காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

வணக்கம் தோழமைகளே!!!

    இன்று நம்முடைய காலை தேநீர் பகுதியில் உங்களை சந்திப்பதில் பெரும் உவகையடைவது நமது தொழிற்களம்... 

உங்களுடைய ஆக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது...ஒரு கேள்வி....

     நம்மில் பல பேர் மனநிம்மதி இல்லாமல் இருகிறோம் அல்லவா? ஏன் என்று சிந்தித்தது உண்டா? 

ஒரு மனிதன் ஏன் ஏமாந்து போகிறான்??? சிந்தியுங்கள்....
அவனிடம் எதிர்பார்ப்புகள் இருப்பதால்தான் அவன் ஏமாந்து போகிறான், எனவே எதிர்பார்ப்புகளை குறைத்து, கடமையை செய்தால் ஏமாற்றம் இல்லை தானே...மேலும் நம் மனதிற்கு சரியான பாதையில் நாம் சென்றால் பயம் இல்லாமல் நிமிர்ந்து செல்லலாம்...என்ற சிறு துளியுடன், இதோ நமக்கான தேநீர் துளிகள்...

  • நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளில் இரண்டு முறை ''சரியான நேரத்தைக் காட்டும்'' அதனால் நம்பிக்கையை மட்டும் தளரவிடாதே... 
  • முடியும் என்றால் முயற்சி செய், முடியாது என்றால் பயிற்சி செய்...
  • நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார், ஓடுவது மூள் இல்லை உன் வாழ்க்கை...
  • எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும், கேட்டாலும், உன்னிடம் இருந்தாலும் அதை நீ திருத்திக்கொள்...
  • சிந்தனைக்கு கற்பனையில் உருவம் கொடு ஆனால் நிஜத்தில் உயிர் கொடு...

இன்றைய சிந்தனையுடன் ஒரு விழிப்புணர்வு குட்டிக்கதை...

சின்னது தான்...

விழிப்புணர்வு

குருடர்கள் அதிகமாக கீழே விழுவது இல்லை ஏன்????? கண்கள் இல்லையே எனும் விழிப்புணர்வு தான்.
கண் பார்வை தெரிந்தவர்கள்தான் அதிகமாக கீழே விழுகிறார்கள் ஏன்????
பார்வைதான் இருக்கிறதே எனும் அலட்சிய போக்கு....ஆக விழாமல் இருப்பது கண்களை பொறுத்தது அல்ல, அது விழிப்புணர்வு என்னும் உணர்வை  பொறுத்தது. 

''குருடன் குழியில் விழுவது குற்றமாகாது, கண் இருப்பவன் பகலில் வழுந்த குழியில் இரவில் விழுவது தான் குற்றம்.

-சாணாக்கியன்...

நன்றி தோழமைகளே...

இவ்வளவு நேரம் பொறுமையா நம்ம பதிவ படிச்சதிற்கு மிக்க நன்றி!!!

என்ன கிளம்பிட்டீங்களா? பின்னூட்டம் போட்டுப்போங்கப்பா....

என்றும் உங்கள் நினைவில்,
நமது தொழிற்களம்.15 comments:

nalla pakirvu!

vaazhthukkal!

நல்லதொரு சிந்தனை...விழிப்புணர்வு பற்றிய கதையும்,காலத்தின் அருமை விளக்கும் சிந்தனைகள்....

நன்றி சீனி அவர்களே!!!

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா..

•நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளில் இரண்டு முறை ''சரியான நேரத்தைக் காட்டும்'' அதனால் நம்பிக்கையை மட்டும் தளரவிடாதே...

நிறையப் பேர்களை சிறந்த மனிதராக வளர்த்தத்தில் இந்த வார்த்தைக்கும் பெரும் பங்குண்டு

நல்ல கருத்துக்கள்... (லேட் - Power Cut)

அப்பாடா வந்துட்டீங்களா தனபாலன் அண்ணே, எங்கே இன்னும் காணமேனு பார்த்தோம்...

மிக்க மகிழ்ச்சி...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்கல்ல...

நன்றி அண்ணே...

தொழிற் களத்திற்கு சில ஆலோசனைகள்:

சமூக வலைதளங்களின் மூலம், பல தமிழர்களை ஈர்க்கலாமே.
உறுப்பினர்கள் சேரும் வசதியை வைக்கலாம்
நீங்கள் மின் அஞ்சல் வழியாக பதிவுகளை பெரும் முறையை தங்கள் தளத்தில் வைக்க வில்லை.
காரணம்:
நூலகத்திற்கு வருபவர்கள் எல்லாம் எழுத நினைப்பதில்லை.
வாசிக்கும் சிந்தனை கொண்ட பலரை நான் சந்தித்து இருக்கிறேன் அதனால்...
பதிவர்களே, நீங்கள் உங்கள் ஆலோசைனைகளையும் தெரிவியுங்கள்,
நன்றி

வணக்கம் செழியன்,

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி, ஆனால் இந்த சேவையை நமது தொழிற்களம் ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டது. மின்னஞ்சலில் பெறும் வசதியும் உள்ளது. நமது தொழிற்களம் வலைப்பூவில் அந்த வசதி உள்ளது. Tag என்னும் பகுதியில் உங்களது மின்னஞ்சல் முகவரியை ஒரு முறை பதிவு செய்தால் போதும், இது தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும்.
முயற்சி செய்து பார்க்கவும்.

ஆலோசனைகளுக்கு நன்றி,

உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

தொழிற்களம்.

நல்லா இருக்கு வாழ்த்துகள்.

பார்த்தேன் , பலருக்கும் தெரியும் படியாக வெளிப்படையாக வைத்தல் மேலும் நலம். யாருமே அதில் இருக்கும் என நினைக்க மாட்டார்களே, நீங்கள் வைத்துள்ள ஓடும் பட்டை தோற்றம் அழகு, ஆனால் வேகம் அதிகம்,மேலிருந்து கீழே வரும் படி அல்லது மெதுவாக நகர்தல் நலம்.
நன்றி தொழிற் களமே

மின் அஞ்சல் மூலம்தினசரி காலை வேலையில்எனது மொபைலுக்கு வந்துவிடுகிறது.தினமும் தினசரி பேப்பரை வாசிக்கும் வண்ணம் உணர்வு ஏற்படுகிறது.பல அருமையான கட்டுரைகள் வாசிக்க முடிகிறது.
தொழில் களம் குளுவிற்கு எனது நன்றிகள் பல.

பின்னோட்ட வார்த்தையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.மொபைல் மூலம்டைப் செய்து வெளியிடுவதால் வார்த்தை கொண்டு வர தெரிய ,முடிய,வில்லை.

Arif .A கூறியது..//
நன்றி சகோ,,, தொடர்ந்து தொழிற்களத்தில் பங்களியுங்கள்,,

எதிர்பார்ப்புகளை குறைத்து, கடமையை செய்தால் ஏமாற்றம் இல்லை

ஏமாற்றாத பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More