காலை தேநீர் - சிந்தனை துளிகள்

      எத்தனை நாள் விடியல்களை  நாம் சந்தித்தாலும் ஞாயிறு காலை மட்டும்  மிகவும் சிறப்பு வாய்ந்தது.  எல்லோருக்கும் பிடித்ததும் கூட தான்.  இன்னும் கொஞ்ச நேரம்னு நிம்மதியா இழுத்து போர்த்திட்டு தூங்கலாம். 

   காலையில் நேரமாக  எழுந்திரித்தாலும் கூட வீட்டில் உள்ளாவர்கள் அனைவரிடமும்  நிம்மதியாக ஒரு வார்த்தை கூட பேச முடியபடி இந்த இயந்திர உலகில் சிக்குண்டு கிடக்கின்றோம். அப்படியாக ஞாயிறு மட்டும் நாம் நமது குடும்பத்தோடு சேர்ந்து செலவிடும் போது வார நாட்களில் படும் வேலை சுமையை மறக்கச் செய்கிறது.இன்றைய காலை தேநீரின் சிறப்பு சிந்தனை துளிகள்

  • உறவுகளிடம்  பேசும் போது கண்களில் அன்பை காட்டுங்கள். அவ்வப்போது மன்னிப்பையும், நன்றியையும் சிறு வார்த்தைகளால் சொல்லி பாருங்கள் உறவில் விரிசல் ஏற்படாது. 
  • குழந்தைகள் பெரும்பாலும், உங்களுடன் நேரம் செலவளிக்க விரும்புவார்கள். அவர்களிடம் உங்கள் மேலான்மை செல்லுபடியாகது. நீங்களும் குழந்தைகளாக மாறிவிடுங்கள்
  • மனைவி / கணவன் உறவில்  ஆறுதல்கள் அடிக்கடி தேவைப்படும். இருவரும் தங்கள் கைகளை இணைத்து அடிக்கடி அன்பு பாராட்டுங்கள், உனக்காக நானும் எனக்காகவே நீயுமாகவாய் பிறந்திருக்கின்றாய் என்றும் கூறுங்கள்
  • பெரியவர்களை தனிமையில் விடாதீர்கள். அவர்களுக்கு கவனிப்பு தேவைப்படும். தனிமையை போக்க அவர்களுக்கு அடிக்கடி ஏதவது  பரிசு அளியுங்கள். அது சிறிய பரிசாக இருந்தாலும் அவர்களின் தனிமையை உங்களுடன்  பகிர்ந்துகொள்ளும்
  • நண்பர்களிடம் பாராட்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகில் நண்பர்கள் இல்லை என்றால் ஊக்கம் இழந்து பூமியும் தான் சுற்றுவதை என்றோ நிறுத்தியிருக்கும்.
இன்றைய பொழுது இனிய நாளாக அமைந்து உற்சாகமாய் விடுமுறையை அனுபவியுங்கள் தோழர்களே!

நட்புடன்
தொழிற்களம் குழு

5 comments:

நல்ல சிந்தனை துளிகள்... அதுவும் ஐந்தாவது சிந்தனை அருமை... வாழ்த்துக்கள்...

அருமையான சிந்தனை துளிகள், ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடைபிடிக்க வேண்டியவைகள் வாழ்த்துக்கள், தொடருங்கள் இப்பணி.

உறவுப்பாலம் பலப்பட சொன்ன வழிகள்
கவனத்தில் கொள்ளத் தக்கன. நன்று.

தொழிற் களம் குழுவே,
என் தளத்தில் எப்படி "செழியன்... எப்படிப்பா..? ம்ம்ம் ம்ம்ம்,,," ஒரு கருத்தினை பதிவிட்டு உள்ளீர்கள், ஏன் புரியல?

This comment has been removed by the author.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More