காலை தேநீர் - இன்றைய சிந்தனைத் துளிகள்

தொழிற்களம் குழுவிற்கு பேராதரவை நல்கி வரும் தமிழ் பதிவர் நெஞ்சங்களுக்கு நமது காலை தேநீரீன் காலை வணக்கம்...கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று ஒரு பழமொழி உண்டுல்லவா?

அதற்கேற்ப நமது சிந்தனையை தூண்டும் சில  சிந்தனை துளிகள் இதோ...நமக்காக...
  • ஆர்வம் இல்லாத இடத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை...
  • பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள்...
  • சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் தேனீக்களுக்கு அழுவதற்கு நேரமில்லை...
  • சிந்திப்பதானால் நிதானமாகச் சிந்தியுங்கள்., செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள்.,  விட்டுக்கொடுப்பதானால் மனநிறைவோடு விட்டுக்கொடுங்கள்...
  • தவறை ஒப்புக்கொண்டு அதை திருத்திக்கொள்பவன் வெற்றி பெறுவது நிச்சயம்...

சிறுகதை

கதை சொல்லி தைரியமூட்டுங்கள் -உங்கள் குழைந்தைகளுக்கு நல்ல கதைகளை சொன்னதுண்டா? யோசித்து பாருங்கள்...
ஓய்வு நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்கு சிறு சிறு கதைகள் கூறுவதும் அதன் விளக்கத்தை கூறுவதும் வழக்கமாக வைத்து கொள்ளுங்கள். அவ்வாறு கூறும் போது நிறைய புது புது விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு நல்ல வாய்பாக அமைகிறது.
குழந்தைகளுக்கு பொதுவாக நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தையும் அவர்கள் புரிந்த சாதனைகளையும், மக்களின் வாழ்கை தரத்தையும் கூறலாம், அதுமட்டுமில்லாமல் நம் நாட்டிற்காக உழைத்த இந்திரா காந்தி அம்மையார், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நைடிங்கேல் அம்மையார், அப்ரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங், நாராயணமூர்த்தி, போன்ற தலைவர்களின் வாழ்கை வரலாற்றை கூறலாம். கதைகளை கூறுவதன் மூலம் குழைந்தைகளுக்கு மனதைரியம் உண்டாகும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே தோன்றும்.
பெற்றோர்கள் கதை சொல்லும் முன் குழந்தைகளின் மன பக்குவத்தை புரிந்துக் கொண்டு அதற்கேற்றார் போல கூறுவது குழந்தைகளுக்கு கேட்கும் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உங்கள் பள்ளிப்பருவ மற்றும் கல்லூரியில் பயிலும் போது நடந்த மறக்க முடியாத அனுபவங்கள், கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளிடம் பரிமாறிக் கொள்ளலாம்.
நீங்கள் வாழ்ந்த காலத்தையும், உங்கள் மூதாதையர் வாழ்ந்த காலத்தையும் அவர்கள் புரிந்த அதிசய நிகழ்வுகள் பற்றி விளக்கும் போது ஆர்வம் அதிகரிப்பதோடு கவனிக்கும் திறன் கூர்மையாகும். நாளடைவில் குழந்தைகள் சுயமாக யோசிக்கும் திறன் வளர்வதோடு கற்பனை திறனும் அதிகரிக்கிறது.
நம் குழந்தை எதுவாக ஆக வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றார்கள். உங்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட சிறப்பாக வளர வேண்டுமென்று நினைகின்றீர்களா, அப்படியானால் அது உங்கள் கையில் தான் இருக்கிறது. இன்றைய கனவு நாளைய சரித்திரம். 
============================
நன்றி., தினமலர்..
என்றும் உங்கள் வெற்றி பயனத்தில்...
நமது தொழிற்களம்..
இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமைய ஆண்டவனை வேண்டுகிறோம்...


6 comments:

சிந்திய துளிகள் அத்தனையும் தேன்துளிகள் !

அப்பா, அம்மா இருவரும் வேலைக்போகும் இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் பொறுப்பு தாத்தா பாட்டிகளுக்குத் தான்.

அவர்களும் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி இருந்தால்....?


நல்ல சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்துள்ளது காலைத் தேநீர்

தோழி ஸ்ரவாணிக்கு நன்றி...

இப்பொழுதெல்லாம் கணினி தான் கதை சொல்கின்றன பிஞ்சுகளுக்கு , நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More