அவருடையகணவரின் பெயருடன் சேர்த்து, சொந்த ஊரிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஊரிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு உரிமையுடையவர் ஆவார். (1950 – ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20 – (3) ஆம் பிரிவு இணைப்பு 1.2)

    வெளிநாடு வாழ் வாக்காளர்கள்  வேறு எந்தவொரு நாட்டின் குடியுரிமையைப் பெறாத, வேலை, கல்வி ஆகிய காரணங்களினால் இந்தியாவில் அவருடைய வழக்கமான வசிப்பிடத்தில் இல்லாமற்போயுள்ள அல்லது வேறுவகையில் இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியக் குடிமகன் ஒருவர், அவருடைய (ஆண்/பெண்) வழக்கமான இருப்பிடத்திலுள்ள தொகுதியன் வாக்காளர் பட்டியலில், அவருடைய (ஆண்/பெண்)
பெயரைப் பதிவு செய்வதற்கு உரிமையுடையவர் ஆவார்.(1950 –ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20யு பிரிவு இணைப்பு 1.3)

3 comments:

ரொம்ப தேவையான விளக்கம் , நன்றி , தொடருங்கள்

ரொம்ப தேவையான விளக்கம் , நன்றி , தொடருங்கள்

தேவையான செய்திகள் .. நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More