கூகிள்-கு 14 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்


உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான வலைப் பக்கங்கள் உருவாகின்றன.இந்த பக்கங்களிலெல்லாம் கோடான கோடி தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.திரைகடல் ஓடித் திரவியம் தேட வேண்டிய அவசியம் இப்போது இல்லை. இணையக் கடல் ஓடித் திரவியம் தேடினால் போதுமானது.அப்படிப்பட்ட வேலையைத் திறம்படச் செய்பவைதான் தேடு பொறிகள்.இந்த தேடு பொறிகள் இணையக் கடலில் மூழ்கி தேவையான தகவல் முத்துக்களை அள்ளி வந்து நம் முன்னால் கொட்டுகின்றன.அதில் தேவையான விஷயங்களை எடுத்துவிட்டு மற்றவற்றை விட்டு விட வேண்டும்.

இணையத்தில் நமக்கு தேவையான ஒரு தகவலை தேட நீனைக்கும் போது முதலில் நம் நீனைவுக்கு வருவது கூகிள் தான்.தேடும் பொறிகளில் முதன்மையான கூகிள் இன்று தனது 14 பிறந்த நாளை கொண்டாடுகிறது.

1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின்  ஆகியோரால் துவங்கபட்டது.
முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும்.

உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகிள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்கிறது.

கூகுளின் அதி விரைவான வளர்ச்சியினூடே பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகிள் இணையத் தேடலுடன், கூகிள் மெயில், கூகிள் டாக்குமெண்டுகள், கூகிள் பிளஸ், கூகிள் டாக், கூகிள் மேப்ஸ், கூகிள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் சர்வதேச முகப்புப் பக்கமான கூகிள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.

ஒரு வார்த்தையை கொடுத்து தேடினால் அதன் ஒத்த வார்தைகள் சார்ந்த பல தகவல்களையும் தேடி தருவதே கூகிளின் வெற்றிக்கு காரணம்....
Happy birthday google……….
நன்றி..........

1 comments:

நல்ல பகிர்வு பதஞ்சலி ராஜா,,

தொடர்ந்து தினம் தினம் வெளியாகும் செய்திகளை பகிர்ந்து வருவது மிக அருமையான தொடக்கம் ..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More