காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்

இளஞ்சூரியன் எழுந்து வர, இசைபாடும் காகங்களுடனும் காலை இளந்தென்றலுடனும் தொழிற்களம் நட்புடன் தங்களை வரவேற்கிறது.

     உங்கள் காலை தேநீரின் இனிப்பில் நீங்கள் லயித்திருக்கும்போது உங்களுக்கான நாங்கள் படைக்கும் நம்பிக்கை தேநீர், நமது எண்ணங்கள் எப்படியோ, அப்படியே நமது வாழ்வும் வசப்படுகிறது. உலகப்புகழ் தன்னம்பிக்கை எழுத்தாளர் நெப்போலியன் ஹில் எழுதிய  You can work your own miracles நூலில் இருந்து  தொழிற்களம் வாசகர்களுக்காக சில நம்பிக்கை துளிகள்.
    ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு விரும்பத்தகாத சூழ்நிலையும், ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு உடல் வலியும் அதேயளவு நன்மை தரக்கூடிய விதையையும் கொண்டிருக்கிறது. வலியில் இருந்து விடுபடவும், வெற்றியைக் காணவும் இது உனக்கு அவசியம்.
      உணர்ச்சியின் வசப்படாதீர்கள் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். விருப்பப்படாத சூழ்நிலையை உங்களால் தவிர்க்க முடியாது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஒருநாள் அதைவிட பரிதாப நிலையை அடைய நேரலாம்.
    நீங்கள் வாகனத்தை ஓட்டும்போது பாதுகாப்பான வாகன ஓட்டுநரா, அல்லது உங்கள் வாழ்வையும், அடுத்தவர் வாழ்வையும் நாசமாக்கும் சிக்கலான நபரா என்பதை உங்கள் மனோபாவம்தான் தீர்மானிக்கிறது. வாழ்வில் உங்களுக்குக் கிடைத்தது நிம்மதியா அல்லது ஏமாற்றமா என்பதையும் உங்கள் மனோபாவமே தீர்மானிக்கிறது.
     உங்கள் பிறப்பையும், இறப்பையும் உங்களால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். இந்தச் சிறப்புரிமை உங்கள் வாழ்வை சுவர்க்கமாக்க இறைவன் தந்த மிகப்பெரிய சக்தியாகும். மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை உலகில் வாழும்போது என்ன மனோபாவத்துடன் வாழ்ந்தீர்கள் என்பதே தீர்மானிப்பதால், உங்கள் மனதை கட்டுப்படுத்த வேண்டியது உங்கள் கடமையே.
    எண்ணங்களுக்கு ஈடான பலனை வெளிப்படுத்த மனம் எப்போதும் தவறுவதில்லை. ஏழ்மையை சிந்தியுங்கள், ஏழ்மையில் வாழ்வீர்கள், செல்வத்தை சிந்தியுங்கள் செல்வத்தில் வாழ்வீர்கள். எண்ணங்களின் தன்மைக்கு ஈடான விளைவுகள் வாழ்வில் தொடரும்.

இன்றைய தினம் ஆக்கப்பூர்வமான நாளாக அமைய வாழ்த்துகிறோம்.

2 comments:

உண்மை தான்.. எண்ணம் போல் தான் வாழ்வு

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More