துவங்குவோம் புதிய பயணத்தை.... பாகம் – 1


(ஹய்...எங்கேயோ கேள்விப்பட்டது போலவே இருக்கே...சபாஷ் ரொம்ப சரியா கண்டுபிடிச்சுட்டீங்க, தொழிற்களம் குழு எனக்கு அனுப்பிய தொழிற்களம் அறிவிப்பு மின்னஞ்சலில் இருந்து வழக்கு எதுவும் தொடுக்கமாட்டாங்க என்ற தைரியத்தில் சுட்டுவிட்டேன்)

தொழிற்களம் குழு அனுப்பிய மின்னஞ்சல் உங்கள் உள்ளிடப்பெட்டியிலும் இருக்கும் என்று எண்ணுகிறேன். படிச்சிட்டு பேஷா என் பதிவிற்கு பின்னூட்டம் போடலாம் தானே!

முன்னுரை அல்ல இது என் உரை

யாராவது முன்னாடி வந்து என்னை அறிமுகப்படுத்துவீங்கன்னு பாக்குறேன் யாரும் வரமாட்டேங்குறீங்க...அதான் நானே என்னை பத்தி ஆஹா ஓஹோன்னு இல்லாம கொஞ்சம் நல்ல பிள்ளையா அடக்கி வாசிக்கலாமேன்னு....

தமிழ்ச்செல்வி அதுதாங்க என் பெயர், விண்முகில் என்னும் பெயரில் வலைப்பூவில் அழகான என் மனக்கிறுக்கல்களை கவிமாலையாய் தொடுத்து வருகிறேன். அப்படியே வலைப்பூ பக்கம் போக நினைக்கிறவங்களுக்காக http://vinmugil.blogspot.in
(அட விடுங்கப்பா இதுக்காகவெல்லாம் கோவிச்சுக்கப்படாது)

முக்கியமான விடயத்தையே சொல்ல மறந்துட்டனே ,நான் இந்த பதிவு எழுத வந்ததின் காரணமே...தொழிற்களம் ல கூப்பிட்டு பதிவு போடுங்கன்னு சொல்லிட்டாங்க...நானும் எதை பத்தி எழுதுறதுன்னு ரூம் போடாம ரூம் ல உட்கார்ந்து யோசிச்சதுல, ஒண்ணுமே....புரியல உலகத்துல...என்னமோ நடக்குது மர்மமா இருக்குதுன்னு மனசு கோரஸ் பாட ஆரம்பிச்சுட எதுக்கு வீண் விவகாரம் நம்ம பதிவுலக நண்பர்கள் இருக்கும் போது நமக்கென்ன கவலைன்னு,உங்க முன்னிலையில,பதிய,பகிர,உரையாட, கதைக்க, வம்பளக்க, கருத்துக்களை பெற்றுக்கொள்ள, செல்லக்குட்டுக்களாய் பின்னூட்டுங்களையும் பெற்றுக்கொள்ளவென, வருகிறேன் நாளை முதல்...

நட்புடன்
விண்முகில் தமிழ்ச்செல்வி
(அட இதுக்கூட நல்லாதாம்பா இருக்கு)

6 comments:

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

அட இதுகூட நல்லாத்தானே இருக்கு

//தொழிற்களம்-ல கூப்பிட்டு பதிவு போடுங்கன்னு சொல்லிட்டாங்க.//

ரொம்ப முக்கியம் இப்ப இத சொல்றது...

ஏப்பா,,, தமிழ்பதிவார்கள் எல்லாரும் நம்ம திரட்டியில உங்க இணைப்பை இணைங்கப்பா,,,

This comment has been removed by the author.

அருமையான தொடக்கம்

விண்முகில் தமிழ்ச்செல்வி
(அட இதுக்கூட நல்லாதாம்பா இருக்கு)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More