காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்

அன்பார்ந்த தமிழ்  நெஞ்சங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான காலை தேநீரின் காலை வணக்கம்...


ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை கொண்டது. ஆனால் அதில் நாம் எவ்வளவு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். நம் ஒவ்வொரு மணித்துளியும் நம் செல்வங்கள்...எனவே அதை வீணடிக்காமல் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வோம் என்ற சிந்தனையுடன் இதோ காலை தேநீர் நமக்காக...
  • நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்  உன் உள்ளத்தை திறக்கிறாய் அதனால் கவனமாய் இரு...
  • அறிவாளி,வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வான். புத்திசாலி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வான்!
  • நாளை நமக்காக காத்து  இருக்கிறது! சோர்வை அகற்றி நம்பிக்கை வளர்ப்போம்!
  • நம்பிக்கையுள்ளவர் ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு வாய்ப்பை காண்கிறார்! நம்பிக்கை இல்லாதவர் ஒவ்வெரு வாய்ப்பிலும் ஒரு சிரமத்தை காண்கின்றார்!
  • முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும்  வரை அல்ல! நீ நினைத்த செயல் முடியும் வரை!


சிந்தனையுடன் ஒரு குறுந்தகவல் இதோ...

ஒரு தந்தையின் கடிதம்:


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை 
சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். 
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் 
பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்....

எங்கோ படித்தது....

இன்றைய தினம் வெற்றிகரமான தினமாக அமைய வாழ்த்துக்கள்...

என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More