Latest News

நான் பதிவர் அறிமுகம் : பேருந்து ஓட்டுனர் பரமேஸ்வரன்

   தமிழகத்தில் பேருந்து  ஓட்டுனர்களுக்கென்ற சில விதிமுறைகள் இருக்கிறது. சாலை பாதுகாப்பு என்பது மிக முக்கியம். இதில் ஓட்டுனர்களுக்கு தான் பெரும் பங்கு இருக்கின்றது. 

இங்கே நாம்  சாலையோட்டிகளின்  உயிருக்கு கருத்தில் கொண்டு இவரை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. அனைத்து பேருந்து ஓட்டுனர்களையும் மிஞ்சி இவர் மிக மிக வேகமாக செல்வதால் எக்கச்சக்கமான பின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேருகிறது. இனியும் இவர் இவ்வளவு வேகமாக ஓட்டினால் பதிவுலகமே திரண்டு வந்து பெரும் போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிடும்.   அட யாரும் அவசரப்பட்டு அவரை திட்ட ஆரம்பிச்சுடாதீங்க.. நாம், அவர் பதிவிடும் வேகத்தை தான் சொன்னோம் பேருந்து ஓட்டும் வேகத்தை அல்ல..



      ஓரு அற்புதமான மனிதர். திரு.பரமேஸ்வரன்  அய்யா அவர்கள். கொங்கு தென்றல் என்ற வலைப்பூவை தற்போது எழுதி வருகிறார். கிட்டத்தட்ட 2011 ஜனவரி மாதத்திலிருந்து இவர் பரமேஸ் டிரவர் என்ற வலைப்பூவில்  பதிவுகளை எழுதி வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணி புரிகிறார். இவர் பேருந்து மேலும், வலைப்பதிவுகள் மேலும் தீராத காதல் கொண்டவர்.

சாலை விதிகளை அனைவரும் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றினாலே பெரும்பாலான  விபத்துக்களை குறைக்க முடியும் என்று சாலை ஓட்டிகளுக்கு  தனது வலைப்பூ மூலம் அறிவுறுத்தி வருகிறார்.

தொழிற்களம் குழு இவரை நான் பதிவர் அறிமுகத்தில்  தெரியப்படுத்துவதற்காக நிச்சயம் பெருமை படுகிறது. காரணம் இவரிடம் பேசிய, போது இவரது உடனே பழகும், உதவும் குணமும், எப்போதும் துரு துருவென இயங்கும் தன்மையுமே ஆகும்.

மனிதனுக்கு அடிப்படை தேவைகள் எனப்படுவது,
  • உண்ண உணவு,
  • உடுத்த உடை,
  • இருக்க இருப்பிடம் என்று மற்றும் அல்லாது
  • போக்குவரத்து என்னும் நான்காவது அடிப்படை தேவை இருக்கிறது. என்று புதிய கோணத்தில் சிந்தித்ததும், அதன்படியே போக்குவரத்து குறித்து இவர் பதிந்து வரும் பதிவுகளும்  என்றுமே   படிப்பவர்களுக்கு ஆசானாக வீற்றிருக்கும்.

சாலையில் விபத்துகள் ஏற்படுவதற்கான பல்வேறான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் எளிய நடையில் சொல்வது இவரது தனித்தன்மை.

இன்னும் அதிகமான தகவல்களை இவரது தளத்தில் நீங்கள் பார்க்கலாம். இவரை போன்ற சமூக நோக்கத்துடனே தமிழில் பயணிக்கும் அனைவரையும் தொழிற்களம் குழு உற்சாகப்படுத்திடவே இந்த நான் பதிவர் அறிமுகம் பகுதி உருபெற்றிருக்கிறது.

நமது தொழிற்களம் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

இந்த பகுதியில்  அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு பதிவர்களையும் கொடுக்கப்பட்டிருக்கும் இனைப்பின் வழியாக சென்று அவர்களது தளத்தில் இணைந்து, பின்னூட்டம் இட்டும் உற்சாகப்படுத்துங்கள். அது நீங்கள் அவர்களுக்கு தரும் மிகப்பெரிய சொத்து.

இன்னும் சுவையான தகவல்களுடன் நாளை வேறொரு சிறப்பு பதிவர் பற்றி காண்போம்

தொழிற்களம் குழு

Follow by Email

Recent Post