Latest News

நான் பதிவர் அறிமுகம் - சென்னை பித்தன்

  விண்ணுலகும் வியக்கும் வண்ணம், இந்த மண்ணுலகில் தங்களது திறமையான பதிவுகள் மூலம் பல புதுமைகள் படைத்து, அதே சமயம் அழிந்து வரும் நமது பாரம்பரியத்தை போற்றிகாக்கவும் மறக்காத நமது தமிழ் பதிவர் நெஞ்சங்களுக்கு நமது தொழிற்களம் குழுவின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

      படைத்தல் என்பது மிகவும் சிறப்பான ஒன்று, உடலுழைப்பைக் கூட எளதாக தர முடியும் ஆனால் ஆக்கம் என்பது அவ்வளவு எளிதல்ல. நமது சிந்தனை, மனம், எண்ணம் போன்ற அனைத்தும் ஒரே திசையில் செல்லும் போது தான், நம்மால் பல சிறப்பு மிக்க பதிவுகளை படைக்க முடிகிறது. 



                        
    அத்தகைய சிறப்பான பதிவுகள் பலவற்றை பதிந்து, பதிவுலகில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தைப்பிடித்த மதிப்பிற்குரிய அய்யா, சென்னை பித்தன் அவர்களை தான் இன்று உங்களுக்கு தொழிற்களம் குழு மிகவும் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது...




                            

   சென்னை பித்தன் அய்யா அவர்கள் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தனது பதிவுகளை படைத்து வருகிகறார். தனது பதிவின் மூலம் பல நெஞ்சங்களை கொள்ளைகொண்டவர். உரிமையுடன் பழகும் குணம் உடையவர்.

   இவரது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் மற்றும் சக பதிவர்களின் பதிவை படித்து பின்னூட்டம் இடுவதையும் தவறாதவர்...

   இவரது உடல்நிலை காரணமாக தனது படைப்பை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளார்.இதனால் இவரின் சக பதிவர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.  இவரின் உடல் நலம் விரைவில் நலமடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.

    வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த உங்க பதிவுகள் மீண்டும் நம் பதிவுலகிற்கு கிடைக்க வேண்டுகிறோம்....

    ஆண்டவன் இவருக்கு நோய் நொடி இல்லா, ஆனந்த வாழ்க்கை நல்க பிராத்திக்கிறோம்...கனத்த இதயத்துடன் விடைகொடுக்கிறோம் மீண்டும் புதுப்பொழிவுடன் வருவீர்கள் என்று...

வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறோம்...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்.

Follow by Email

Recent Post