காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

வணக்கம் தோழமைகளே... 

தொழிற்களம் வழங்கும் காலைத் தேநீரின் காலை வணக்கம்...

சிந்தனையை புதுப்பிக்கும் நமது முத்தான கற்பனையை, சிந்தையிலே உயிர்தெழும் எண்ணங்களை வார்த்தையாய் வடித்து, தனது பதிவின் மூலம் உயிர் கொடுக்கும் எங்கள் இனிய தமிழ் பதிவர்களே வருக...வருக...

உங்கள் பணிக்கு ஈடு, இணை வேறு எதுவும் இல்லை...

வாழ்விலே சிறந்த பணி கற்பது...அந்த கற்றலை முடிவில்லாமல் கற்றுக்கொண்டிருப்பது நம் பதிவர்கள்...

மேலும் கற்றலை தூண்டும் வகையில் பல புதிய அறிய தகவல்களை தரும் தங்கள் பணி தலைவணங்க சிறந்தது.

அத்தகைய தாங்கள் சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக இருக்க, வாருங்கள், வந்து இந்த சுவையான காலைத் தேனீரை பருகி செல்லுங்கள்...


  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
  •  ஏறாமல் கெட்டது குதிரை; கேளாமல் கெட்டது கடன்.
  •  சேற்றிலே புதைந்த யானையை காக்கையும்  கொத்தும்.
  •  நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
  •  உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா?
  •  ஆயிரம் பொன் குதிரைக்கு அரைப் பணத்தில் சவுக்கு.
ஒரு சிறு தகவல் துளிகள் இதோ...

தேசியக் கொடி!
 
 நமது தேசியக் கொடியை ஏற்றுவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமதிப்பு ஏற்படாத வகையில் கையாள வேண்டும். கொடியேற்ற வேண்டும்.
 மத நோக்கத்திற்கான காரியங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது. சட்டை உள்ளிட்ட துணிகளில் தேசியக் கொடியை அச்சிடக் கூடாது. சூரிய உதயத்தின்போது கொடியை ஏற்றி, சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கி விடவேண்டும்.
 கொடி கிழிந்த நிலையிலோ அல்லது கசங்கிய நிலையிலோ அல்லது நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றப்படக் கூடாது. தரையைத் தொடும் வகையிலோ அல்லது தண்ணீரில் மிதக்கும் நிலையிலோ கொடியைப் பறக்கவிடக் கூடாது.
 தேசியக் கொடி பறக்கும்போது அதற்கு மேல் வேறு எந்தக் கொடி அல்லது துணியும் பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடி மீது மாலை உள்ளிட்ட வேறு எந்தப் பொருளும் இடம் பெறக்கூடாது. 

நன்றி....

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...

4 comments:

ஆயிரமாயிரம் வீரர்கள்கண்டது போர்களம்.ஆயிரத்தோர் (பதிவர்கள் படை) கதைகள்கொண்டது நம் தொழிற்களம். ஐ நாங்களும்சொல்லுவோமே ? (கைப்புள்ள அனுபவபதிவராக்கும்...?)இன்றைய காலைபொழுது தேசியஉணர்வுடன் விடியட்டும்.ஜெய்ஹிந்த்.

மதுரகவி அண்ணே, வணக்கமுங்க...

நாங்க கத்துக்குட்டி அண்ணே, நீங்கல்லாம் அப்படியா??? சொல்லிக்குடுங்க...

உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது...

ம்..ம்..

கலக்குங்க...

அன்பு சகோ தனபாலன் அவர்களுக்கு வணக்கம்...

உங்கள் பின்னூட்டம் எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது, ஒரு நாள், ஒரு பதிவிற்கு நீங்கள் பின்னூட்டம் போடவில்லை என்றாலும் எதையோ இழந்து விட்டது போல் உள்ளது...

என்றும் உங்கள் வரவை நாடி...
தொழிற்களம்...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More