நான் பதிவர் அறிமுகம் - வேடந்தாங்கல் (இது பல்சுவை பதிவுகளின் சரணாலயம்)

எண்ணம் போல் ஏற்றம்... ஏற்றத்தை சரி செய்தால் வாழ்வின் உச்சத்தை அடைவது சத்தியமே...

இன்று நாம் அறிமுகப்படுத்தும் பிரபல பதிவர், ''வேடந்தாங்கல்-கருண்...''


                                    http://sakthistudycentre.blogspot.com/2012/08/repost_31.html

''வேடந்தாங்கல்'' இது வலைப்பூவின் முகவரி...  
கருண், சக்தி கல்வி மையத்தில் அசிரியராக தனது பணியை தொடங்கி இன்று பல மக்களின் இதயத்தில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்துள்ளார்... ,

வேடந்தாங்கல் என்றால் நம் நினைவிற்கு வருவது பறவைகளின் சரணாலயம், ஆம் நிஜத்தில் இந்த வலைப்பூவும் ஒரு சரணாலயம் தான்...

பல்வேறு ரசனைகளின் பிறப்பிடம் தான் நம்ம வேடந்தாங்கல்... சின்ன சின்ன குறும்புகள், பள்ளி மாணவர்களின் ஏடாகூட கேள்விகள், அரசியல் விளையாட்டுக்கள், பொதுவான தலைப்புகள் என எல்லா வயதினருக்கும் ஏற்ற பல்சுவை பதிவுகள் இவர் வலைப்பூவில் உள்ளது...

அனுபவத்திற்கென்று பல பதிவும்,     அரசியலுக்கென்று  பல பதிவும்,
அறிந்து கொள்வோமா என்று பல பதிவும்...  ஆதங்கம், கவிதை, சமூகம், தன்னம்பிக்கை, நகைச்சுவை, நிகழ்வுகள் மற்றும் முதல் சூப்பர் ஸ்டார் என்று பெரும்பகுதியை தன்வசப்படுத்தியுள்ளார்...

பின்னூட்டத்திற்கும் குறைவில்லை....இவர் அடிக்கும் நகைச்சுவைக்கும் அளவில்லை...

அனுபவித்து, ரசித்து, தனது ஒவ்வொரு பதிவையும் நம் மனதில் ஆழமாக பதிய வைக்கிறார்...

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஆணி அடித்தது போல் உள்ளது...

நிச்சயம் பதிவுகள் வாசிக்கும் எவராயிருந்தாலும் ரசிகனாய் மாறிவிடுவது சாத்தியமே...

உங்கள் பணிகள் மேலும் சிறக்க நமது தொழிற்களம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

பதிவுகள் அத்தனையும் அருமை சகோ....

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...8 comments:

நல்ல பதிவாளர்களைஅறிமுகம் படுத்தும் தொழிற்களம் குழுவினற்கு நன்றி....

பல பதிவுகள் பயனுள்ளவை... பல்சுவை பதிவர் வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்பு சகாக்களே.... வணக்கம்...

தங்கள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி...

என்றும் உங்கள் வரவை நாடும்,
நமது தொழிற்களம்...

வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஹா ஹா என் தம்பியை அறிமுகப்படுத்தி நீங்க பெரிய ஆளாகிடலாம்ன்னு பார்க்குறீங்களா?!

அன்பு கருண்,
தொழிற்களத்திற்கு நல்வரவு.
உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்.

வரிகளுக்கு நன்றி......

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More