நான் பதிவர் அறிமுகம் : இவருகூட வாங்க பிளாக்லாம்

கிட்டத்தட்ட 4,13,367 பக்க பார்வைகளை தாண்டி   ரொம்ப அழக (கொங்சம் கம்மிதான்) ஓரு முரட்டு பார்வையோடு இன்றைய நான் பதிவர் அறிமுகத்தில்  தனது ஆக்கங்களால் நிரப்புவது அனந்து என்று அழைக்கப்படும் திரு.அனந்தநாரயணன் அவர்கள் தான்.

இவர் வாங்க பிளாக்லாம் என்ற வலைப்பூவை கட்டந்த 2010  ஆம் வருடம் மே மாதத்தில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறார்.

தினம் தினம் தவறாது நண்பர்களின் பக்கங்களுக்கு சென்று  பின்னூட்டம் மூலம் தனது கருத்துக்களை பறிமாறி கொண்டாலும் இவரது வலைப்பூவிலும் தவறாமல்  பதிவுகளை சுட சுட அறங்கேற்றியும் விடுகிறார்.
சினிமா, இலக்கியம், அரசியல், விளையாட்டுனு மனுசர் வட்டம் போட்டு பின்னுகிறார். ஆனால் இவர் மட்டும் எந்த வட்டத்துக்குள்ளேயும் எளிதில் சிக்கிவிடுவதில்லை..

என்ன இவரது ஒரே வருத்தம் இவரை முதன்  முதலில் பார்ப்பவர்கள் வாங்க பழகலாம்னா உடனே கோபம் வந்துடும்.

பின்னே  நானும் எத்தனை தடவதாங்க சொல்றது..
என்னோட வலைப்பூ வாங்க ப்ளாக்லாம், பழகலாம் இல்லை..

இருந்தாலும் செல்லமாக சொல்லிவிட்டு  உடனே பழகி விடுவார்.

சென்னையில் தனது செல்ல குழந்தை மற்றும் அன்பு மனைவியுடன் வசித்துவரும் அனந்துவிற்கு  இன்னொரு முகமும் உண்டு.

இவர் ஒரு சிறந்த குறும்பட இயக்குனரும் கூட.


அட ஆமாங்க அருமையான குறும்படத்தை இவரே இயக்கி தயாரிக்கவும் செஞ்சிருக்கிறார். இதைத்தொடர்ந்து சில விளம்பர பட வாய்ப்புகளும் இவரை  தேடி வந்திருக்கிறது.  வங்கியின்  வேலை நேரம் முடிந்த பின்பு கிடைக்கும் நேரங்களில் வலைப்பூவில் பதிந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 40 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்து யு -டியுப்பை கலக்கிகொண்டிருக்கிறது இவரது நல்லதொரு வீணை செய்வோம் 2012 என்னும் குறும்படம்

வலைப்பூ தான் எனது சிறந்த நண்பன். எனக்கு இந்த உலகத்தை எப்படி பார்க்கனும்னு வலைப்பூவில் எழுதும் போதுதாங்க புரிந்தது. என்கிறார் சிரித்தபடி..

சென்னையில் பதிவர் விழாவில் தனது அலைப்பேசியில் கவிதையை பதிந்து அதை பார்த்து வாசித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படி  எதையும் வித்தியாசமாகவும் ஆழமாகவும் நோக்கும் இவரை அறிமுகப்படுத்துவதில் தொழிற்களம் மகிழ்வடைகிறது.

தொழிற்களத்தின் சிறப்பு  அறிமுகத்தில் அறிமுகம் ஆகின்றவர்கள்னா சும்மாவா..?

வாழ்த்துக்கள் சகோ,,,


8 comments:

உங்கள் தளத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி ...உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் ... அன்புடன் அனந்து ...

அனந்து அண்ணா வாழ்த்துக்கள், உங்கள் குறும்படம் பார்த்து விட்டு சொல்கிறேன், நன்றி

முதல் வரியில் ஒரு எழுத்து பிழை உள்ளது, கவனிக்கவும், நன்றி

ப்ளாக்கிருவோம்.

அவரைப்பற்றி தெரியாத தகவல்கள்... சென்னை திருவிழாவில் பேச முடியவில்லையே என்று வருத்தம்...

மிகவும் அடக்கமான வீணை.
வாழ்த்துக்கள் அனந்து.

இவரது வலைதளத்திற்கு போயிருக்கிறேன். பின்னூட்டம் போட்டதில்லை. இப்போது போட்டு விடுகிறேன்.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
உங்களுடன் சேர்த்து ப்ளாக நாங்க ரெடி!

வாழ்த்துக்கள் நண்பரே

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More