துவங்குவோம் புதிய பயணத்தை பாகம் - 4


கொஞ்சம் குளிர், கொஞ்சம் மழைத்துளியின் சாரலோடு அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் இந்த மலர்கள் உங்களின் இனிய காலையின் நல்வரவிற்காக, 

நேற்றைய தினம் தொழிற்களம் குழுவிடம் செல்ல குட்டுகள் எதுவும் வாங்கவில்லை, அநேகமாக அது அழகியல் விளையாட்டு கவிதை நாயகி ரேவாவிற்கு கிடைத்துள்ளது என்று எண்ணுகிறேன்


இது ரேவாவின் கவிதையை படிக்கவிரும்புகிறவர்களுக்காக...கவிதையும் கவிதைக்கான படங்களும் மிகவும் அருமை. தொழிற்களம் தொழிற் சார்ந்த கட்டுரைகளை நோக்கி பயணிப்பதால், விரைவில் ரேவாவிடம் சிறந்த கட்டுரைகளை நாமும் எதிர்பார்க்கலாம்.
ரேவாவின் கவிதைக்காக இந்த மலர்கள் (தொழிற்களம் குழுவிடம் செல்ல குட்டு வாங்கியதற்காகவும்)


ரேவாவின் கவிதையை நான் ரசித்தேன் அதனால் ரேவாவிற்கு என் பரிசு
ரேவாவிற்கு தொழிற்களம் குழுவின் கருத்துரை

முதல் பதிவு கட்டுரையா போடமாட்டேன் கவிதையா தான் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன தாங்க பன்றது..?


இந்த அக்காவுக்கு யாரும் பின்னூட்டம் போடாதீர்கள் சகாக்களே!!

இவங்களுக்கு கவிதை மட்டும் தான் பிடிக்குமாம், அது மட்டும் தான் தெரியுமாம்.. 


அதெப்படிங்க "இவ்வளவு அழக படத்தை ரசிச்சு தேடி பிடிச்சு பதிவு போடும்" போது நாம மட்டும் தன்னம்பிக்கை, ஆலோசனைனு கேட்டா பதிவு தெரியாதாமா..?

//உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில் 
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...//

இப்படி ரசிக்கிற மாதிரி எழுதினா முதல் ஒபதிவு தானே அப்படினு விட்டு விடுவோமா..?

இதானால் நம்ம தொழிற்களம் பதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 

இந்த அக்காவுக்கு பின்னூட்டம் யாரும் போடாதீங்க,,,,

"உங்க கவிதை நல்லா இருக்கலாம்"ங்க அதுக்காக தொழிற்களத்தில் கவிதை எப்படி போடலாம்..?

(குறிப்பு : இந்த பின்னூட்டம் திட்டா..? பாராட்டா..?னு சரியா சொல்றவங்களுக்கு மேலே வலது புறம் உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பூ முகவரியும் இணைக்கப்படும் )


முடிந்தால் நீ்ங்களும் பின்னூட்டம் திட்டா பாராட்டா என்று சரியா சொல்ல முயற்சி செய்யுங்களேன்… வலது புறம் உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பூ முகவரியும் இணைக்கப்படும்
நான் சொல்லல தொழிற்களம் குழு சொல்றாங்க…

இது என்னப்பா அநியாயம் யாரும் பின்னூட்டம் போடாதீங்கன்னு சொல்லிட்டு இவங்க மட்டும் போடுவாங்களாம்.... 

கவிதையும் தொழிற்களம் குழுவின் அழகான நீங்கலாய் உள்ளதால் புதியதாக பதிவிடுபவர்கள்…கவிதை பதிவிட்டு செல்ல குட்டுகளை வாங்காமல் இருக்கவே இங்கு குறிப்பிடுகிறேன்.

இராஜராஜேஸ்வரி (மணிராஜ்) இவ்வண்ணம் கருத்துரையிட்டிருந்தாங்க “தொழிற்களம் அறிவிப்பு ன்ற தலைப்புலஉங்க எல்லாருக்குமே வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

எப்போது ?? எங்கே ???”

எனக்கு வந்திருந்த மின்னஞ்சல்ல இராஜராஜேஸ்வரி அம்மாவின் மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு வேளை தொழிற்களம் குழுவிடம் உங்க மின்னஞ்சல் முகவரி இல்லை என்று எண்ணுகிறேன்.

உங்களுக்கு மின்னஞ்சல் வரவில்லை என்ற கவலைவேண்டாம் என் பதிவுகளில் இருந்து மின்னஞ்சல் தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

மின்னஞ்சலின் அடுத்த தலைப்பு  பிரிவுகளை சரியாக இடுங்கள் என்பதே


பிரிவுகள்

World                          உலகம்      

Tamilnadu                 தமிழ்நாடு

District                        மாவட்டம்

Politics                       அரசியல்

Cinema                      சினிமா

Sports                         விளையாட்டு

Cricket                        கிரிக்கெட்

Self confidence        தன்னம்பிக்கை 

Experience                அனுபவங்கள்

Legal                          சட்ட விளக்கம்

Classes                      பயிற்சி வகுப்புகள்

Recruitment              வேலைவாய்ப்பு

Information                தகவல்கள்

Agriculture                விவசாயம்

Mental                        மனநலம்

Physical                     உடல்நலம்

Internet                      இணையம்

Sharemarket             பங்கு வர்த்தகம்

பதிவிடும் முன் லேபில் செட்டிங்கில் ஆங்கிலத்தில் பிரிவுகளை தேர்ந்தெடுத்து வெளியிடுங்கள்

நாம எல்லாம் லேபிள்ல தமிழ்லயும் போடுறோம் அத விட்டுட்டு பிரிவுகளை ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் நாளை வேறு யாராவது குட்டு வாங்குகிறார்களா என்று பார்த்துவிட்டு வந்து கதைக்கிறேன் கருத்திட வருவீர்கள் தானே

பை மீண்டும் நாளை சந்திப்போம்

புதியவர்களுக்காக

நட்புடன்
விண்முகில்தமிழ்ச்செல்வி

7 comments:

எதனால் இப்படி ? களத்தில் பிரிவுகளை தமிழில்தானே குறிப்பிட்டுள்ளனர் ? கொஞ்சம் இந்த கைப்புள்ளைக்கு விளக்குங்க தாயி..?(please information to me)ஹி...ஹி...நாங்க தமிழனாக்கும்.( கவிதாயினி ரேவா உடனே பரிசை வாங்கிடுங்க விட்டா எனக்கு ஆனதுபோல ஆயிடப்போது ) அமைதிபடைஅண்ணன் மல்லுவேட்டிமைனர் கைப்புள்ளைக்கே அல்வா கொடுத்தஅம்மாஇவங்க.

ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... அசத்துங்க...

மிக்க நன்றி முதலில், அன்பின் மூலம் பிழை அறிகின்றேன்... இன்றே தொழிற்களம் எவ்விதமான பதிவுகளை பதிய அனுமதிக்கின்றது என்ற தகவல்களை அறிந்தேன்...

அதோடு மன்னிப்புகளும், ஓரு ஆக்க சக்தியாய் எழுத்தை நினைத்து சாட்டையடி பதிவுகள் மூலம் அடுத்த தளத்திற்கு பயணமாக நினைத்த இத்தளத்தில் கவிதை பகிர்ந்தமைக்கு....

பல பதிவுலக சகோக்களில் தொழிற்கள பதிவுகளை படித்தறிந்து மீண்டும் வருகின்றேன்......

நன்றி உங்களின் செல்ல குட்டின் பின் கிடைத்த அன்பிற்கு.........

தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

please visit: www.tamilnaththam.blogspot.com

தெளிவான விளக்கத்திற்கு நிறைவான நன்றிகள்..

இதர்க்கும் மேல் விளக்கம் வேண்டுமா நன்றி.....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More