நான் பதிவர் அறிமுகம் : திண்டுக்கல் தனபாலனும் பாட்ஷா ரஜினியும்

   தினம் ஒரு பதிவரை நான் பதிவர் அறிமுகம் பகுதியில் இனி தினந்தோறும் வாசியுங்கள் சகாக்களே!!!

பின்னூட்டத்தில் மேலும் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்..


   பதிவுலகில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்  கொண்டவர்களில் மிகவும் சிலரே உள்ளனர். ஆர்வம் மிகுதியாலும், பொழுதுபோக்காகவும் வேகமாக பதிவு எழுதிய பலர் இன்று காணமல் போய்விட்டனர். என்னதான் பதிவு எழுதுவதற்காக அதிகம் யோசித்து மெனக்கெட்டாலும் யாருக்குமே அடையாளம் தெரியாமல் ஓரமாய் இருப்பவர்களும் அதிகம் பேர்.

இங்கே நாம் ரசித்த நபர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.

எந்த பதிவிற்கு சென்றாலும் அவர் பின்னூட்டம் எப்படியும் இருக்கும். பதிவுலகில் நீங்கள் இருக்கீன்றீர்கள் எனில் நிச்சயம் இவர் பின்னூட்டம் இல்லாமல் உங்கள் பதிவு முழுமை பெறாது.

திண்டுக்கல் தனபாலன்   http://dindiguldhanabalan.blogspot.com 

'' என்னதான்  நீங்க பன்னுறீங்க, ஆனா பின்னூட்டம் போட்டே பின்னுறீங்க '

    2011 அக்டோபர் மாதம் முதல் இவர் பதிவுலகில் காலடியை எடுத்து வைத்து தொடங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 250 உறுப்பினர்கள் இவரை பின்தொடர்கிறார்கள் இத்தனைக்கும் இன்றுவரை ( பதிவிடும் நாள் 01.09.2012 சனி) 41 பதிவுகளை மட்டுமே பதிந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஒவ்வொரு பதிவிற்கு சென்று முழுமையாக படித்து சரியான பின்னூட்டங்களை இடுகிறார். மற்றவர்களை உற்சாகப் படுத்துவதன் மூலம் நாமும் உற்சாகம் அட்டையலாம் என்பதே இவ்வரது வார்த்தைகளில் வெடிக்கும் முத்துக்கள்,

சில சமயங்களில் பின்னூட்டம் போடுவதில் இவருக்கு சிக்கல்களும் இருக்கிறதாம். அப்படிப்பட்ட நேரங்களில் இவர் பாட்ஷா ரஜினியை போல உடனே ஆட்டோவை திருப்பிடுவாராம்.

தனக்கு மிகவும் மரியாதைக்குரிய நபர்களில் மிகவும் முக்கியமானவர்கள் 
வை.கோபாலகிருஸ்ணன் அய்யா மற்றும் வலைச்சரம் சீனா அய்யாவை குறிப்பிடுகிறார்.

தனது மகளே எனது முதல் வாசகி என்று செல்ல மகளையும் வலைத்தளத்தை எழுதப் பழக்கி வருகிறார்.

அனைவரிடமும் அன்பாக பழகும் விதமும் மற்றவர்களிடம் மரியாதையைக் காண்பிக்கும் விதத்திலும் இவருக்கு நிகர்  இவரே. 

வலைப்பதிவுகளின் வலிமையை உலகம் உணர வேண்டும் என்பதற்கு தன்னால்  ஆன உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு என்று தொழிற்களத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இவர் போட்ட பதிவுகளில் தெய்வம் இருப்பது எங்கே என்ற பதிவை எழுவது தான் இவருக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்ததாம்.  

எப்படியோ பதிவுலகில் திண்டுக்கல் பூட்டிற்கும், தனபாலனுக்கும் என்றுமே தனி சிறப்பிருக்கும்.

33 comments:

பின்னூட்டங்கள் தான் பதிவர்களை சிறப்பாக எழுதசெய்கின்றது..! அந்த வகையில் திரு.தனபாலன் அவர்களுக்கு அன்பு கலந்த நன்றிகள்..!

நான் பதிவர் அறிமுகம்

மிக அருமையான தொடக்கம்...திண்டுக்கல் தனபாலன் அவர்களை கருத்துரை கவிஞர் என சொல்லாம்

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

unmaiyaana thakaval !

baalan sako!
arumaiyaana manithar avar pinnoottangalileye ariya mudikirathu!

நல்ல மனிதரின் நல்ல அறிமுகம்.
வாழ்த்துக்கள்.

நல்லதொரு நண்பரை பற்றிய நல்ல பகிர்வு! இவரது உற்சாக பின்னூட்டங்கள் பதிவரை மேலும் எழுத தூண்டுகிறது! நல்ல அறிமுகம்!

இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

தனபாலன் அவர்கள் தந்த குறிப்புபடி மொத்தமாக பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவித்தால் போதுமாம்.

நன்றி!!

தமிழ் அமுதன், ஆட்டோமொபைல்,இராஜேஸ்வரி, சீனி,

நண்டு@நொரண்டு இன்று தான் முதன் முறையாக நமது தளத்தில் பின்னூட்டம் போட்டிருக்கீங்க..

இது தான் திண்டுக்கல் தனபாலன் மேல் பதிவர்கள் கொண்டிருக்கும் பற்றுதலுக்கு உதாரணம்..

நன்றி!! நண்டு@நொரண்டு, சுரேஷ்,,,

சிறந்த முறையில் உற்சாகப்படுத்துபவர், வாழ்த்துக்கள் அண்ணா

செழியன்,, நீங்களும் கூட சின்ன தனபாலன் தான்..

திண்டுக்கல் தனபாலன் வாழ்த்துகள்.

பின்னூட்ட சிகரம் ,
உடன் பிறவா சகோதரன் தனபாலன், அவர்களின் அன்புக்கு என்றும் அடிமை .
வாழ்த்துக்கள் சார் .
ஒரு பதிவருக்கு பின்னோட்டம் என்பது பெரிய விருதுக்கு சமம் .தொடருங்கள் சார். உங்கள் பின்னூட்ட உற்சாகம் என்றும் தாருங்கள் ,,,,,,

/* தொழிற்களம் குழு says: 1 செப்டம்பர், 2012 4:07 pm Reply
செழியன்,, நீங்களும் கூட சின்ன தனபாலன் தான்.. */

ஹா ஹா . ஏன் இப்படி, கோவம்னா பேசி தீர்த்துக்கலாம், நன்றி

தனபாலன் சார் ..தமிழ் வலைப்பதிவு கருத்துரை மன்னர் என்றே சொல்லலாம் ..

திரு தனபாலன் அவர்கள் ஒரு உன்னதமான மனிதர். என் பதிவில் பின்னூட்டம் போட வந்த மூத்த பதிவர் மேலிருக்கும் இவரது பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு இவரைப் புகழ்ந்து எழுதி இருக்கிறார் என்றால் இவரைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

மிகச் சரியான ஒரு பதிவரின் அறிமுகத்துடன் தொடங்கியுள்ள 'நான் பதிவன்' பெரிய பெரிய சிகரங்களைத் தொடும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

பதிவுலகில் நான் பார்த்த சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர் வாழ்த்துக்கள் பாஸ்

பின்னோட்டம் தந்து பல பதிவர்களுக்கு ஊட்டம் தந்து கொண்டிருக்கும் தனபாலன் அண்ணனுக்கு என் பாராட்டுக்கள்.பதிவர் திருவிழாவில் இவரை நேரடியாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

அறிமுகப்படுத்திய தொழிற்களம் குழுவிற்கும், வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றி...

நாடோடிகள் படத்தில், ஒரு குழுவுடன் பேசியவுடன் பேனர் வைத்து விடுவார்கள்... அது போல் இந்தப் பதிவு 2.15 pm-க்கு பப்ளிஷ்... தொழிற்களம் குழு-Super Fast (நேற்று முழுவதும் இங்கே கரண்ட் கட்... அதனால் கருத்து சொல்ல முடியவில்லை) தொழிற்களம் குழு விரைவாக செயல்பட்டு சிறப்பாக அமையும் என்கிற முழு நம்பிக்கையுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... இதே படத்தில் வருவது போல் :

நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன்... இதைவிட வாழ்வில் என்ன பெரிதாக சாதித்து விட போகிறோம்...?

நன்றி... வாழ்த்துக்கள்...

என்னோட நீண்ட நாள் ஆசை திண்டுக்கல் தனபாலன் சார் பற்றி பதிவு எழுத வேண்டும் என்று ஆனால் நேரம் சரியாய் அமையவில்லை நான் எழுத நினைத்ததை பாதி நீங்கள் எழுதி விட்டிர்கள் :)- நன்றி இன்னும் சில நாட்களில் பார்க்கலாம் என்னுடைய தளத்தில் திண்டுக்கல் தனபாலன் சாரின் உண்மை முகம் தோலுரித்து காட்ட பட போகிறது .p

எனக்கே முதலில் ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவரால் இத்தனை தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் போட முடிகின்றது. பெரும்பாலும் தான் எழுதிய விமர்சனத்திற்கு இவர் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்பாரா என்று கூட யோசித்து இருக்கேன். ஆனால் தன் கடன் செய்து கிடப்பதே என்பதாக இவர் விமர்சித்துக் கொண்டே இருப்பது ஆச்சரியமே. சில விமர்சனங்கள் முத்தாய்ப்பாக இருப்பதை கவனித்துள்ளேன். இலக்கியவாதி, லட்சியவாதி என்பதைப் போல இவர் ஒரு பின்னூட்டவாதி என்றே சொல்லலாம். நன்றி தனபாலன். உங்கள் முக தரிசனத்திற்கு. தொழிற்களத்திற்கும் எனது நன்றி.

கருத்துரை மன்னருக்கு கருத்துரை இட்ட அனைவருக்கும் நன்றி!!

தொழிற்களம் குழுவுடன் தாங்கள் அனைவரும் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டுகிறோம்,,,

ஜோதிஜீ,,
உங்களை பதிவர் சந்தில் இருந்த போது திரும்பியதும் அழைக்கிறோம் என்று கூறி இருந்தோம்.. மறக்க வில்லை.. உங்களுடன் வெகு நேரம் சந்திப்பு அமைய வேண்டும் என்பாதல் சில பணி சுமைகளை முடித்துவிட முயற்சித்து வருகிறோம்..

நமது திருப்பூர் அலுவலகத்திற்கு இந்த வாரத்தில் உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம்,,


நன்றி!!

:) எனக்கு இந்த அறிமுகம் ஐடியா ரொம்பப் புடிச்சிருக்கு :) :)

நிச்சயம் நானே தக்க சமயத்தில் உங்களை அழைத்து விட்டு வருகின்றேன் உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி.

தகுதியானவரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்..!

அனைவருக்கும் கருத்தளிக்கும் அருமையான மனிதர் .
ஒவ்வொரு வரியை பொறுமையுடன் படித்த பின் கருத்தளிப்பார் .
அவர் மென்மேலும் வாழ வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

நல்ல மனிதர்..முக்கியமாக அணி பிரிந்து பின்னூட்டம்,வோட்டு போடும் பதிவுலக அரசியலுக்கு அப்பார்ப்பட்டு ,அனைவருக்கும் பின்னூட்டமிட்டு பக்குவமிக்க மனிதராக தன்னை அடையாளப்படுத்தியவர்.நல்ல ஆரோக்கியமான செய்திகளை தருபவர்..
நல்ல பதிவு..பதிவர்..நன்றி

என் நண்பரை அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி

தனித்தனியாக நன்றி சொல்லாமல் மொத்தமாக நன்றி சொல்ல சொல்லிருக்கிறார் திண்டுக்கல்லார்,,,

நன்றி தமிழ், சீனி சுப்ரமணியன் சார்,,

படைப்பாளி மற்றும் மோகன் அண்ணா,,

அனைவரிடமும் அன்பாக பழகும் விதமும் மற்றவர்களிடம் மரியாதையைக் காண்பிக்கும் விதத்திலும் இவருக்கு நிகர் இவரே.


வாழ்த்துக்கள் அண்ணோ

ஆச்சர்யப்படுத்தும் உற்சாகமான பதிவர்களில் இவர் முதன்மையானவர். மிக நல்ல மனிதர் என்று நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன். சமீப காலமாக நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க டெம்ப்ளேட் கமெண்ட்டுகளை தவிர்த்து விட்டு அருமையான கமெண்ட்டுகளை இடத் தொடங்கி இருக்கிறார். வாழ்த்துகள்...!

நண்பருக்கு வாழ்த்துக்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More