தன்னம்பிக்கை மனிதர்.


தன்னம்பிக்கை மனிதர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு தேவாலயத்தில் பாதரியார் ஒருவர் “ நாம் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.அனைவரும் கை தூக்கினார் ஒரு சிறுவனைத்தவிர.

உடனே  பாதரியார் அந்த சிறுவனிடம் “தம்பி சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம் செல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார்.அதற்கு அந்தசிறுவன்
“சொர்க்கத்தையும் விரும்பவில்லை நரகத்தையும்
விரும்பவில்லை,அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான்.

உடனே கோபம் கொண்ட பாதரியார் இந்த சிறிய வயதில் உன் மனம்       கடவுளைவிட பதவியை தான் விரும்புகிறதா? என்று கூறினார்.

அந்தசிறுவன் அமைதியாக இங்கே கருப்பு இன மக்கள் நாயைவிட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியாக இருக்கும் என்று கூறினார்.அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்து காட்டினான்.அந்த சிறுவன் தான் அமெரிக்கா ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

செருப்பு தைப்பவற்கு மகனாக பிறந்து அமெரிக்கா ஜனாதிபதியான லிங்கனின் தன்னம்பிக்கை நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது.

8 comments:

ஆமாம் சகோதரே...நன்றி ..

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான மனிதரை பற்றி சொன்னிர்கள் நன்றி

மேலும் அவர் தன் மகனின் வாத்தியாரிடம் " இவனுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கற்று கொடுங்கள் என்றாராம் .
அருமை , தொடருங்கள் அண்ணா, நன்றி

நன்றி செழியன்...உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நன்றி.

நன்றி சீனி அண்ணா.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More