உங்களுக்கென்று ஒரு இணையதளம்.


உங்களுக்கென்று ஒரு இணையதளம்.

இந்த வசதியை கூகிள்  சைட்ஸ் என்ற இணையதளம் நமக்கு தருகிறது. (http://sites.google.com) என்ற முகவரியை பயன்படுத்தி நமக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கலாம்.


ப்ளாகர்-யை போலவே இதற்கும் கூகிள் அக்கவுண்ட் தேவைப்படுகிறது.கூகிள் அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிதாக கூகிள் அக்கவுண்ட்-ஐ உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் உள்ளே செல்லும் மாறு இருக்கும்.இதற்கு செல்பேசி எண் அவசியம் அளிக்க வேண்டும். உள்ளே நூலைந்தஉடன் (create site) என்பதில் கிளிக் செய்யவும். அடுத்த படியாக நீஙகள் நிரப்புவதற்கு படிவம் திரையில் தோன்றும் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.இப்போது நீங்கள் உருவாக்கும் வெப்சைட்டுக்கு பெயரை நீங்களே தேர்வு செய்யலாம் அது தான் உங்கள் வெப்சைடின் URL ஆகும்.
 அதன் மூலம் தான் உங்கள் வெப்சைட்டை அணுக முடியும்.அது http://sites.google.com/site/name என்றபடி இருக்கும். இதில் name என்ற இடத்தில் நாம் தேர்ந்தெடுத்த பெயர் காணப்படும். இப்போது மீண்டும் create site செல்லவும். வெப்சைட் உருவாக்க வேண்டுமென்றால் create new page என்பதில் கிளிக் செய்யவும்.


ஏற்கனவே உள்ள வெப்சைட்டில் மாற்றம் செய்ய edit page என்ற இடத்தில் கிளிக் செய்யவும். உங்கள் வெப்சைட் உருவாக்கி முடித்தவுடன் save செய்து வெளியேற வேண்டும்.இப்போது உங்களுக்கென்று ஒரு தனி இணையதளம் உருவாக்கி விட்டது.

10 comments:

//இந்த வசதியை "கூகிள் டைம்ஸ்" என்ற இணையதளம் நமக்கு தருகிறது. (http://sites.google.com) என்ற....//

கூகிள் சைட்ஸ் என்று திருத்தவும்...

நல்ல பகிர்வு..

திருத்திவிட்டேன் நண்பரே.நன்றி

நல்ல பகிர்வு, இணைய வாசிகள் பலருக்கும் பயன் தரும் , நன்றி

இதற்கும் பிளாக்கர் க்கும் என்ன வித்தியாசம் ?

நீங்கள் உங்கள் பதிவில் jump break வசதியை உபயோகிப்பதை தவிர்க்கவும், தொழிற் களத்தில் READ MORE வசதி ஏற்க்கனவே உள்ளது, நீங்கள் JUMP BREAK பயன்படுத்துவதால் மேலும் படிக்க என்ற சொல் உங்கள் பதவில் மட்டும் இடம் பெறுகிறது , கவனிக்க , நன்றி

அடுத்த உலகாளும் மொழி தமிழ் என்பதை நஆம் மனதில் ஆழப்பதிந்து செயளலாக்குவோம்.வெல்வோம் உல்கை.நன்றி.

தெளிவாக கூறி இருக்கிறிர்கள் பகர்தமைக்கு நன்றி

ஒரு சில காரணங்களால் jump break பயன்படுத்துகிறேன் நண்பரே.

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More