காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

சிந்தனை என்னும் கோப்பையிலே, தலைப்பு என்னும் தேன் கலந்து, பதிவு என்னும் பால் ஊற்றி, தமிழ் எழுத்தாலே இனிமை சேர்க்கும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு தொழிற்களம் உற்சாகத்துடன் வழங்கும் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்... 


அன்பு நெஞ்சங்களே,

யாரும் திருட முடியாதது தான் நமது சிந்தனை, அத்தகைய ஆற்றலை பெற்ற நமது தமிழ் பதிவர்களுக்கு சிறு தேநீர் துளியை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி...

தேநீரை பருகுவோம் வாருங்கள்....


  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்...
  • எந்த விசயத்தையும், பிரச்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்...
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்...
  • மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்...
  • பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்...
இன்றை சிந்தனை துளிகள் கலந்த தேநீர் தங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில்...

நமது தொழிற்களம்...
 


3 comments:

இன்னுமொரு கப் கிடைக்குமா? இன்றைய தேநீரின் சுவை கொஞ்சம் கூடுதல் தான்.

அப்படியே எனக்கு ஒரு காபி.? ஹி...ஹி...காலைவணக்கமுங்க நானும் வந்துட்டேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More